தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

202490119035253.jpeg

துணை முதல்வராக உதயநிதி நியமனம்.

என்னடா இது சோதனை பேப்பர் காரங்களுக்கு சப்ஜெக்டும் போச்சு சஸ்பென்சும் போச்சு !!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு.

இப்ப லட்டு பிரசாதமா இல்லையா ? சாப்பிடலாமா கூடாதா ? அதையும் இந்த ஆய்வு சொல்லும் இல்ல ?

ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என்பது வெட்கக்கேடானது. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.

தலைவரே நம்ம கட்சியில் இருக்கும் போது அவர் அமைச்சராக இருந்தபோது ஊழல் பண்ணார் என்பது தான் வழக்கு !!

கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்பதால் எதிரிகளுக்கு அச்சம் திருமாவளவன்.

அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கோங்க !!

திமுக பாஜக உடன் பொது வெளியில் எதிர்ப்பு திரை மறைவில் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி.

உங்களுக்கு தெரியாத விஷயமா ?

திருப்பதி லட்டு விவகாரம் பற்றிய கேள்விக்கு 'ஸாரி' சொன்ன நடிகர் ரஜினிகாந்த்.

துரைமுருகன் பற்றி கேட்டா பதில் சொல்வார். இந்த விஷயம் எல்லாம் அவருக்கு தெரியாது !!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு.

ஜிஎஸ்டி பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை இது ஏதோ நன்கொடை விவகாரம்.

நாட்டில் பாஜக அரசு உள்ள 22 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட இலவச மின்சாரம், இலவச குடிநீர், தரமான பள்ளிகள், மருத்துவமனை இல்லை டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்.

அண்ணா இந்த மாநிலங்கள்ல பாராளுமன்ற தேர்தலில் உங்களை விட அவங்க தான் அதிக ஜெயிச்சிருக்காங்க அது எப்படி ?

எமர்ஜென்சியில் கூட இவ்வளவு நாள் சிறை கிடையாது முதல்வர் ஸ்டாலின்.

இவங்க பில்டப் பார்த்தா கட்சியை செந்தில் பாலாஜி கிட்ட தந்துருவாங்க போல தெரியுது !!

2026 தேர்தலில் விஜய் கட்சி இரண்டாவது சக்தியாக வர வாய்ப்பு. தொல் திருமாவளவன்.

முதல் சக்தி நீங்க தான் என்கிறார் ஆதவ் அர்ஜுனா !!

முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றி செந்தில் பாலாஜி.

எதுக்கு நன்றி வழக்கு போட்டதுக்கா ? அல்லது மீண்டும் 10 ரூபா கூடுதலா வசூலிக்க அமைச்சர் பதவி தந்தத்துக்காகவா ?

பாஜக ஆளும் மாநிலங்களில் வேலையின்மை சதவீதம் குறைவு மத்திய அமைச்சர்.

ஆமா கரெக்டு தான் அவங்க எல்லாரும் தமிழ்நாட்டில் வேலை செய்றாங்க இல்ல !!

துணை முதல்வர் என்பது பதவி அல்ல ,அது பொறுப்பு உதயநிதி ஸ்டாலின்.

எங்கேயோ கேட்ட குரல் !!

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்தார் பிரதமர் மோடி, கார்கே குற்றச்சாட்டு.

ராகுல்காந்தி பற்றி ஏதோ சொல்றாரு தலைவர் !!

எங்கே ஜனநாயகம் ? தந்தை முதல் அமைச்சர், மகன் துணை முதலமைச்சரா !! தமிழிசை சரமாரி கேள்வி.

இதுதான் இப்போதைய ஜனநாயகம் இது கூட அக்காவுக்கு தெரியல !!