தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

ரஜினி

20240819194250897.jpeg

தற்போது வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்து முடித்திருக்கும் மஞ்சு வாரியார் அடுத்து விஜய் சேதுபதியுடன் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன்

20240819194503686.jpeg

சினிமாவில் நெருக்கமான முத்த காட்சிகளில் நடிப்பது அவ்வளவு ஈஸி அல்ல. அதற்கு இரண்டு பேர் மத்தியிலும் நல்ல புரிதல் இருக்க வேண்டும் சௌகரியமான சூழலும் இருக்க வேண்டும் என்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

விடாமுயற்சி

அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீஸ் என்று சொன்னார்கள். ஆனால் எல்லாம் வேலை முடிந்து ரெடியாக இன்னும் இரண்டு மூன்று மாதம் ஆகுமாம் எனவே கிறிஸ்துமஸ்க்கு எப்படியாவது ரிலீஸ் பண்ண திட்டம்.

நடிகை ரெஜினா

20240819195004280.jpg

தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான முகம் நடிகை ரெஜினா. நான் பலருடன் தொடர்பில் இருந்தேன், அது உண்மைதான் அதற்கு என்ன இப்ப என்கிறார் ?

மேகா ஆகாஷ்

20240819195249146.jpeg

மேகா ஆகாஷ் சாய் விஷ்ணு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் முதல்வர் இருவரும் கலந்து கொண்டதில் மேகா ஆகாஷ் ரொம்ப ஹாப்பி.

ரித்திகா சிங்

20240819195444371.jpg

ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நடிகை ரித்திகா சிங். கதையில் முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நான் நடிக்கிறேன் என்கிறார் நடிகை.

திரிஷா

20240819195914493.jpg

நடிகை திரிஷா ரிலேஷன்ஷிப் என்பது நமக்கு பாதுகாப்பான மற்றும் சந்தோஷமான இடமாக இருக்க வேண்டும். போராட வேண்டிய இடமாக இருக்கக் கூடாது என்று வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை திரிஷா. இந்த வயதில் இப்படி ஒரு பதிவு ஏன் என்று நெட்டிசன்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20240819200024761.jpg

தமிழ் சினிமாவுக்கு ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு தேவை இல்லை என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சுட சுட

நயன்தாரா

20240819200837272.jpg

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இல்லை சுந்தர்.சி.

பாயல் ராஜ்புத்

2024081920024383.jpg

லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கிவிட்டது. ஆனால் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.