தொடர்கள்
கதை
அப்பா அப்பாதான்! மதுராந்தகம் முனைவர்-என்.பத்ரி

20240820171234643.jpg

’எல்லாத்துக்கும் காரணம் புவனாதான்’ என்று அவளைத் திட்டிக் கொண்டு
இருந்தான் குமார். அவனின் குணம் அவளுக்குத் தெரியும். எல்லாத்துக்கும் சேர்த்து பின்னால ‘சாரி’ கேட்டுடுவான். பொறுமையாக இருந்தாள் புவனா.
கிராமத்து சாலை என்றாலே மேடு பள்ளம் இருக்கும். சிறிது
நேரத்தில் காரின் முன் வலது பக்க சக்கரம் இறங்குவது போல உணர்ந்தான்.
குமார்.உடனே வண்டியை நிறுத்தி, ’புவனா, நீ பின்னாடி போய் உட்காரு. வெயிட்
முன்னால வேண்டாம். வண்டி ரொம்ப வாபில் ஆகுது. வண்டி பக்ஞ்சர் ஆயிருக்குனு நெனைக்கிறேன்.’என்றான்.
காரை மெதுவாக ஓட்டினான். இருந்தாலும் வீட்டுக்கு இன்னும் ஒரு கிலோ
மீட்டர் இருக்கும்.மெல்ல போய் விடலாம் என்று எண்னியவனுக்கு அதிர்ச்சி
காத்திருந்தது. முன்சக்கர வலது பக்க வீல்ல காற்று முழுவதுமாக இறங்கி விட்டது.
மேலும், ’வண்டியை ஓட்டுக் கொண்டு செல்வது நல்லதல்ல’ என்பதை
புரிந்து கொண்டான். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டெப்னி வீலை எடுத்து
மாட்ட தொடங்கினான்.
சுற்று முற்றும் இருட்டாக இருந்தது. தன்னுடைய மொபைல் லைட்டின்
வெளிச்சத்தில் வண்டியின் வீலைக் கழட்டினான். டயர் போல்ட்டு நாலு இருந்தது.
அதை கழட்டினான். பிறகு ஸ்டெப்னி வீலை மாட்டிவிட்டு ’திரும்பி போல்ட
போடலாம்’ன்னு பார்த்தால், போல்ட்டு எதையும் காணவில்லை. குமார் ஒரே
டென்ஷன் ஆகிவிட்டான்.

சாலையோரம் நின்றுகொண்டிருந்த புவனாவின் மனது நேற்றைய
மாலைக்கு சென்றது.
நேற்று மாலை குமார் அப்போதுதான் ஆபீஸ்ல இருந்து வந்தான். புவனா, ’
தனியாக இருக்கும் அப்பாவை பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. சனி,ஞாயிறு
உங்களுக்கு லீவு தானே? போய் பார்த்துட்டு வரலாம்’ என்று கணவனிடம்
சொன்னாள்.அவனும் ஆமோதிப்பதாய் தலையை அசைத்தான்.

மறுநாள் மாலையில்தான் அவர்களால் புறப்பட முடிந்தது. காரில்தான்
கிளம்பினார்கள். நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்த
கிராமத்திற்கு செல்லும் பொழுது கொஞ்சம் இருட்டாகிவிட்டது.

புவனா மீண்டும் நிஜ உலகிற்கு வந்தாள்.

புவனா, ’லெஃட்டு வீல்ல இருக்க நாலு போல்ட்ல இரண்டு
போல்ட்ட எடுத்து இதுல போட்டுக்க முடியுமா?என்று கேட்டாள். ‘கொஞ்சம் தூரம்
தானே வண்டியை மெதுவாக உருட்டிட்டு போய்விடலாம். நாளை காலை வந்து இங்க வெளிச்சத்தில் தேடிப் பார்க்கலாம்’ என்று சொன்னாள்.அந்த யோசனை குமாருக்கு நல்லதாகவே பட்டது அப்படியே லெஃப்ட் வீல்ல இருந்து இரண்டு போல்ட கழட்டி ரைட்டு வீலுக்கு போட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணான்.

ஒரு வழியா கிராமத்துக்கு போய் சேர்ந்தாங்க. போனவுடனே, ’ரொம்ப
களைப்பா இருக்கு. நான் போய் படுக்கிறேன்.னு சொல்லி போய் படுத்துட்டான்
குமார்.

புவனாவின் அப்பா அந்த வயதிலும் காரின் உள்ளே இருந்த பைகளை
எல்லாம் ஒன்று ஒன்றாக உள்ளே கொண்டு வந்து வைத்தார். முழுவதுமாக காரை
பரிசோதித்து, இருந்த பொருளையெல்லாம் ஒன்னு விடாம எடுத்துக்கிட்டார். காரை மூடிவிட்டு வந்துவிட்டார்.

மறுநாள் காலை அந்த வீட்டிலிருந்த புவனா அப்பாவின் பழைய ஸ்கூட்டியில
முதல் நாள் இரவு கார் நின்ற இடத்திற்கு போனான் குமார்.தொலைந்த போல்ட்ட
எல்லாம் தேடிப் பார்த்தான். எங்கேயும் காணல.

வெயில் வேற அதிகமா இருந்துச்சு. வந்த டென்ஷன எல்லாம் வீட்டுக்கு
வந்து புவனா கிட்ட காட்டினான். இந்த சண்டையை பார்த்துகிட்டு இருந்த
புவனாவின் அப்பா, ’எதுக்கு மாப்பிள்ளை இப்படி கத்துறாரு? என்று கேட்டார்.
விவரத்தை சொன்னாள் புவனா.’இந்த போல்டா பாருங்கள்’ என்று சொல்லி ஒரு
பொட்டலத்தை கொடுத்தார்.உள்ளே இருந்த போல்டுகள் குமாரைப் பார்த்து சிரித்தன.
அவற்றை அவன்தான் காரின் ரைட் டோர்க்குள்ள கால் வைக்கற இடத்துல
பாதுகாப்பா வைச்சிருக்கான்.நேத்து ராத்திரி இருட்டல்ல அவசரத்துல வைச்ச இடத்த மறந்துட்டான். புவனாவும் கார்ல பின்னாடி ஒக்காந்துட்டா.

இராத்திரி எல்லா பையையும் எடுத்த புவனாவின் அப்பா அதையும்
பார்த்தார். ஒரு பொட்டலமா கட்டி வைச்சி இப்ப கொடுத்தாரு. மின்னல் வேகத்தில்
தீயாய் செயல்பட்ட குமாரு ரெண்டு வீல்லையும் போல்ட போட்டு காரை
தயார்பண்ணிட்டான்.

புவனா, எப்பவும் ’அப்பா, அப்பாதான்!’ன்னு சொல்லி தன் தந்தைக்கு கட்டி ஒரு
முத்தம் கொடுத்தாள். குமார்,’ கிளம்பலாமா?’என்றான். புறப்படும் மகளைப் பார்த்த அப்பாவின் கண்களின் ஓரம் ஈரமா இருந்தது.