தொடர்கள்
கதை
விடை தெரியாத வினாக்கள் -ஆனந்த் ஶ்ரீநிவாஸ்.

20240821071337344.jpeg

இன்னும் ஒரு வாரத்திலே நீ ரிலீஸ் ஆகப் போற, “?ஜெயிலர் வந்து சொன்னதும் வினோத் முகத்தில் மகிழ்ச்சியில்லை.

சிறையில் 14வருடம்.“என் வாழ்க்கைபோயிடுச்சே?.இனி என் எதிர்காலம் எப்படி இருக்குமோ?.என் குடும்பத்தின் கனவு பலிக்குமா ?

முழுமையான தீர்வு கிடைக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும்.?

.மறு வாரம் வினோத் ஜெயிலை விட்டு வெளியே வந்தபோது, அப்பாவும் அண்ணன் பாலாவும் வரவேற்றார்கள்.

பதினான்கு வருடம் முன்பு நடந்த அந்தச் சம்பவம் தானே இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.நினைவு அலைகள் வந்து போனது.

தேனி பக்கம் மலையடிவார சூழலில் அமைந்த ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடும்பம்..

அண்ணா தன் அப்பாவுடன் சேர்ந்து கூலி வேலைக்குப் போய். வினோத்தை

படிக்க வைத்தான்.

வினோத் புத்திசாலி பிளஸ் 2வில் நல்ல மார்க் வங்கியவனுக்குமெரிட்டில் செங்கல்பட் மெடிகல் காலேஜ்ல இடம் கிடைத்தது.

மருத்துவக் கல்லூரியில் நாலாம் வருட பாதியில் பிரச்சனைஇவனைத் தேடி வந்தது.

சூழ்நிலை ஒரு மனிதனை உருவாக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். என்கிற

பழமொழி இவனுக்குச் சரியாகப் பொருந்தி போனது.

சுஷ்மிதா பஞ்சாபி பெண். கோதுமை நிறம். ரசிக்க வைக்கும் கண்கள். எல்லோரையும் வசீகரிக்கும் முகம். பாட்டியாலா சொந்த ஊர்.

சுஷ்மிதா பாடத்தில் சந்தேகம் என அவன் அறைக்கு வந்து கேட்க அது கொஞ்சம் கொஞ்சமாக நட்பாக மாறியது.

சுஷ்மிதா பெற்றோர்கள் , தங்களின் உறவுகார சந்தீப்பும் சேர்ந்து படிப்பதால் சுஷ்மிதாவை கவனித்துக் கொள்ளுமாறு சொல்லியிருந்தார்கள்.

சந்தீப்க்கு சுஷ்மிதாமேல் ஒரு தலைக் காதல்.

ஆனால் அதற்கு மாறாக எந்த இடத்திலும் வினோத் சுஷ்மிதா மீது காதல் வயபடவில்லை

. சுஷ்மிதாவும் அப்படியே.. Iiசுஷ்மிதாவுக்கு அவன் லட்சியம் ஒரு பெரிய டாக்டராகித் தன் கிராம மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். என்பது தெரியும்.

ஆனால் சுஷ்மிதா அவனுடன் பழகும் விதம் ,காட்டும் நெருக்கம் சந்தீப்பை பல சமயங்களில் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

இப்போது அவளைக் கண்டித்து ஏதும் பிரச்சனை பண்ண போய் அது தனக்கு வில்லங்கமான சூழ்நிலையை உண்டாக்கும் என்று பொறுத்துக் கொண்டான்.

பரபரப்பில் செங்கல்பட்டுபோலீஸ் ஸ்டேஷன். ..இன்ஸ்பெக்டர் ஞானவேல் யாரிடமோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

பேசி முடிந்ததும் , ஐய்யா ஐ.ஜி சொல்லி அனுப்பியிருக்கிறார் என்று சொல்லி ஒரு இளைஞன் வந்துள்ளதாகக் கான்ஸ்டபிள் சொல்லவும்“உள்ளே வர சொல்” என்றார் இன்ஸ்பெக்டர். .

.”சார் நான் சந்தீப் . போர்த் இயர் செங்கல்பட் மெடிகல் காலேஜ் ஸ்டூடண்ட் . எங்க ரிலடிவ் சுஷ்மிதாவை மெடிகல் காலேஜ் ஹாஸ்டலிருந்து காணும் சார்.”

“ஒனக்கு அவங்களுக்கும் என்ன சம்பந்தம் ?”

“சார் நாங்க இரண்டு பேரும் ஒரே ஊர். சொந்தக்காரங்க சார்.இரண்டு குடும்பமும் வசதியான குடும்பம்.நான் மட்டும் தனியா வீடு பிடிச்சி படிக்கிறேன் சார்”.

வினோத் , நான், சுஷ்மிதா எல்லோரும் ஒரே வகுப்பு சார்

கிளாஸில் அவங்க இரண்டு பேரும் குரூப் ஸ்டடி பண்ணும் போதும் சரி,பிறகும் அடிக்கடி அவன் ரூமுக்குப் போய்ப் பாடங்களில் சுஷ்மிதா சந்தேகம் கேட்பதுண்டு. ரொம்ப நெருக்கம் சார்.

“இரண்டு நாள் முன்னாடி அவன் சொந்த ஊருக்கு போகணும் கார் கொடுக்கிறாயான்னு ?என் கிட்ட கேட்டான் சார்.”

“நானும் நட்பின் அடிப்படையில்வண்டியையும் என் டிரைவரையும் கூட

அனுப்பி வைச்சேன் சார்”.

அவன் மேலே சந்தேகம் சார்.”

.”அவன் இப்போ எங்கே இருக்கான்?”

“ஹாஸ்டலில் சார்.”

“மதுராந்தகம் வரசொல்லி அருகில் உள்ள மலை உச்சிக்கு சுஷ்மிதாவை அழைச்சிட்டுப் போய்க் கழுத்தை நெரிச்சு ஒரு போர்வையில் அவங்களைச் சுருட்டி கீழ தள்ளி விட்டதாக டிரைவர் சொன்னான் சார்”.

“வினோத் ஒன்கிட்ட ஏதும் சொல்லலையா?”

“இல்லை சார்.”

“சுஷ்மிதா காணும்ன்னு சொன்னப்ப அவன் ரியாக்ஷன் எப்படி இருந்தது?”.

“அவனும் என்னை மாதிரி பதட்டமானான்”.

“சரி விசாரிக்கிறேன்; ஒரு புகார் எழுதிக்கொடு”!.

கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிய பிறகு, விசாரணையில் சுஷ்மிதா ஹாஸ்டல் வார்டனும் வினோத் ஹாஸ்டல் வர்டனும் அவர்கள் சொந்த வேலை காரணமாக இரண்டு நாள் செல்வதாக பெர்மிஷன் கேட்டுப் போனார்கள் .என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார்கள்.

தன் ரூம் கதவு தட்டவும், திறந்த போது இன்ஸ்பெக்டர் ஞானவேல்.

“சுஷ்மிதா கொலை விஷயமாக “யூ ஆர் அண்டர் அரெஸ்ட்”?

.

வினோத் ஷாக்காகி போனான்.

“மதுராந்தகம் மலையடிவாரம் கீழே கிடந்த அந்தப் பிரேதத்தை அடையாளம் காட்ட வா” என்றதும் கூடச் சென்றான்

“சுஷ்மிதா வழக்கமாகப் போடும் பிங் கலர் சுடிதார் வைத்து அது சுஷ்மிதா போடும் டிரஸ் தான் .ஆனால் என்னுடன் வரவில்லை” என்றான்

.டிரைவர் தன் வாக்குமூலத்தில் ,வினோத்தை காரில் அழைத்து மதுராந்தகம் போனதுமே டிக்கியை திறந்து ஒரு சாக்கு எடுத்துக் கொண்டு 100 அடி தள்ளி ஏரியருகே காத்திருந்த சுஸ்மிதாவும் வினோத்தும் மலை உச்சிக்கு போனதாகவும் , மலை உச்சியில் இருந்து உருட்டி விட்டதாகச் சொல்லி உள்ளான் . இதற்கு ஒன் பதிலென்ன?”

“சார் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு சார் . அன்று நான் டிக்கியிலுருந்து சாக்கு எதுவும் எடுக்க வில்லை ஏரி பக்கம் போய் சுஷ்மிதாவை பார்க்கவுமில்லை .மலை உச்சிக்கு போகவும் இல்லை.

காரில் இருந்த போதுஅப்பா உடம்பு சௌகரியமாக விட்டது . நீ அடுத்த வாரம் வந்தால் போதும் என்று என் அண்ணன் ஃபோனில் சொன்னதால் உடனே இறங்கி சென்னை சென்று விட்டேன் . டிரைவரிடம் வண்டியை சந்திப்பிடம் ஒப்படைக்கச்சொல்லிவிட்டேன்”

என்ன மன்றாடியும் பிரயோசனமில்லை. போலீஸ் அறிக்கையை வைத்து

லோயர் கோர்ட்டில் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

ஹைட் கோர்ட் அப்பீல் செய்தான் வினோத். இருந்த சொத்துக்கள் விற்றுக் கேஸ் நடத்தினான் அவன் அண்ணன்.

நிறைய வாய்தா நடுவில் கோவிட் என்று அப்படி இப்படின்னு 14, வருடங்கள் ஓடிவிட்டன

சாட்சிகள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மட்டுமே, விசாரணை நீதி மன்றங்கள் தீர்ப்பு அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் தெளிவு படுத்தி உள்ளது." அதே சமயம்

மெட்டீரியல் எவிட்ன்சஸ் மட்டுமே நீதி மன்ற தீர்ப்புக்கு ஒத்துழைக்க முடியும் என்று உச்ச நீதி மன்றம் பல வழக்குகளில் தெளிவு படுத்தியுள்ளனர்.

லோயர் கோர்ட்டில் போலீஸின் விசாரணை சரியான முறையில்லை? டிக்கியில் வினோத் கை ரேகை எடுக்கபட்டதா?

Autopsy பிரேத பரிசோதனையில் கழுத்தை நெறித்ததாகச் சொல்கிறது. கொலை செய்தது யார்? யார் ரேகை கழுத்தில் இருந்தது அது வினோத் கைரேகையுடன் ஒத்திருந்தா?என்கிற விசாரணை முழுமையாக இல்லை. . சந்தீப்பை விசாரிக்கவே இல்லை.

குற்றத்தை நிரூபிக்கப் போலீஸ் முயற்சி எடுக்கமால் வினோத்க்கு தீங்கு இழைக்கும் நோக்கத்தில், ஒருதலை பட்சமாக அவருக்குச் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்கிற செயல்தான் தெரிகிறது;

விசாரணையே குழப்பங்கள் நிறைந்துஉள்ளது.சாட்சியங்கள் கூறியுள்ள வாக்கு மூலத்தை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணைநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த விசாரணை நிராபாரதி நம்பி நாராயணன் வழக்கு மாதிரி, நிரபராதி வினோத்தை பழி வாங்கியுள்ளதாக இந்த மன்றம் கருதுகிறது..

மேலும் புகார் கொடுத்த சந்தீப்பின் டிரைவர் பிறழ் சாட்சியாக மாறி விட்டார் .

எனவே விசாரணை நீதிமன்ற தீர்ப்பு ரத்துச்செய்யப்படுகிறது".

மனுதாரர் வினோத்தை இந்த நீதி மன்றம் விடுதலை செய்கிறது .

அதே சமயம் வினோத்தின் 14வருட மன உளைச்சலுக்கு, அரசாங்கம் 42 லட்சம் மூன்று மாதத்துக்குள் கொடுக்கவேண்டும் .தவறும் பட்சத்தில் 9, சதவீத வட்டி வசூலிக்கப்படும்.

வெளியே வந்த வினோத்தின் முக்கியக் கேள்வி இப்போது மனதில்,

மீண்டும் எனக்கு அட்மிஷன் கிடைக்குமா.? Internship கிடைத்து டிகிரி முடிக்க முடியுமா ?

தன் கிராம மக்களுக்குச் சேவை செய்ய முடியுமா?.

சுஷ்மிதா உயிரோடு இருக்கிறாளா? இல்லையா?

சுஷ்மிதாவைஇன்னும் போலீஸ் ஏன் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கு?

எதற்கு டிரைவர் பொய் சாட்சி சொல்லவேண்டும்?. என் மேல் எதற்குக் காழ்ப்புணர்ச்சி?

சுஷ்மிதா வழக்கமா போடும் பிங்க் சுடிதார் அந்த இறந்து போன பெண் அணிந்திருந்தால் அது சுஷ்மிதா ஆகி விடுமா ?

இறந்து போனது யார்?.

ஒருவேளை சந்தீப் சுஷ்மிதாவை கொலை செய்து இருப்பானோ?

இவற்றுக்கெல்லாம் அவனுக்கு மட்டுமல்ல, நமக்கும் விடை தெரியாத வினாக்களாகத் தெரிந்தன.