தொடர்கள்
ஆன்மீகம்
தினம் தினம் திவ்ய அனுபவம் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2024903225611900.jpg

திருவாய்மொழி 1.1.7ஆம் பாசுரம்

திட விசும்பெரி வளி

நீர் நிலம் இவை மிசை

படர் பொருள் முழுவதுமாய்

அவை அவைதொறும்

உடல் மிசை உயிர் எனக்

கரந்தெங்கும் பரந்துளன்*

சுடர் மிகு சுருதியுள்

இவையுண்ட சுரனே.

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.8ஆம் பாசுரம்

சுரர் அறிவரு நிலை

விண் முதல் முழுவதும்

வரன் முதலாய் அவை

முழுதுண்ட பர பரன்

புரம் ஒரு மூன்றெரித்து

அமரர்க்கும் அறிவியந்து

அரன் அயன் என

உலகழித்தமைத்துளனே

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.9ஆம் பாசுரம்

உளன் எனில் உளன்

அவன் உருவம் இவ்வுருவுகள்

உளன் அலன் எனில்

அவன் அருவம் இவ்வருவுகள்

உளன் என இலன் என

இவை குணம் உடைமையில்

உளன் இரு தகைமையொடு

ஒழிவிலன் பரந்தே.

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.10ஆம் பாசுரம்

பரந்த தண் பரவையுள்

நீர்தொறும் பரந்துளன்

பரந்த அண்டம் இதென

நில விசும் பொழிவுற

கரந்த சில் இடந்தொறும்

இடம் திகழ் பொருள் தொறும்

கரந்தெங்கும் பரந்துளன்

இவையுண்ட கரனே.

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி 1.1.11ஆம் பாசுரம்

கர விசும்பெரி வளி

நீர் நிலம் இவை மிசை

வரனவில் திறல் வலி

அளி பொறையாய் நின்ற

பரன் அடிமேல்

குருகூர்ச் சடகோபன் சொல்

நிரனிறை ஆயிரத்து

இவை பத்தும் வீடே.

-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்