“இன்னிக்கு நந்தினிய கிளினிக் அழைச்சிட்டு போகணும்; அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கு ;.நீங்க துணைக்குக் கூடப் போங்க நந்தினி எல்லாத்தையும் பாத்துப்பா.”
சங்கரலிங்கம் மனைவி ராஜம் உத்திரவு போட்டாள்..
ஹேமா கைனாகாலிஸ்ட் எம்.எஸ்.எம் டி, டி.ஜி ஒ கிளினிக் வாசலில்,.கார் நின்றது.
ரிசப்ஷனில் ஏகப்பட்ட கூட்டம். . கைராசி டாக்டர் போல இருக்கு.அதனால் தான் அம்மாவும் மகளும் ரெபர் செய்து இருக்கிறார்கள்.என்று நினைத்தார் சங்கரலிங்கம்.
இவர்கள் ரிசப்ஷன்ல காத்து இருந்தபோது, டாக்டர் ஹேமா வேக வேகமாகத் தன் சேம்பர் நோக்கி வந்தவள்,இவர்களைப் பார்க்கவும்,
“ஹலோ சார் ! என்னை ஞாபகம் இருக்கா! எங்க இவ்வளவு தூரம்? அதுவும் என் கிளினிக் வரைக்கும்?”
““எஸ் மேடம்! ஒங்க கிளினிக்னு தெரியாது;“நான் வேற டாக்டர் ஹேமாவாக இருக்கும் என்று நினைத்தேன். “வாட் ஏ சர்ப்ரைஸ். சந்திச்சு மூணு வருடத்துக்கு மேல இருக்கும்ல்ல”
“ஆமாம் சார்.”
“பை த பை இது என் டாட்டர்.நந்தினி. மும்பையில் வாசம். இப்போ கன்சிவ் ஆயிருக்கா.செக் அப் வந்து இருக்கா”
“ஹை நந்தினி! ஐ ஆம் டாக்டர் ஹேமா”
இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.
“நல்லதா போச்சு நந்தினி மத்த செக்கிங் பண்ணிகிட்டு இருங்க!. நான் கூப்பிடறேன் ஓகே”.
“சார்! பிளீஸ் நீங்க என்சேம்பருக்கு .வாங்க டீ சாப்பிட்டுக்கொண்டே பேசலாம். எவ்வளவு நாள் ஆச்சு! .”
அன்று பார்த்த அதே கலகலப்பு, அதே சுறுசுறுப்பு,அதே மலர்ந்த முகம்,அதேபுன்னகை.இவ்வளவு நடந்தும் எப்படி ஓங்களால இப்படி இருக்க முடியுது.டாக்டர்?”தேநீர் அருந்திக்கொண்டே கேட்டார் சங்கரலிங்கம்..
ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கினார் ஹேமா.
மூன்று வருடம் முன்பு குடும்ப நல கோர்ட் நீதிபதியாகத் தான் இருந்த போது, தன்னிடம் இவரின் விவகாரத்து வழக்கு வந்தது, நினைவுக்கு வந்தது.
அந்த நகரத்தின் புகழ் பெற்ற மருத்துவமனையின் திறமை வாய்ந்த மகப்பேறு மருத்துவர் ஹேமா சந்திரசேகர். கைராசி டாக்டர் எனப் புகழ் பெற்றவர்.இவர் கணவர் சந்திரசேகர் புகழ் வாய்ந்த ஆப்தமாலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். லண்டனில் படித்தவர். அவரும் அந்த மருத்துவமனை தான்.
“மேட்ஃபார் ஈச் அதர்.என்பார்களே அப்படி ஒரு அழகு அருமையான ஜோடி; இருந்தும் குழந்தை பாக்கியம் அஞ்சு வருடமாகக் கிடைக்கவில்லை.
யார் கண் பட்டு விட்டது என்று தெரியவில்லை. இப்போது இருவரும் குடும்ப நல கோர்ட்ல பரஸ்பர விவகாரத்து கோரி வழக்கு.
குடும்பநல கோர்ட்டில் நீதிபதியாக இருந்த சங்கரலிங்கம்கவுன்சிலிங் செய்த பலனின் முடிவில் ,சந்திரசேகர் தன் மனைவியுடன் மீண்டும் வாழ விருப்பம் ., என ஒப்புக்கொண்ட பிறகும் , ஹேமா இதற்கு ஒத்து வரவில்லை .
“மட்டமான எண்ணமும் வக்கிரபுத்தியும் கொண்ட . .இவன் நிறைய நிறங்கள் கொண்டவன்என் முடிவில் இனி மாறமில்லை”. என்று நீதிபதியிடம் சொல்லவும்,
கடைசியில் விவாகரத்து ஹேமா எதிர்பார்த்த மாதிரியே கொடுக்கப்பட்டது..
இருவரும் தங்களுடைய புரோபஷனில் கொடிகட்டி பறப்பதால், ஜீவனாம்சம் வேண்டாம் என்று . ஹேமாவும் சொல்லிவிட்டார்.
இதோ அந்த ஹேமாவை மூன்று வருடம் கழித்து நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு .
“என்ன சார் யோசனை?.”
“ஒன்னுமில்ல, காலம் எப்படி இவ்வளவு மாற்றங்களைக் கொண்டு வருதுன்னு நினைச்சேன்.“.
“ஒங்க பெர்சனல் லைஃ பற்றி விசாரிக்க , இப்ப இங்கே நான் நீதிபதியா வரல. ஒய்வு பெற்றவன். நீங்களும் இங்கே வாதியும் இல்லை, நீங்கள் விவாகரத்து செய்துவிட்டீரகள்.
.“உங்கள் விவாகரத்துக்கான காரணம் அதுவல்ல. என்று எனக்கு அன்றே தோன்றியது.ஆனால் கேட்க விரும்பவில்லை. “உங்கள் மௌனத்தின் ரகசியத்தை அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!.இன்று வரையும் அது புரியாத புதிராகவே உள்ளது.”
“நீங்கள் ஆட்சேபிக்கவில்லை என்றால், நான் இப்போது ஒங்க விவகாரத்தின் யதார்த்தத்தை , உண்மை காரணத்தை அறிய விரும்புகிறேன்.' அது கூட நீங்கள் விருப்பப்பட்டால் தான்.”
“அப்பா இல்லாத எனக்கு . நீங்க என் அப்பா மாதிரி தான்.” ஒங்க கிட்ட உண்மையான காரணத்தைச் சொல்கிறேன்.”
சிறிது நேரம் மௌனத் திற்குப் பிறகு . ஹேமா. ஏதோ சொல்ல நினைக்கும் போது, ஒரு அழகு குட்டி தேவதை இரண்டரை வயது இருக்கும் “மம்மி” எனத் துள்ளிக் குதித்து உள்ளே வந்து அவள் அருகில் போக, ஹேமா அந்தக் குழந்தையைத் தூக்கி அணைத்து முத்தமிட்டாள்.அதில் தாய்மையின். உணர்வை பார்த்தார் சங்கரலிங்கம்..
“என் விவகாரத்துக்கு இன்னொரு காரணம் இருக்கு என்று நீங்க நினைத்தது நூறு சதவீதம் கரெக்ட். அப்பா.”
“தன் குழந்தையைக் காட்டி, அப்படியொரு முடிவுக்கு வந்ததற்கு இவதான் . காரணம் .
“உண்மையான காரணத்தை “என் விவாகரத்து மனுவில் சொல்லியிருந்தால், அவன் உயிருக்கும், வேலைக்கும் ஆபத்து நிச்சயம் வரும். அப்படிப்பட்ட செயல் தான் அவன் என்னைச் செய்யச் சொன்னான்.”
“அப்படி அவன் என்னை நிர்பந்தம் செய்யும் போது ஒரு நிமிடம் யோசித்தேன். ஆனால், ஆபத்து வருவதை நான் விரும்பவில்லை. காயம் புண்ணாக மாறுவதை நான் விரும்பவில்லை”.
“என்ன ஹேமா சொல்றீங்க?ஒரு படித்த நல்ல புகழ் பெற்ற டாக்டர் அப்படி என்ன செய்தார்.?”அதே சமயம் ஒங்க உள் மனசு ரணம் எனக்குப் புரியுது.”
'நாங்கள் இருவரும் பெயரும் புகழும் பெற்ற டாக்டர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.மூன்று வருடம் முன்பு நான் ஒங்களைக் குடும்ப நல கோர்ட்ல் சந்திக்கும் போது ,நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தேன்.,
மீதமுள்ள மாதங்களில் எனது கர்ப்பம் ஊனமுற்றோ ,அல்லது எனது மன அழுத்தத்தால் ஏதேனும் விசித்திரமான நோயுடன் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை பிறப்பதை நான் விரும்பவில்லை. இந்த நேரத்தை மிகவும் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்பினேன்.
ஆனால்ஒவ்வொருநாளும்பதற்றமும்,படபடப்பும்எனக்குஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஒரு நாள் அது அதன் வரம்பை எட்டியது -----'
மருத்துவராக இருந்தும், குடும்பத்தில் நல்லிணக்கம் இல்லாத காரணத்தாலும், அவரால் மட்டுமின்றி, குடும்பத்தினராலும், எனக்கு நிறையத் தொல்லைகள்.
விசும்பல் சப்தம் கேட்டது; அவள் தொண்டை கரகரக்க ஆரம்பித்தது. “-சந்திரசேகர் மற்றும் அவர்கள் குடும்பத்துக்கு ஆண் குழந்தைதான் வேண்டுமாம்,”
அஞ்சு வருடம் கழித்துக் கர்ப்பம் தரித்தது சந்தோசம் தான் அதனால் என்னைக் கரு பரிசோதனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்,
பெண் என்று தெரிந்தால் அதைக் கலைக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்கள்.
இது எங்களைப் போன்ற டாக்டர்களுக்கு மிகவும் எளிதானது தான்.
ஆனால், இந்தச் செயல் என்னை அவமதிக்கும் செயல் என நினைத்தேன் , கரு பரிசோதனையும் ஒரு சமூகக் குற்றம்.'எனத் தெரிந்தும் சந்திரசேகரும் சரி, அவர் குடும்பமும் என்னை நிர்பந்தம் செய்தார்கள்
.
இந்த மாதிரி விசயத்தில், விஷயம் தெரியாத பாமர மக்களின் எண்ணங்களை விடக் கொடுமையாக இவர்கள் இருந்ததும், வக்கிரபுத்தியும் எனக்கு வியப்பையும், கோபத்தையும் கொடுத்தது. குழந்தையின் பாலினத்தை முடிவு செய்ய இவர்கள் யார்?
அதுவும் சந்திரசேகர் எப்படி அம்மா சொல்லுக்குப் பூம் பூம் மாடு போலத் தலையாட்டினார் என்பது இன்று வரை வியப்பாக உள்ளது.நான் அவர்கள் எண்ணத்துக்கு ஒத்துழப்பு கொடுக்கவில்லை.
இனி தேம்புவதில் பயனில்லை, உள்ளதில் நேர்மையும் ,தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும்நேரானதாகவே இருக்கும்.அவர்களுக்குக் குட்பை சொல்லிவிட்டு அந்த வீட்டை விட்டு வந்தேன்.
மறுநாளே குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து மனு கொடுத்தேன்.
என் புகாரில் உண்மையான காரணத்தை எழுதியிருந்தால் இந்தப் புகார் Pre.Conception and Prenatal Diagnostic Techniques PC and PNDT ACT ல் வரும். நிச்சயம் தண்டனை உண்டு.அந்தக் காரணத்தைக் காட்டி என்னால் எளிதாக விவாகரத்துப் பெற்றிருக்கலாம்,
“அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அவரது தொழிலில் நேர்மையானவர், எனவே நான் மூல காரணத்தை ஒதுக்கி வைத்தேன். அவர் தண்டிக்கப்பட வேண்டும், அவருடைய தொழிலை அல்ல.
இந்த ஆயுதம் பிரம்மாஸ்திரம் போல எந்த நேரத்திலும் பயன்படுத்த என்னிடத்தில் பாதுகாப்பாக இருந்தது. ஹேமா சொல்லி முடித்தார் .
.இதையெல்லாம் மீறி, எதிர்காலத்தில் வேறு எந்தப் பெண்ணுக்கும் சாபமாக மாறக்கூடிய அந்த மனிதனை நீங்கள் ஏன் காப்பாற்றினீர்கள்.?' .
'நாம் சமூக மனிதர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், எதிர்காலம் பற்றிய அழகான கனவுகளை நிச்சயமாகக் காண்கிறோம், ஆனால் நிகழ்காலத்தில் வாழ்கிறோம், '
மன அழுத்தமில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். “
“கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன
மா கர்மபல ஹேதுர்பூர் மாதே ஸங்கோ ஸ்த்வகர்மணி"
கீதையின் இந்தச் சூழலை மனதில் வைத்து, நல்லது கெட்டதைக் கணக்கிடுகிறோம்.எதிர்காலச் செயல்கள்.என்னும் புத்தகத்தைக் கடவுளிடம் விட்டு விட்டேன்..
இதில் கர்மா என்பது ஒருவர் செய்யும் செயலை குறிக்கும். ஒரு செயலை செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. உனக்காகக் கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவது மட்டுமே உன்னுடைய வேலை.எதிர்காலச் செயல்கள்.என்னும் புத்தகத்தைக் கடவுளிடம் விட்டு விட்டேன்..
“ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தைக் கற்று தரவே வருகின்றது.*
மேலும் பேச்சை தொடர நினைத்தபோது, அறுவை சிகிச்சைக்கான அழைப்பு வந்தது. சங்கரலிங்கத்திடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் நோக்கி சென்றாள்.ஹேமா.
முன்னாள் நீதிபதியான சங்கரலிங்கம் அறையை விட்டு வெளியே வரும்போது, ஹேமாவின் செயலைக் கண்டு பெருமிதம் அடைந்தார் . ஹேமா நிச்சயமாக ஒரு ஜெம்.தான்.
(ஒரு பத்திரிகை செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது)
Leave a comment
Upload