தொடர்கள்
கவிதை
அமரகவி- கோவை பாலா

20240813181413473.png

எட்டையபுரத்தில் பிறந்து,

ஏட்டுத்தமிழுக்கு உயிர்தந்து,

எட்டா புகழுக்கு உயர்ந்து,

மிட்டாக முண்டாசு அணிந்து,

மிடுக்காக மீசை முறுக்கி,

எப்போதும் கர்வத்துடன் இரு...!

யாருக்கும் யாரும், இங்கு

சலைத்தவர்கள் அல்ல என்று...

தலைநிமிர்த்திச் சொன்ன

அமரகவியின் நினவு நாளின்று...!

கவலையும் பயமும் பகைவர் எனக்கு,

வென்று தீர்த்தேன் பகைவர் எதற்கு..!

மரணத்தை வென்றேன், அதனால்

நான் அமரன் ஆனேன், என்றான்...!

ஒற்றை வரியில் எத்தனை கவிதை,

வெற்று மனதில் நம்பிக்கை விதை...!

அன்று படித்ததில் ஏதோ ஞாபகம்...!

மீண்டு வருகிறது , கீழே இதோ....

அச்சம் தவிர் என்றான்...

ஈகைத் திறன் என்றான்...

எண்ணுவ துயர்வு என்றான்...

ஏறு போல் நட என்றான்...

ஒற்றுமை வலிமை என்றான்...

ஓய்த லொழி என்றான்...

கற்ற தொழுகு என்றான்...

காலம் அழியேல் என்றான்...

கீழோர்க்கு அஞ்சேல் என்றான்

கெடுப்பது சோர்வு என்றான்

சூரரைப் போற்று என்றான்

நேர்பட பேசு என்றான்...

செய்வது துணிந்து செய் என்றான் ..

சிதையா நெஞ்சு கொள் என்றான்..

சேர்க்கை அழியேலுல் என்றான் ...

தாழ்ந்து நடவேல் என்றான்...

தோல்வியில் கலங்கேல் என்றான்...

நெற்றி சுருக்கி டேல் என்றான்...

வெற்றி பெற அத்தனை வேண்டாம்...!

விடியும் பொழுதில் ஒன்று இரண்டு...

முடியும் உன்னால்,படிக்க முயன்றிடு..!

உரக்கப் படி, நம்பிக்கை பெற்றிடு..!

மலையைக் கண்டு வியந்திடாதே...!

மலைமீது நீ ஏறி நின்றால், அதுவும்

உன் காலின் கீழ் என்றுணர்வாய்...!

வெற்றிகளும் இப்படிதான் என்றான் !

துன்பம் நேரும் வேளை, துணிச்சல் எனும் கடிவாளத்தால் கட்டி,மனக் குதிரையைப் பிடித்து நிறுத்து,அது

யோகப் பயிற்சி என்றான்...!

சரியோ தவறோ, வாழ்கின்ற ஒரு வாழ்வை,

உனக்குப் பிடித்தபடி வாழ்,

மனச்சாட்சியோடு வாழ்...!

தீர்வுகள் சொல்ல, இங்கு யாரும் நல்லவரும் இல்லை...!

தீர்வுகள் கேட்க, நீ கெட்டவனும் இல்லை...என்றான்...!

அவன் நினைவு நாள்அன்றி,

நாளும் அவனை நினைத்திடு...!

நமக்கென்று அவன் சொன்ன

நல்வரிகள் வழியில் நடந்திடு...!

அமரகவியை நெஞ்சில் நிறுத்து,

அசுரபலமென நம்பிக்கை உயர்த்து...!