அமெரிக்க அதிபராக 78 வயதான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
கருத்துக் கணிப்புகள் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 60 வயது கமலா ஹாரிசுக்கு சாதகமாக இருந்தது. அதையும் மீறி டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆகிவிட்டார்.
கடந்த 1776-ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்த 248 ஆண்டுகளில் இதுவரை அமெரிக்காவில் பெண் ஒருவர் அதிபர் ஆனதில்லை.
பெண்ணுரிமை பற்றி பெரிய அளவில் பேசும் அமெரிக்காவில் 1920-ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு முன்னதாக பல பெண்கள் போட்டியிட்டாலும் ட்ரம்பை எடுத்து ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டபோது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
ஹிலாரி கிளின்டன் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பு இழந்தார்.
தற்போது வெற்றி வாய்ப்பை இழந்த கமலா ஹாரிஸ் கூட சில மாகாணங்களில் ட்ரம்பை விடஅதிக வாக்குகள் பெற்று இருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
பென்சில்வேனியாவில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அதிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவர் மீது பாலியல் குற்றம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அமெரிக்க மக்கள் அதையெல்லாம் தாண்டி அவரை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
ட்ரம்ப் வெற்றிக்கு முக்கிய காரணம் அவருக்காக தேர்தல் பணியாற்றிய டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க். அவர் தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்க இளைஞர்களை கவரும் வகையில் ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலன் மாஸ்கை பாராட்டி பேசினார். அவரைப் பற்றி குறிப்பிடும் போது இப்போது ஒரு ஸ்டார் பிறந்திருக்கிறார் அது வேறு யாருமில்லை எலன் தான். அவர் அற்புதமான நபர்.
எனக்காக பிலடொல் பியா பென்சில்வேனியா உள்ளிட்ட பல பகுதிகளில் எலன் எனக்காக இரண்டு வாரங்கள் பிரச்சாரம் செய்தார் என்ற ட்ரம்ப் பாராட்டி இருக்கிறார்.
அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எலன் மாஸ்க் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்தார். அவருக்கு தேர்தல் செலவுக்காக 75 மில்லியன் டாலர் வழங்கினார் எலன் மாஸ்க்.
எலன் மாஸ்க் அமைச்சரவையில் முக்கிய பதவியில் அமர்வார் என்ற பேச்சும் தற்போது வரத் தொடங்கி இருக்கிறது. அவரும் நான் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பதாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
ட்ரம்ப் இந்திய ஆதரவாளர் குறிப்பாக பிரதமர் மோடி நலம் விரும்பி.
அதே சமயம் சீனாவை எதிர்த்து பலமுறை வெளிப்படையாக தன் கருத்தை சொல்ல தயங்கியதில்லை. குறிப்பாக கொரோனா காலத்தில் அதை பரப்பியது சீனா தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தொழில் போட்டியில் அமெரிக்காவை சீனா முந்தி இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இது அமெரிக்காவுக்கான பொற்காலம் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப் நான் போரை ஏற்படுத்த மாட்டேன் நிறுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதில் அவர் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
உலகில் நடக்கும் பல போர்களுக்கு அமெரிக்கா தான் நேரடியாக அல்லது மறைமுகமாக காரணமாக இருந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
Leave a comment
Upload