.
ராகுல் காந்தி சென்ற நாடளுமன்ற தேர்தலில் வயநாட்டிலும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் .பின்னர் வயநாடு எம் பி தொகுதியில் இருந்து விடுபட அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது .
ராகுல் காந்தி தன் வயநாடு எம் .பி பதவியை ராஜினாமா செய்ய இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது தேர்தல் ஆணையம் .
கல்பேட்டா , மானந்தவாடி , சுல்தான் பத்தேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டது வயநாடு நாடாளுமன்ற தொகுதி .வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் .
இதில் முக்கிய வேட்பாளர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி வத்ரா .
சி பி ஐ கட்சியை சேர்ந்த சத்யன் மோக்ரி.
பி ஜே பி கட்சி வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் .
மேலும் ஐந்து குட்டி கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் எட்டு சுயேட்சை கட்சியினர் களத்தில் இருக்க .மூன்று வேட்பாளர்களுக்கு இடையில் தான் போட்டி நிலவுகிறது .
பா ஜ காவின் வேட்பாளர் 39 வயது இளம் நவ்யா ஹரிதாஸ் பி டெக் மெக்கானிக்கல் என்ஜினீயர் .
கோழிக்கோடு மாநகராட்சி உறுப்பினராக பணியாற்றியவர் தற்போது பி ஜே பியின் மகிளா மாநில பொது செயலாளர் .
" பிரியங்கா காந்தி தேர்தலுக்கு மட்டும் இங்கு வந்து விட்டு பின் டெல்லியில் செட்டில் ஆகிவிடுவார் .நான் இதே தொகுதியின் மகள் இங்கேயே தான் சுத்தி வருவேன் தொகுதி என் கையில் இருக்கும் " என்று கூறி வாக்கு சேகரிக்கிறார் .
முக்கியமாக இல்லத்தரசிகளை நேரில் சந்தித்து சரளமாக பேசி வாக்கு சேகரிக்கிறார் .
இடது சாரி கட்சி வேட்பாளர் சத்யன் மோக்ரி ஒரு மூத்த இடது சாரி அரசியல் பிரமுகர் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாளர் .
கேரளா நாடாபுரம் தொகுதியில் இருந்து 1987 முதல் 2001 வரை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் .
தன் வெற்றி உறுதி என்று தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கும் மோக்ரி பிரியங்காவுடன் நேரடியாக மோதி கொண்டிருக்கும் 71 வயது காம்ரேட் !.
கல்பேட்டாவில் உள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பேசினோம் ,
" தன் சகோதரிக்கு வழிவிட்டு வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் காந்தி பிரியங்கா வின் வெற்றிக்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் .
வேட்பு மனு தாக்கல் அன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே , சோனியா காந்தி ,கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் கேரள காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் .
மலை மாவட்டமான வயநாடு சுற்றி 13 பழங்குடி மக்கள் வசிக்கின்றனர் பனியர்கள் , குறிச்சியர் மற்றும் குறும்பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் .
அவர்களின் தேவையான அத்தியவசியங்களை பிரியங்கா பெற்று தருவார் என்பது உறுதியான ஒன்று என்கிறார்கள்.
முண்டக்கை மற்றும் சூரல்மலை நிலச்சரிவுக்கு பின் ஓடோடி வந்த ராகுல் பிரியங்காவின் அன்பு அரவணைப்பை வயநாடு மக்கள் மறக்கவில்லை .
நாடாளமன்றத்தில் தன் சகோதரர் ராகுலை விட தொகுதிக்காக அனல் பறக்க வாதிடுவார் பிரியங்கா என்கின்றனர் உறுதியாக .
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலர் மனேஷ் சந்திரன் கடந்த வாரம் கூடலூர் அருகில் உள்ள தாளூர் நீலகிரி கலை அறிவியல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டரில் பறந்து வந்து இறங்கிய பிரியங்காவை மண்ணின் மைந்தன் புத்தகத்தை கொடுத்து வரவேற்றார் . பின்னர் வயநாடு சென்று பழங்குடி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர் .
பழங்குடி ஆதிவாசிகள் இஸ்லாமியர்கள் , கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் வயநாடு தொகுதியில் ஜூனியர் இந்திரா காந்தி வெற்றி உறுதி என்று கூறுகிறார்கள் .
அதே சமயம் சத்யன் மோக்ரி கூறுகிறார் , "ராகுல் இதுவரை வயநாடு தொகுதிக்கு எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை தொகுதியை விட்டு எஸ்கேப் ஆகி இன்னோரு வேட்பாளரை நிறுத்தியுள்ளார் .
நாட்டின் எதிர் கட்சி தலைவர் வயநாடு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை .
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்க நஞ்சன்கூடு மைசூரு ரயில்வே லைன் போட முடியவில்லை . கர்நாடக அரசு வயநாடு மக்களுக்கு எதிராக செயல் படுகிறது கேரளா கர்நாடகா இரவு நேர பயணத்தை தடை செய்துள்ளது ..( கேரளா கர்நாடக நெடுஞ்சாலை முதுமலை பண்டிபூர் தேசிய வன பூங்காவினுள் உள்ளது இரவில் வாகனங்களுக்கு தடை உள்ளது காரணம் வன உயிரினங்களின் பாதுகாப்பு கருதி என்பது குறிப்பிடத்தக்கது .)
இதையெல்லாம் தொகுதி மக்கள் மனதில் உள்ளது தேர்தல் அன்று பிரதிபலிக்க போகிறது பாருங்கள் " என்கிறார் சற்று ஆவேசமாக .
பிரியங்கா காந்தி மிக கூலாக தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ,
அதே வேளையில் நான் சில காபி , மிளகு , வாழை , ஏலக்காய் மற்றும் இஞ்சி விவசாயி குடும்பங்களை சந்தித்து பேசினேன் அவர்கள் மிக பெரிய கடனில் மூழ்கியிருக்கிறார்கள் நான்நா டாளுமன்றத்திற்கு சென்றவுடன் வயநாடு மக்களின் உணவு உற்பத்தி, விவசாயம் சுற்றுலா மேம்பட அனைத்து தேவைகளும் ஒருவருடத்தில் சரிசெய்யப்படும் " என்றுபிரியங்கா உறுதி அளித்து நகர்ந்து கொண்டிருக்கிறார் .
தேர்தல் முடிவு மிக அருகில் உள்ளது ....வெய்ட் அண்ட் சி யார் அடுத்த வயநாடு புதிய எம் பி என்று பார்ப்போம் .
Leave a comment
Upload