தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான் - பால்கி

20240819201056811.jpg

சில நேரங்களில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் திருப்தியில்லாதிருப்பது உணர்ந்துகொண்டிருப்பீர்கள், ஆனால் அதே சமயம் இந்த உலகில் பலர் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.


ஒரு பண்ணையில் ஒரு குழந்தை விமானம் மேலே பறப்பதைக் கண்டு தானும் பறக்க வேண்டும் என்று கனவு காண்கிறது. ஆனால், அதே விமானத்தில் இருக்கும் ஒரு பைலட் பண்ணை வீட்டைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்று கனவு காண்கிறார்.


அதுதான் வாழ்க்கை.

ஆக உன்னுடைய வாழ்க்கையை நீ அனுபவிக்கத் தவறாதே.


செல்வம் மகிழ்ச்சியின் ரகசியம் என்றால், பணக்காரர்கள் தானே தெருக்களில் கூதாடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இங்கோ, ஏழைக் குழந்தைகள் மட்டுமே அதைச் செய்கிறார்கள்.

அதிகாரம் பாதுகாப்பை உறுதி செய்கிரது என்றால், அதிகாரிகள் பாதுகாப்பின்றியல்லவா நடக்க வேண்டும். ஆனால், இங்கோ, எளிமையாக வாழ்பவர்கள் மட்டுமே நிம்மதியாகத் தூங்குகிறார்கள்.

அழகும் புகழும் சிறந்த உதாரண உறவுகளைக் கொண்டு வருகிறது என்று வைத்துக்க்கொண்டால், அந்த அழகும் புகழும் கொண்ட பிரபலங்களின் திருமணங்கள் அல்லவா சிறப்பாக அமைந்திருக்கவேண்டும்.

எளிமையாக வாழ்.

பணிவாக நட.

உண்மையான அன்புடன் இரு.

எனில், எல்லா நன்மைகளும் உங்களிடம் திரும்பி வரும்.