விடிகாலை தேரம் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் 5வது நடைமேடையிலிருந்து அப்பதான் புறப்பட்டிட்டிருந்த அந்த ரெயிலை கடைசி நேரத்தில் வேகமாக ஓடி வந்து பிடித்தான் வைரமுத்து.அவன் கையைப் பிடித்து தூக்கி விட்ட ஒரு வடநாட்டு இளைஞன்,”மர்னா ஹை க்யா, மாதர்......” னு ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டினான்.
வைரமுத்துவுக்கு புரியலை,கேனத்தனமா சிரிச்ச வண்ணம் உள்ளே வந்து கதவை ஒட்டியே உட்கார்ந்தான்.மூணு மணி நேரம் ஆச்சு நல்ல வேளை இது வரை டிக்கெட் செக் பண்ண யாரும் வரலை.மூச்சு விடாம படு வேகமா ஓடிட்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஓஞ்சு போய் ஒரு சின்ன ஸ்டேஷனில் எதுக்காகவோ இளைப்பாறி நின்றது.எட்டிப் பாத்தான் வைரமுத்து,வெள்ளை ஆடை கருப்புக் கோட்டு அணிந்து அந்த டி.சி. இந்த பெட்டிலதான் ஏறப் போறார். ரயிலும் ஏதோ வேலை முடிஞ்சு புறப்படற மாதிரி புறப்பட்டது. டக்னு ஓடற ரயில்ல இருந்து குதிச்சவனைப் பாத்து அந்த வடநாட்டு இளைஞன்,”மர்னா ஹை க்யா, பெகன்......”னு ஏதோ கெட்ட வார்த்தைல திட்டினான்.
ஆந்திரால ஏதோ சின்ன ஊர்னு ரயில்வே ஸ்டேஷன் மஞ்சப் பலகை சொன்னது தன் கருப்பு ஜிலேபி எழுத்துக்களால்.வெளியே நடந்தான்,தன் சட்டைப் பாக்கெட்டை தொட்டுப் பார்த்த வண்ணம்.ஒரு இருநூறு ரூபாய் நோட்டும், கொஞ்சம் சில்லறை நோட்டும் தைரியம் அளித்தது.நாலஞ்சு நாள் ஓட்டலாம்,திரும்ப அவன் சென்னை போனா அவன் ராஜா.25 லச்சம் மொத்தமான்னா சும்மாவா?
ஸ்டேஷனுக்கு வெளியே காலரைத் தூக்கி விட்டுட்டு வந்தான்.எதிர்லயே டீக்கடை,கெத்தா போய் ஒரு ஸ்டிராங் டீ,சீனி தூக்கலானு கடைல டீ ஆத்திட்டிருந்த நாயரிடம் சொல்லிட்டு பெஞ்ச்ல உக்காந்தான்.அட, தமிழ்ப் பேப்பர் போஸ்டர் கூட கவுத்துல கிளிப் போட்டு தொங்குது..ஒரு மாலைச் சுடரை வாங்கி ஸ்டைலா பிரிச்சான்.முதப் பக்கம் பூரா மாபெரும் தீபாவளிச் சலுகையோட அந்த வீட்டு உபயோகப் பொருள் கடைக்காரர் பல் பூரா காட்டி சிரித்தார்.
இரண்டாவது பக்கம் வரி விளம்பரம்.சின்ன சின்ன எழுத்துல ஒரே போர்.”இந்தா சாரே வளற சீனி போட்ட ஒண்ணாங்கிளாஸ் சாயாக்கும்னு” நாயரின் டீ கிளாஸ் கை நீண்டது.அதை வாங்கிக் கொண்டே 3ம் பக்கம் திருப்பி,கை நடுங்கி டீ பேப்பரில் சிந்தியது.
சென்னைப் போலீஸ் சாகசம் தலைப்பு. ஒரே நாளில் திருடப் பட்ட மொத்தப் பணம் பிடி பட்டது.மேற் கொண்டு கைது நடவடிக்கை.தீவிரப் புலன் விசாரணை.மேல படிக்க முடியாம கண் கலங்கியது.
நாயர் கத்தக் கத்த ஸ்டேஷன் நோக்கி ஓடினான்.இவன் அதிர்ஷ்டமா,துரதிர்ஷ்டமா ஏதோ ஒண்ணு,சென்னை போற ரயில் கிளம்பும் போது சட்னு தாவிப் பிடிச்சான்.
சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்,இன்ஸ்பெக்டரின் முன்னால் நின்னு,”என் லச்சுமியை விட்டிருங்க,அவளுக்கும் இந்த திருட்டுக்கும் சம்பந்தமில்லை,நான்தான் பணத்தை எடுத்தேன்”
“யோவ் யாருய்யா நீ,எந்த லச்சுமி,எந்தப் பணம்?”
தன் கைல இருந்த மாலைச் சுடர் பத்திரிகையை நீட்டினான்.அவன் காட்டிய 3ம் பக்கத்தை பொறுமையா படிச்ச இன்ஸ்பெக்டர் இடிஇடியென சிரிச்சார். ”முட்டாப் பயலே பூரா படிக்க மாட்டயா
டைரக்டர் காந்தன் பேட்டி,தன் புதுப் படக் கதை பற்றினு கொட்டையா போட்டிருக்கானே அதைப் படிக்காம இங்கே ஓடி வந்தயா? ஏய் 301,207, இவன் கூடப் போய் அந்த லச்சுமியை
ஒளிச்சு வச்சிருக்கற பணத்தை தூக்கியாங்க”
Leave a comment
Upload