தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20250010173421671.jpeg

லாலு கட்சியுடன் இரண்டு முறை கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

இப்போ பிஜேபியுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன் என்று சொல்ல மாட்டீங்களா !!

பிரியங்கா கன்னத்தை போல் சாலை அமைப்பேன், டெல்லி சட்டசபை பாஜக வேட்பாளர் உறுதி.

பாரதிய ஜனதாவில் எந்த பெண்ணுக்கும் அந்த மாதிரி கன்னம் கிடையாது போல் தெரிகிறது ?

மூன்றாவது மொழியாக எதை படிக்க வேண்டும் என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் துரை வைகோ.

அப்புறம் மாத்தி பேச மாட்டீங்களே !!

அமலாக்கத்துறை ரெய்டு திமுக துவண்டு விடாது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

ஆமாம் ஆமாம் பழகிப்போச்சு !!

முதல்வர் ஸ்டாலினை கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் என்ன அவசர நிலையா அமுலில் இருக்கிறது கே.பாலகிருஷ்ணன் சி பி எம்.

அதான் எல்லாத்தையும் கேட்டுட்டீங்களே அப்புறம் என்ன ?

உத்திரபிரதேசத்தில் திருந்தி வாழ முன்வந்த அறுபது குற்றவாளிகள்.

அரசியலுக்கு போவாங்க போல தெரியுது !!

ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் செல்வப் பெருந்தகை.

அதாவது திமுக தயவில் !!

ஏழைகளின் எதிரி பாஜக கெஜ்ரிவால் கருத்து.

அது உங்க பங்களாவை பாத்தாலே நல்லா தெரியுது !!

கவர்னர் உரையில் திமுக அரசு சுய விளம்பரம் தேடி உள்ளது எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

நீங்களும் அதேதான் செய்தீங்க !!

உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர் என் ரவி வெளியேறினார்.

அவரோட பழக்க வழக்கம் இதுதானே !!

அதிகளவு பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழகம் ஆளுநர் உரையில் பெருமிதம்.

அதிக அளவு பாலியல் பலாத்காரமும் இங்குதான் இதையும் ஆளுநர் உரையில் சேர்த்து இருக்கலாம் !!

யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதற்றம் அடைவது ஏன் எடப்பாடி கேள்வி.

திரும்பத் திரும்ப கேட்டால் டென்ஷனாயிடுறாங்க !!

ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை இருக்கிறது ஜி கே மணி பேட்டி.

கட்சிக்குள்ள தானே தலைவரே ?

திமுகவின் வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. மாநில செயலாளர் சண்முகம்.

வேற வெளிச்சம் தேடுறாங்க போல தெரியுது !!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமுல்.

இனிமேல் எந்த சாரும் உள்ளே நுழைய முடியாது ரொம்ப ஸ்ட்ரிக்ட் !!

2026-இல் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதி விடுவார் டிடிவி தினகரன்.

போன மாசம் அதிமுக பாஜக கூட்டணி அவசியம் என்று சொன்னீர்கள் அப்போ அது வேற வாயா ?

பாஜக வெற்றி பெற்றால் நல திட்டங்கள் நிறுத்தம் இல்லை பிரதமர் மோடி உறுதி.

இல்லைன்னா நிறுத்தி விடுவாராம் !!

தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் டிஜிபி.

ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு போகவே இல்ல போதுமா !!

அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்.

சும்மா டெல்லியை சுற்றி பார்க்க தான் போறாரு அமலாக்கத்துறை சோதனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.