தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20241007071003177.jpeg

புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் ,விஜய் பங்கேற்பு.

திமுக தலைவருக்கு பிரஷர் ஏத்தறது தளபதி வேலை என்று ஆகிவிட்டது !!

மொழி, பண்பாடு, இலக்கியத்தை காப்போம் உதயநிதி ஸ்டாலின் கேரள நிகழ்ச்சியில் பேச்சு.

இப்ப இதுக்கெல்லாம் கூட பிரச்சினை வந்திருச்சா !!

விஜய் தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் சீமான் விமர்சனம்.

தம்பிய பார்த்து அண்ணன் பயந்துட்டாரு !!

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை குறைந்தது.

விடுதலை சிறுத்தை மது ஒழிப்பு மாநாடு பாதிப்போ ?

நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள் செல்வப் பெருந்தகை.

அண்ணே அவங்க தைரியசாலி அண்ணே !!

விஜய் நடத்திய மாநாடு தான் திமுக கூட்டணியை பாதுகாத்து வருகிறது பொன் ராதாகிருஷ்ணன் கருத்து.

தளபதி நடத்திய மாநாடு எல்லோரையும் பேச வச்சுச்சு !!

விஜய் மீது எனக்கு எந்த வன்முமும் இல்லை தொல்.திருமாவளவன்.

பொறாமை தான் லைட்டா !! கரெக்டா தலைவரே ?

இந்தி மீது வெறுப்பு இல்லை உதயநிதி ஸ்டாலின்.

அப்படியா ? நெசமா ? சத்தியமா ?

நடிகர் விஜய் கட்சி கோட்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் டிடிவி தினகரன்.

அதான் ஆட்சியில் பங்கு ன்னு சொல்லிட்டாரு அப்புறம் என்ன ?

திமுகவின் குடும்ப ஆட்சியை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி.

புதுசா யோசிக்கிறாராம் !!

சீமானை கண்டுக்காதீங்க கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்.

அப்படின்ன இன்னும் நிறைய பேசுவார் அவரு பரவாயில்லையா ?

பாமக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இல்லை பாமக சட்டமன்றத் தலைவர் ஜி.கே.மணி.

ஆமா கூட்டணி மட்டும் அடிக்கடி மாறும்!!!