தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 101 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240812115041604.jpeg

ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.

கடந்த 100 வாரங்களாக ஸ்ரீ மகா பெரியவா , ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ பகவான் ரமணர் ஆகியோரின் அனுகிரஹங்களை பெற்றோம். தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

101வது வாரமான இந்த வாரம் மிக அறிய பொக்கிஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

ஸ்ரீ பகவத்பாதாள் அருளிய ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா

ஸ்ரீ ஆதி சங்கரர் அவர்களின் கேள்வி பதில் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அளிக்கிறது. அவற்றின் தொகுப்பை மறைந்த ஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் அவர்களின் பிரவசனம் மூலம் கேட்போம்.

குருவருள் பெறுவோம்