மிஸ்டர் ரீல் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய்யை சந்திக்கப் போன போது "நான் எப்ப கேட்டேன் கருப்பு சட்டை இப்ப கொண்டு வரீங்க பெரியார் திடலுக்கு நான் போயிட்டு வந்தாச்சு" என்று கோபமாக யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து "அண்ணாவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தினீர்கள் பெரியாருக்கு மட்டும் நேரில் போய் மரியாதை இது என்ன கணக்கு" என்று மிஸ்டர் ரீல் கேட்டதும் "கட்சி ஆரம்பிச்சாச்சு இல்ல இனிமே எல்லாம் அரசியல் கணக்கு தான் எனக்கு ஆலோசனை சொல்ல ஆறு பேர் கொண்ட ஒரு குழு இருக்கு அவங்க தான் பெரியார் மாலை போட்டே ஆகணும் என்று சொன்னார்கள் "என்று விஜய் சொன்னதும் "விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லையே "? என்று மிஸ்டர் ரீல் கேட்க "ஆறு பேர் கொண்ட அந்த குழுவிடம் கேட்டேன் திமுக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. அதனால் தான் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தார்கள் நாம் ஆட்சியில் அமர வேண்டுமென்றால் வாழ்த்து சொல்லக்கூடாது" என்று சென்டிமென்டாக டச் செய்தார்கள், நானும் ஓகே சொன்னேன்.
அதேசமயம் த்ரிஷா வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்கள். சுண்டல் கொழுக்கட்டை எல்லாம் கொண்டு வந்து தந்தார்கள் சாப்பிட்டேன்" என்று விஜய் சொன்னதும் நடிகை திரிஷாவும் உங்கள் கட்சியில் ஐக்கியம் ஆவாரா அவர்தான் கொள்கை பரப்புச் செயலாளர் என்றெல்லாம் பேச்சு வருகிறது "என்று மிஸ்டர் ரீல் கேட்க "எப்படியோ என் கட்சி பேசும் பொருளாகி விட்டது பரவாயில்லை சந்தோஷம்" என்று சொல்லி சிரித்தார் விஜய்.
"உங்க கட்சிக்கு வரவங்க எல்லாம் எழுபது பிளஸ் என்கிறார்கள் "என்று மிஸ்டர் ரீல் சொன்னதும் விஜய் ஆச்சரியத்துடன் "இந்த கட்சியில் ரகசியமே இல்ல போல இருக்கு எல்லா ரகசியமும் ஹோல்சேல் விற்பனை ஆகுது போல இருக்கு முதல்ல இதுக்கு முடிவு கட்டணும் புஸ்ஸி ஆனந்து கிட்ட எதுவும் அரசியல் டிஸ்கஸ் பண்ண கூடாது டீ வாங்கி வா சாப்பாடு ஏற்பாடு பண்ணு டிபன் ரெடியா போன்ற வேலையை மட்டும் வாங்கணும் "என்று விஜய் சொல்ல "அதை விடுங்கள் கூட்டணி எல்லாம் எப்படி "என்று மிஸ்டர் ரீல் கேட்க கூட்டணிக்கு நிறைய கட்சி பேசுது நான் ஒரு தகவல் சொன்ன ஷாக் ஆயிடுவீங்க திமுகவில் விரைவில் துணை முதல்வர் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நடிகரே என்னிடம் பேசினார்.
"அப்ப திமுகவுடன் கூட்டணி உண்டு தானா "என்று மிஸ்டர் ரீல் கேட்க, அதற்கு விஜய் "அது தெரியல ஆனால், இது பற்றி நான் திரிஷாவிடம் பேசினேன் என்று ஆரம்பிக்க அப்ப நீங்க சொல்ற அந்த உயர்மட்ட குழு திரிஷா தானா "என்று மிஸ்டர் ரீல் கேட்க அதற்கு விஜய் "அப்படியே வைத்துக் கொள்ளலாம் ஆட்சியில் பங்கு முக்கியம் இரண்டு துணை முதல்வர்,சபாநாயகர், துணை சபாநாயகர் இது தவிர விளையாட்டுத்துறை, கல்வி,, நிதி இலாக்கா இத மட்டும் அவங்க தந்துட்டா போதும் மற்ற இலக்காக்களை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்று யோசனை சொல்லி இருக்கிறார்" என்று சொன்னதும்
மிஸ்டர் ரீல் "உங்களை விட மேடம் ரொம்ப தெளிவா இருக்காங்க "என்றும் மிஸ்டர் ரீல் சொன்னதும் "ஆமா கட்சியோட செயல் தலைவி அவங்க தானே "என்ற விஜய் சொல்ல "இப்போ உங்க அப்பா அரசியலுக்கு வர ஆசைப்படுறாங்க அவருக்கு என்ன பதவி "என்று மிஸ்டர் ரீல் கேட்க அப்புறம் குடும்பக் கட்சி என்று விமர்சனம் எல்லாம் வரும் அவர் வேணா எங்க கட்சிக்கு ஓட்டு போடலாம் அவ்வளவுதான் உறுப்பினராக கூட சேர்க்க முடியாது "என்று சொல்ல "இதுவும் உங்க வருங்கால செயல் தலைவர் மேடம் திரிஷா யோசனை மாதிரி தெரியுது "அடேங்கப்பா கரெக்டா கண்டு பிடிக்கிறீங்க" என்று விஜய் சொல்லவும் அவர் செல்பேசி சினுங்க "சொல்லுங்க மேடம் "என்று சொல்லி உள்ளே போனார் விஜய். ஏதோ உயர் மட்ட குழு ஆலோசனை என்று நினைத்தபடி கிளம்பினார் மிஸ்டர் ரீல்.
Leave a comment
Upload