தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20240819192527140.jpeg

ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து உரிய நேரத்தில் வலுவாக பேசுவோம் திருமாவளவன் உறுதி.

இந்த உரிய நேரம் வலுவா இதெல்லாம் எப்போது என்று தான் தெரியல !!

விடுதலை சிறுத்தை மது ஒழிப்பு மாநாடு திமுகவும் பங்கேற்கும்.

அதாவது அதிமுக வராது அப்படித்தானே !!

என் பாதை தனி, என் பயணமும் தனி சீமான் பேட்டி.

அதாவது டெபாசிட் தான் அவர் இலக்கு !!

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது தமிழிசை சௌந்தர்ராஜன்.

ஆமாக்கா இப்பல்லாம் நாடகம் எல்லாம் யார் பார்க்கிறாங்க ஒன்லி சீரியல் தான் !!

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்கிறார்கள் அது எத்தனை படி என்று சொன்னால் நல்லது, ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கேள்வி.

ஒரு பத்தாயிரம் படி என்று வைத்துக்கொள்ளுங்கள் !!

மருத்துவர் போராட்டத்தில் அரசியல் சாயம் உள்ளது மம்தா பானர்ஜி.

அக்கா உங்க சாயம் தான் வெளுத்துப் போச்சு !!

இன்னும் இருபது சீட்டு கிடைத்திருந்தால் பாஜகவை சிறையில் தள்ளி இருப்போம் மல்லிகார்ஜுன கார்கே.

இப்ப அவங்க அந்த வேலையை செய்றாங்க !!

திமுக கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம் வைகோ.

இப்ப இந்த டீடைல்ஸ் தேவையா !!

சாதியை வைத்து திமுக அரசியல் சூழ்ச்சி செய்கிறது அன்புமணி ராமதாஸ்.

உங்கள் கட்சி கொள்கை அவங்க அபகரிச்சிட்டாங்க அப்படித்தானே சின்னய்யா

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பீகாரில் மதுவிலக்கு ரத்து பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி.

தமிழ்நாடு பாதிப்பு இதுதான் !!

இந்தியாவிலேயே மோசமான ஜாதி கட்சி விடுதலை சிறுத்தை கட்சி, பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா விமர்சனம்.

இப்படி எல்லாம் சொன்னா மருத்துவர் அய்யா கோச்சிக்க மாட்டாரா !!

தமிழகத்தில் மதுவை எதிர்த்து மதிமுக போராடியது போல் வேறு எந்த கட்சியும் போராடியது கிடையாது வைகோ.

அப்புறம் இது வீண் வேலை என்று கூட்டணி வைத்துவிட்டார் !!

தமிழகத்தில் அதிமுக, திமுக என திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வர முடியும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.

உண்மைய சொல்றாராம் !!

மது ஆலை அதிபர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு திருமாவளவன் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அன்புமணி ராமதாஸ் கேள்வி.

அது வேறு இது வேறு அப்படித்தானே அண்ணா !!

பழனிச்சாமி ஆட்சியை விட திமுக ஆட்சி மோசமாக உள்ளது டிடிவி தினகரன்.

பழனிச்சாமிக்கு பாராட்டா அல்லது திமுகவுக்கு தாக்குதலா ஒன்னும் புரியல.