வேதத்தின் ஆழ்பொருளை அநாயாசமாக அடியேன்
உள்ளத்தினுள் நிலை நிறுத்திவிட்டார் நம்மாழ்வார்
கண்ணிநுண் சிறுதாம்பு ஒன்பதாம் பாசுரம்
மிக்க வேதியர்
வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி
என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்
சடகோபன் என் நம்பிக்கு
ஆட்புக்க காதல்
அடிமைப் பயனன்றே
- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
கண்ணிநுண் சிறுதாம்பு பத்தாம் பாசுரம்
பயன் அன்றாகிலும்
பாங்கல்லர் ஆகிலும்*
செயல் நன்றாகத்
திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ்
குரு கூர்நம்பி
முயல்கின்றேன்
உன் தன் மொய் கழற்கன்பையே
- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
இந்த பாசுரத்தில் நான்கு பேரைப் பற்றி சொல்லும் மதுரகவி ஆழ்வார்,
கண்ணிநுண் சிறுதாம்பு 11 பாசுரங்களையும் கேட்பவர்களுக்கு என்ன பலன் என்பதையும் குறிப்பிடுகிறார்!
கண்ணிநுண் சிறுதாம்பு பதினோராம் பாசுரம்
அன்பன் தன்னை
அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன்
தென் குருகூர்
நகர் நம்பிக்கு
அன்பனாய்
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி
வைகுந்தம் காண்மினே
- மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்
Leave a comment
Upload