தொடர்கள்
பொது
" ஊட்டி பாரம்பரிய சின்னங்களை தகர்க்கும் அதிகாரிகள் " - ஸ்வேதா அப்புதாஸ் .

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அழகிய மலை நகரம் தான் ஊட்டி .

2025000911345269.jpg

நவின நீலகிரியை உருவாக்கின ஜான் சல்லிவனின் பேத்திகள் நேரில் ஊட்டிக்கு வந்து ஊட்டி 200 வருடத்தை சிறப்பித்து சென்றனர் .

20250009113523501.jpg

மலைகளின் அரசியான ஊட்டியில் உள்ள பாரம்பரிய சின்னங்களை யாரும் தொடக்கூடாது என்பது இருந்தாலும் இந்த மாவட்டத்திற்கு வந்து போகும் நிர்வாக அதிகாரிகள் எதோ செய்யவேண்டும் என்று ஏகப்பட்ட தேவையற்ற மாற்றங்களை செய்து வருவது வருத்தமான விஷயம் .

20250009113653893.jpg

ஊட்டியினுள் நுழைபவர்களை வரவேற்கும் விதமாக சேரிங்கிராசில் ஆடம் பவுண்டைன் அழகாக அமைந்துள்ளது .

1888 ஆம் வருடம் கவர்னர் .டபுள் .யூ .ஆடம் நினைவாக அமைக்கப்பெற்ற நீரூற்று .

2025000911383218.jpg

முக்கோண வடிவில் உள்ள பூங்கா நடுவில் அமைக்கப்பெற்ற நீரூற்று ஒரு பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க பட்டு வருகின்றது .

கடந்த 12-10-2024 விகடகவி மின் இதழில் " ஆதாம் நீரூற்றை டோன்ட் டச் ' என்ற கட்டுரை பிரசுரித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது .

20250009113901766.jpg

இதே சேரிங் கிராசில் பிரிக்ஸ் பள்ளியின் எதிரில் உள்ள அழகிய கார்டனை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சின்னாபின்னமாகியுள்ளனர் தேசிய நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகமும் , காவல்துறை நிர்வாகமும் என்பது வருத்தமான ஒன்று .

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறும் போது ,

20250009113952892.jpg

" ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவியா தண்ணீருவை நேரில் சந்தித்து சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஆடம் பவுண்டனையும் அந்த முக்கோண கார்டனை ஏகாரணத்தையும் கொண்டு தொடக்கூடாது என்று எடுத்து கூறியும் தற்போது பிரிக்ஸ் ஸ்கூலுக்கு எதிரே உள்ள நூற்றாண்டு பூங்காவை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஜே சி பி கொண்டு சின்னாபின்னமாக்கி வருவதை நிறுத்த வேண்டும் அடுத்து இவர்களின் அழிவு வேலை ஆடம் பவுண்டன் மேல் என்பது உறுதியாகியுள்ளது .

20250009114019485.jpg

ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மிக மோசமான வேலையை செய்து வருகிறது இதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடந்தை என்பது வேதனையை அளிக்கிறது .எங்கோ இருந்து வரும் அதிகாரிகள் ஊட்டியின் அழகை கெடுக்க வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள் " என்று குரல் எழுப்பியுள்ளார் .

20250009114807402.jpg

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் சற்று ஆவேசமாகவும் வருத்தமாகவும் பேசினார் ,

20250009114047557.jpg

" என்னத்த சொல்வது இங்கு வரும் கலெக்டர் மாற்றும் எஸ் .பி . உள்ளூர் வாசிகளை கேட்காமல் தங்களின் இஷ்டத்திற்கு நூற்றாண்டு நினைவு சின்னங்கள் பூங்காக்களை அழிப்பதை எப்படி கண்டுக்காமல் இருக்க முடியும் .

ஏற்கனவே 2018 ஆம் வருடம் அப்பொழுது இருந்த எஸ் பி முரளி ரம்பா ஆதாம் நீரூற்றை வட்ட வடிவமாக மாற்றவும் இடத்தை அப்புறப்படுத்த முயற்ச்சி எடுக்க நாங்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க அன்றைய கலெக்டர் இன்னோசென்ட் திவ்வியா மக்கள் கருத்தை கேட்க நேரடியாக ஆதாம் நீரூற்றுக்கு முன் கூட்டம் நடத்தி எதிர்ப்பு குரல் வலுக்க அந்த ஐடியாவை நிறுத்தினார் கலெக்டர் .

இப்பொழுது உள்ள கலெக்டர் மற்றும் எஸ் பி முக்கோண வடிவில் உள்ள ஆதாம் நீரூற்றை மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உடன் தேசிய நெடுஞ்சாலையை காரணம் காட்டுகிறார்கள் .

20250009114123632.jpg

இந்த ஆதாம் நீரூற்று மற்றும் கார்டன் சாலையில் உள்ள பூங்காவின் அளவை குறைக்க எடுக்கும் முயற்சி இந்த அதிகாரிகள் எதோ வாஸ்து பார்த்து செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது .

ஊட்டியின் வரலாற்று மற்றும் வரவேற்பு சின்னமான ஆதாம் நீரூற்றை தொட்டால் நாங்கள் உயர்நீதி மன்றத்திற்கு செல்ல இருக்கிறோம் .இது மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் வேண்டாத வேலை" என்று சொல்ல வேண்டும் என்கிறார் .

ஊட்டி எம் .எல் .ஏ கணேஷ் , கூறுகிறார்.

20250009114154571.jpg

"மாவட்ட நிர்வாகம் ஒரு எம் .எல் .ஏ என்று எதுவுமே கேட்பதில்லை வரலாற்று சின்னமான ஆதாம் நீரூற்றை யாரும் தொடக்கூடாது அதே போல எந்த பூங்வையும் மாற்றியமைக்கும் ஐடியாவை கைவிடவேண்டும் ." என்று கூறியுள்ளார் .

ஏற்கனவே ஆபத்தான மரங்கள் என்று யூத் ஆஸ்டல் தொடர்போல இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு இப்பொழுது வெறிச்ஜோடி கிடக்கிறது .

மரங்கள் வெட்டப்பட்டால் அந்த இடத்தில் மாற்று மர கன்றுகள் நடுவது தான் நியாயம் .

20250009114458913.jpg

ஊட்டியின் பாரம்பரிய சின்னங்கள் பூங்காக்களை அழிக்காதீர்கள் என்பது மலைகளின் அரசியின் ஆதங்கம் .