தென்னாப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே,ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா, மலாவி நாடுகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு இடையிலான காலங்களில் கடும் வறட்சி நிலவியதாகத் தெரியவந்தது.இதில் நமீபியா, மலாவி, ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் காலநிலை மாற்றத்தின் வறட்சி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.நமீபியா நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி, அங்குள்ள இயற்கை வளங்களை அப்பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையில் 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை கொன்று சாப்பிடும் திட்டம் மிக அவசியம்’ என்று சமீபத்தில் அந்நாட்டு சுற்றுச்சூழல், காடுகள், சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.நமீபியாவில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, யானைகள் தவிர 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 இம்பாலா மான் வகைகள், 60 எருமைகள், 100 காட்டெருமைகள், 100 எலாண்ட்ஸ் மான் வகைகளைக் கொல்வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மனித-விலங்கு மோதல் அதிகமாக காணப்படும் ஆப்பிரிக்க மேற்குப் பகுதி காடுகளில் செயல்படுத்த திட்டம் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அங்கு யானைகள் வாழ்வதற்குப் போதுமான இடமும் இல்லை. ஹ்வாங்கே பகுதியில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் யானைகள் உள்ளன. எனினும், அங்கு 15 ஆயிரம் யானைகள் மட்டுமே வசிப்பதற்கான வனப் பரப்பு உள்ளது என்று அப்பகுதி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a comment
Upload