தொடர்கள்
கதை
நேர்மறை எண்ணங்கள். -ஆனந்த் ஶ்ரீனிவாசன் .

20240820172321591.jpg

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று பிரபல ஹோட்டலில் ,
குடும்பத்தோடு டின்னர் சாப்பிட்டுவது மனைவி குழந்தைகளை மகிழ்ச்சியாக
வைத்து கொள்வது நான் நீண்ட வருடமாக கடைப்பிடிக்கும் பழக்கம்.

அன்று சாப்பிட்டு. கொண்டுருக்கும் போது என் மொபைல் அடிக்கவே, அந்தப்
பிரபல ஹாஸ்படலிருந்து தலைமை நர்ஸ் சாந்தி பேசினார் .
அவள் குரலில் பதட்டம்தெரிந்தது. ,”ராஜன் டாக்டர் நாளைக்குக் காலை ஒரு
பெண்மணிக்கு சர்ஜரி செய்யணும் . ஆனால் நரம்பியல் நிபுணர் இந்தப்
பெண்மணிக்கு சர்ஜரி பண்ண அவர் உடம்பு ஃபிட் ஆக உள்ளது என்று
கண்காணிக்க ஒரு இன்டர்னல் ஸ்பெசலிஸ்ட் வந்து நிச்சயமாக இந்தப்
பெண்மணிக்கு சர்ஜரி செய்யலாம் என்று உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே
மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்”.
“இது வரை எட்டு பேரை ஃபோனில் கூப்பிட்டுக் கன்சல்ட் பண்ணும் போது,
எல்லோருக்கும் வேறு வேலை இருப்பதால் தன்னால் வர இயலாது என்று
சொல்லிவிட்டார்கள்.டாக்டர்.
“நீங்கள் ஒன்பதாவது நபர் டாக்டர். பிளீஸ் உங்களால் வந்த ஹெல் பண்ண
முடியுமா டாக்டர்.?”
ஓங்களிடம் வொர்க் பண்ணியதால் உரிமையுடன் கேட்கிறேன் டாக்டர்.
மீண்டும் கெஞ்சினார் சாந்தி.
சாந்தி வயது 45. மிக அனுபவம் வாய்ந்தவர். முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு.
நோயாளிகளிடம் கனிவான பேச்சு. எல்லா
டாக்டர்களும் ஆபரேஷன் தியேட்டரில்உதவிக்குச் சாந்தியை தான்
கூப்பிடுவார்கள்.

எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கிய சாந்திக்கு முதல் முதலில்
இப்படிபட்ட சோதனை.
நான் கொஞ்சம் தயங்கினேன். ஆனால் என் மனைவியும் குழந்தைகளும்
டின்னர் முடிந்து விட்டது. நாங்க டாக்ஸி பிடிச்சு போறோம். நீங்க போங்க
.ஒரு உயிர் காப்பாற்ற பட வேண்டும் .
“இன்டர்னல் மெடிசின் மருத்துவர்கள், என்று அழைக்கப்படுபவர்கள்,
சிக்கலான சூழ்நிலை தவிர்க்கும் நிபுணர்கள். அவர்கள் வயது வந்தோருக்கான
மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மேலும் நோயறிதல்
சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், கடுமையான நீண்ட கால நோய்களை
நிர்வகிப்பதற்கும், பல சிக்கலான நாட்பட்ட நிலைமைகளைக் கொண்ட
நோயாளிகளுக்கு உதவுவதற்கும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.
இந்தப் பயிற்சியானது விரிவாக, நீண்ட நோயாளிகளுக்குச் சிறப்புக்
கவனிப்பை வழங்குவது . தனிக் கவனம் செலுத்துவது போன்ற வேலைகள்.
இப்படிபட்ட நிபுணர்கள் மருத்துவ உலகில் நிறையப் பேர்; நானும் அப்படி
இருந்ததினால் சாந்தி என்னைக் கூப்பிட்டு இருக்கிறாள்.
.என் வருகைக்காக வாசலில் காத்தருந்த சாந்தியுடம்,
“ஆமாம் நோயாளி எப்ப அட்மிட் ஆணாங்க”?
“இரண்டு நாள் முன்பு கோமாவில் அட்மிட் ஆனார் எந்த டாக்டரும் சிகிச்சை
அளிக்க முடியல”.
அதனால் தான் நியூரோ சர்ஜன் ஒரு இன்டர்ன்ல் மெடிசின் ஸ்பெசலிஸ்ட்
அறிவுரைப்படி, அவர் விளக்கம் பெற்ற பிறகு, இந்தச் சிகிச்சையை நாளை
காலை நடத்த திட்டமிட்டு இருந்தார்”.
“அதான் ஓங்களைக் கூப்பிட்டேன் டாக்டர்.”

நான் மிக வேகமாக நோயாளி இருக்கும் அறைக்குச் சென்றேன். சாந்தி
மெதுவாக என்னைத் தொடர்ந்தாள் .
அங்குச் சென்று பார்த்த போது அறுபது வயதான குண்டான பெண்மணி தன்
கண்களை மூடிக்கொண்டு, தன் இரு கைகளையும் நேராக வைத்துக்கொண்டு
ஸ்டடியாகப் படுத்து இருந்தார். முகத்தில் . சோர்வு ரேகைகள்.
நான் மட்டும் அந்த அறையில் இருந்ததால், மேலும் கதவு மூடி இருப்பதால்,
அவளது வலது காதருகே சென்று “எழுந்திருங்க எழுந்திருங்க” என்று
அஞ்சாறு தடவை சொன்னேன்.”.
என்ன ஆச்சர்யம்! அவள் அலறிக்கொண்டே சத்தம் போட்டு பயந்து, தீடீரென
எழுந்து உக்கார்ந்தாள் .
“நான் எங்கு இருக்கிறேன்.? எப்படி வந்தேன்? எனக்கு என்ன நடக்குது.
?அதற்குள் மற்ற நர்ஸ்கள் உள்ளே வந்தார்கள்..
“ஓ மை காட் !வாட் ஏ மிராகல்!.” நீங்க அவங்களைக் கோமாவிலுருந்து
காப்பாற்றி விட்டீர்கள்.”!
சந்தோச துள்ளல் எல்லா நர்ஸ்களுடமிருந்து.

“இது ஒன்னும் மிராகல் இல்லை. நான் அவர்கள் காதில் வேகமாகக்
கத்தினேன். அவர்கள் எழுந்து விட்டார்கள்”
. “ஆனால் சாந்தி அதை நம்ப மறுத்தாள். நான் உங்க பின்னாடிதான் வந்தேன்.
என்னால் நம்பவே முடிய வில்லை. டாக்டர் “
அந்தப் பெண்மணிக்கு தண்ணீரும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்
இன்னொரு நர்ஸ்.

“அவர் மனதை ஒருமைபடுத்த்வதற்காக மட்டும் தான் இந்தக்
காரியம்.செய்தேன் இது முடியாதது என்று நினைப்பவர்கள் மத்தியில் அந்தப்
பெண்மணியை
கோமாவிலிருந்து காப்பாற்றியதாக உணருகிறேன்.!”

ஏதோ ஒரு பவர் உங்களிடம் உள்ளது. என்றாள் சாந்தி
“இப்பவும் நான் சொல்றேன் நான் ஒன்றும் மேஜிக் செய்யவில்லை. ஒரு
நேர்மறை எண்ணத்தை அவரிடம் கொஞ்சம் வேகமாகச்
சொன்னேன்.அவ்வளவு தான்” .
இப்போது நான் இன்டர்ன்ல் மெடிசின் ஸ்பெசிலிஸ்ட் நம்பர் ஒன்பதிலுருந்து
நம்பர் ஒன் வந்துள்ளதாக நினைக்கிறேன்
அப்படித்தானே சாந்தி”!சிரித்துக் கொண்டே சொன்னார் டாக்டர்.
.”ஆமாம் டாக்டர் “
மறுநாள் அந்த வயதான பெண்மணியின் மகளும் மருமகனும் தங்களை
அறிமுகம் செய்துகொண்டு என் கிளினிக் வந்து நன்றி சொல்ல வந்தார்கள். .
பணக்கார தோரணை அதிகம் தெரிந்தது.
“ என்ன நடந்தது ராதிகா மேடம்?. “
“எனக்கும் என் கணவருககும் அம்மாவின் சொத்துக்கள் பங்கு பிரிப்பதில் திடீர்
சண்டை வந்தது. என் அம்மாவுடன் தர்க்கம் செய்தார் என் கணவர். அதிகக்
கூச்சல் என் கணவர் போட, என் அம்மா திடீரென மயக்கமாகி விடவே, அவர்
இறந்து விட்டார், இல்லை இறக்கும் தருவாயில் இருக்கிறார், என்று
நினைத்து அந்தப் பிரபலஆஸ்பத்திரியில். எமர்ஜன்ஸி வார்டில் அட்மிட்
செய்தோம் டாக்டர்.”

“ஏற்கனவே அம்மாவின் பதட்டமான சூழ்நிலை .அத்துடன் நீடில்ஸ் மூலம்
மருந்துகள் முதுகு எலும்பிலும் கைகளில் ஏற்றப்பட்டு டிரேட்மென்ட் செய்தும்
சரியாக வில்லை. கோமோ நிலைமை தொடர்ந்து இருந்தது. மறு நாள்
ஆபரேஷன் என்று சொன்ன போது எங்களுக்குப் பயத்தைக் கொடுத்தது.”
“ஆமாம் விளக்குகள் ஒளி நர்சுகளின் அங்கும் இங்கும் ஓட்டம், டாக்டர்களின்
உத்திரவுகள் , சலசலப்புகள் எல்லாவற்றையும் பார்த்த ஒங்க அம்மாவுக்கு
ஏற்கனவே இருந்த மெண்ட்டல் டிஸ்டிரஸ் இன்னும் அதிகமாகி, அது
கன்வெர்ட் ஆகி கோமாவாக மாறருக்கு.”
“எவ்வளவுக்கு எவ்வளவு மருத்துவம் பார்த்தும் அது தனக்குத்
தேவையில்லாத நிலையில் தான் உணர்ந்த போதும் , நான் வந்து எழுத்துரு
என்று சொல்கிற வரைக்கும் அப்படி இருக்கும் படி சூழ்நிலை ஆனது.” .
“நம்மில் பெரும்பாலோர் கோமாவில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் நாம் விழிப்போடு இருப்பதில்லை.வாழ்க்கையை என்ஜாய்
பன்னுவதில்லை.”
“நம்மை நாமே புதிரோடும், மனதில் பயத்தோடும், வாழ்கிறோம் . சில
சமயங்களில் நாம் பூமியிலுருந்து கீழ விழுவதாக உணர்கிறோம் “.
.
“பெரியவர் நாங்கள் ஒரு சிலரை தவிர முழுமையாக விழித்திருந்து
வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம் என்றும் சொல்வதிற்க்கல்லை”.
“உடம்பு முற்றிலும் மனநலம் சார்ந்தது, ஒருவரின் உடம்புக்கு ஆத்மாவும்
(spirit) அதாவது உடம்பின் உயிர் சக்தி மிக முக்கியம்.அதோடு மன நலமும்
மிக முக்கியம். இங்குத் தான் நிறையப் பேர் கோட்டை விடுகிறோம்”.
“சில பேருக்கு பிறந்ததிலிருந்து இயற்கையாகவே சில சக்திகளிருக்கும் .அது
வியாதி, ஏழ்மை, எதிர்வினை இவற்றை எல்லாம் எதிர்த்து நிற்கும்”.
“ஒரு மருத்துவராக நான் சொல்வது நம்முடைய உடம்பு மிகவும் பலமான
மற்றும் ஆர்வம் அதிகமுள்ள ஸ்பிரிட் பொறுத்து தான் அமையும்!”

“சில பேருக்கு நிறைய வியாதிகள் இருக்கும் நாங்களும் மருந்துகளும்
கொடுப்போம். ஆனால் அதே சமயம் அவர்களுக்கு அடக்க முடியாத ஆசை
தான் நீண்ட நாள் வாழவேண்டும் என்று இருக்கும்.”
.”அந்த ஆசை தான் ஒருவரின் பயோ கெமிஸ்ட்ரி மூலம் அவர்கள் உணர்ச்சி
பெருக்கில் அவர்களின் வியாதி தன்மையைக் குறைத்து, நார்மல் நிலைக்கு
வருகிறது..அவர்கள் வாழ விரும்புகிறார்கள் இறக்க மறுக்கிறார்கள்.”

மேலும் மகிழ்ச்சியற்ற பல நோயாளிகளையும் நான் பார்த்துள்ளேன்; அவர்கள்
அதிகமாக வாழ வேண்டும் என்று உணர்கிறார்கள்.
அதே சமயம் என் மருந்து பெட்டியில் இருக்கும் மருந்துகள் வாழ
ஆசையில்லலாத மனிதர்களுக்குக் குணமடையச் செய்யாது. அவர்களைத்
திரும்ப வாழ வைப்பது பவர்ஃபுல் மருந்து எது தெரியுமா? அன்பு மட்டுமே.

அன்பினால் எதையும் சாதிக்க முடியும். அன்பு இருக்குமிடத்தில்
ஆரோக்கியமும் செல்வமும் தானாக வரும்.
“உங்கள் எண்ணத்தை, செயல்களை, வயதானவர்களிட ம் கட்டாயமாகத்
திணிக்காதீர்கள்.
அவர்களை அவர்கள் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள்.
அவர்களை எந்தக் காரணம் கொண்டும் பதட்டமடையச் செய்யாதீர்கள். பதட்ட
நிலை ஹார்ட் அட்டாக்கில் கொண்டுவிடும் “
“அன்பாகப் பேசுங்கள் . நீங்களும் ஒருநாள் வயதானவர் ஆகும் போது இந்த
நிலைமை புரிய வரும்”.
“ஒங்க சுயநலம் தான் ஒங்க அம்மாவை இந்த அளவுக்குக் கொண்டு
வந்துருக்கு”.

தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்கள் இருவரும் .
எப்போதும் விழித்திரு எழுந்திரு.. என்ற கொள்கையை மனதில் பதிய
வையுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே ஒங்களுக்கு மட்டுமல்ல
முதியோர்களுக்கும் கூட.