தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 94 - பரணீதரன்

20241008165435564.jpeg

போன வாரம் பேசியது போலவே இந்த வாரம் சிற்றிலக்கியங்களில் சிலவற்றை தொடை நயங்களுடன் பார்ப்போம். இன்று குறவஞ்சி இலக்கியத்தில் இருந்து சில பாடல்களை பார்ப்போம். பொதுவாக குறவஞ்சி இலக்கியத்தை பழந்தமிழ் நூல்கள் குறத்திப்பாட்டு என்று அழைக்கின்றனர். இதற்கு குறம் என்ற பெயரும் உள்ளது. குறவஞ்சி இலக்கியம் பொதுவாக நாடக நடையில் உள்ளது. ஒரு கடவுளோ அல்லது ஒரு அரசனோ நகர்வலம் வரும் பொழுது அவனைப் பார்த்து மயங்கும் தலைவிக்கு குறத்தி வழியாக நற்சொற்கள் சொல்லப்பட்டு, அந்த தலைவனின் புகழை பாடுவதே குறவஞ்சி ஆகும். நமக்கு பொதுவாக தெரிந்தது திருக்குற்றால குறவஞ்சி. நம்முடைய சிறிய வயதில் தமிழ் பாட புத்தகத்தில் குறவஞ்சியில் இருந்து சில பாடல்களை படித்திருப்போம். அதில் ஒன்றிரண்டை கீழே கொடுத்துள்ளேன். இதிலுள்ள சில பாடல்கள் தமிழ் சினிமாவிலும் வந்துள்ளது. இந்த பாடல்களிலும் பலவகையான தொடைகளை திரிகூடராசப்பக் கவிராயர் கையாண்டு உள்ளார்.

20241008165512191.jpeg

திருக்குற்றலாக் குறவஞ்சி

பாடியவர் : திரிகூடராசப்பக் கவிராயர்

பாடப்பட்டவர் : குற்றலாத்தில் வீற்றிருக்கும் திருக்குற்றாலநாதர் (திரிகூடநாதர்)

பாடப்பட்டதன் நோக்கம் : திருக்குற்றாலநாதரின் திருக்கோவிலில் பாடியது

பாடப்பட்ட பாடல்கள் : 119 (119 பாடல்கள்)

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயம் செயம் என்றாட

இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட

இரு கொங்கை கொடும்பகைவென்றனம் என்று குழைந்து குழைந்தாட

மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே

எதுகை தொடை :

ன்று என்றாட

சிம்பு பும்பொடு

மோனை தொடை :

செங்கையில் செயம்

டை ரு

கொங்கை கொடும்பகை

ந்து யின்றனளே

இயைபுத் தொடை :

என்றா கலந்தா குழைந்தா

இரட்டை தொடை :

கலின் கலின்

செயம் செயம்

குழைந்து குழைந்தாட

ஆதிபராசக்தி என்ற பழைய தமிழ் திரைப்படத்தில் உள்ள “சொல்லடி அபிராமிஎன்ற பாடலில் மேலே உள்ள செய்யுளை நடுவில் பாடி இருப்பார்கள்.

எதுகை தொடை, மோனை தொடை, இயைபுத் தொடை மற்றும் இரட்டை தொடை ஆகிய நான்கையும் கீழே உள்ள செய்யுள்களில் போல்ட் (Bold) செய்து உள்ளேன்.

கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே

கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே

எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே

யமலை என்னுடைய தமையன்மலை அம்மே

சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே

தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே

செல்இனங்கள் முழவுகொட்ட மயிலினங்கள் ஆடும்

திரிகூடமலை யெங்கள் செல்வமலை அம்மே

பொதுவாக இன்றைய 90களில் பிறந்த தலைமுறையினர் மேலே உள்ள செய்யுளை மனப்பாடப் பகுதியாக படித்து இருப்பார்கள்.

டக் காண்பது பூம் புனல் வெள்ளம்

டுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

ருந்தக் காண்பது மின்னார் சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து

தேடக் காண்பது நல்லறம் சீர்த்தி

திருக்குற்றாலத் தென் ஆரிய நாடே

மேலே உள்ளது போல சில பாடல்கள் குறவஞ்சியில் உள்ளது. இவற்றை தழுவியே கர்ணன் படத்தில் வரும் நாணிச் சிவந்தன மாதலார் கண்கள் என்ற பாடல் எழுதப்பட்டுள்ளது.

தொண்டாடும் சுந்தரர்க்குத் தோழர் திரிகூட வெற்பில்

திண்டாடி நின்ற சிங்கன் சீராடும் சிங்கிதனைக்

ண்டு ஆடித் துள்ளாடிக் கள் ஆடும்தும்பியைப் போல்

கொண்டாடிக் கொண்டாடிக் கூத்து ஆடிக்கொண்டானே

மேலே உள்ள பாடல் வல்லின எழுத்துக்களுக்கான நா நெகிழ் பயிற்சிக்கு (Tongue Twister) பயன்படுத்தப்படுகின்ற ஒரு பாடல்.

அடுத்ததாக நாம் பார்க்கப் போகின்ற குறவஞ்சி செய்யுள் கவிக்குஞ்சர பாரதியுடையதாகும்.

20241008165535450.jpeg

அழகர் குறவஞ்சி

பாடியவர் : கவிக்குஞ்சர பாரதி

பாடப்பட்டவர் : திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் (அழகர்)

பாடப்பட்டதன் நோக்கம் : கள்ளழகர் திருக்கோவிலில் பாடியது

பாடப்பட்ட பாடல்கள் : 133 (133 பாடல்கள்)

தொய்யிலேந்திய முலைமா மடந்தமோச்

சுகத்திலே வசித்தேன் பஞ்சுகித்து நாப்

பையிலே துயின்ற திருவழகர்

துயிலும் இல்லை பசியும் இல்லை

பசித்தாலும் எள்ளளவு புசிப்பும் இல்லை

ளநிறக் கருங்கூந்தல்

ளச்செவ்வாய்க் கலைமகள்

ங்ம் கலிங்கம்ங்ம் கொங்ம்

சிங்ம் தெலுங்கம்

ருகு பெருகு கோடையில்

நீர் பெருகக் கண்ட மான்கள்போல ஓடினார்

மேலே உள்ள செய்யுள்கள் முழுமையான செய்யுங்கள் இல்லை. ஒன்று இரண்டு வரிகளை மட்டுமே எடுத்து இங்கே எடுத்துக்காட்டாய் கொடுத்துள்ளேன்.

இது போலவே பல குறவஞ்சி செய்யுள்கள் நமது இலக்கியங்களில் பரவி கிடக்கிறது. அவற்றுள் சில இலக்கியங்களின் பெயர்களை மட்டும் கீழே கொடுத்துள்ளேன் :

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

அழகர் குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி

தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி

பிரகதீசுவரர் குறவஞ்சி

திருவாரூர்‌ தியாகராசக்‌ குறவஞ்சி

ஞானக்‌ குறவஞ்சி

பாண்டிக்‌ கொடுமுடிக்‌ குறவஞ்சி

திருமலையாண்டவர்‌ குறவஞ்சி

சிற்றம்பலக்குறவஞ்சி

கொடுமளூர்க்‌ குறவஞ்சி

சோழக்‌ குறவஞ்சி

தேவேந்திரக்‌ குறவஞ்சி

சஹாஜிராசன்‌ குறவஞ்சி

அர்த்த நாரீசர்‌ குறவஞ்சி

கொங்கர்‌ குறவஞ்சி

திருவிடைக்காழிக்‌ குறவஞ்சி

முருகர்‌ குறவஞ்சி

முத்தானந்தச்‌ குறவஞ்சி

சுவாமிமலைக்‌ கு குறவஞ்சி

செந்தில் குறவஞ்சி

காரைக்‌ குறவஞ்சி

வருணபுரிக்‌ குறவஞ்சி

துரோபதைக்‌ குறவஞ்சி

கும்பேசர் குறவஞ்சி

விராலிமலைக் குறவஞ்சி

மருங்காபுரிச்‌ சிற்றரசர்‌ குறவஞ்சி

சிதம்பரக்‌ குறவஞ்சி

திருப்பாகையூர்க்‌ குறவஞ்சி

தத்துவக்‌ குறவஞ்சி

வள்ளிக்‌ குறவஞ்சி

கதிரைமலைக்‌ குறவஞ்சி

வாத ஜயக் குறவஞ்சி

தியாகேசர் குறவஞ்சி

திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி

நகுலமலைக் குறவஞ்சி

நல்லைக் குறவஞ்சி

நல்லைநகர்க் குறவஞ்சி

வண்ணைக் குறவஞ்சி

வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி

மதுரை மீனாட்சியம்மை குறம்‌

விதூர்‌ குறம்‌

மின்னொளியான் குறம்‌

திருக்குருகூர்‌ மகிழ்மாறன்‌ பவனிக் குறம்‌

அண்டவெளிக் குறம்‌

அடுத்த வாரம் வேறு ஒரு சிற்றிலக்கிய வகையை எடுத்து அதன் தொடைகளை விரிவாக பார்ப்போம்.