தமிழகத்தில் ஜூலை மின் கட்டணம் உயர வாய்ப்பு
ஆமா இப்போதைக்கு தேர்தல் எதுவும் இல்ல தானே! !
பாஜக அதிமுக கூட்டணி வைத்திருந்தால் திமுகவுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைத்து இருக்காது தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து
பாதிக்கப்பட்டவர் சொல்கிறார்! !
பங்கு சந்தையில் ஊழல் மோடி அமித்ஷா மீது ராகுல் புகார்
மறுபடியும் முதல்ல இருந்தா? !!
நவீன் பட்நாயக்கின்நம்பிக்கைக்குரிய விகே பாண்டியன் மாயம்?
அமலாக்கத்துறை பயம் தான் காரணம்! !
கங்கன ராணாவத் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போய்விட்டாரோ! !
அதிமுகவுடன் கூட்டணி கிடையாது அண்ணாமலை திட்டவட்டம்
அண்ணனுக்கு மூன்றாவது இடம் நிரந்தரம்! !!
தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள்
ஜனங்க வண்டியெல்லாம் விற்றுவிட்டு நடராஜா சர்வீஸ் தொடங்கி விடப் போகிறார்கள்! !!!
நாற்பதும் நமதே என்ற கோஷம் நினைவாகிவிட்டது
அவ்வளவுதான் வேற என்ன இப்படியே சந்தோஷப்பட வேண்டியது தான்! !
பாமக வாக்குகளால் தான் பாஜகவின் வாக்கு விகிதம் உயர்ந்தது செல்வப் பெருந்தகை
இவங்க ஏதோ தனியா நின்று ஜெயிச்ச மாதிரி ஒரு நினைப்பு! !!!!
ஒற்றைக் குச்சி ஒடிப்பது சுலபம் கற்றை குச்சி முறிப்பது கடினம் ஓபிஎஸ்
பலாப்பழம் சாப்பிட்ட பாட்டெல்லாம் வரும் போல இருக்கு! !!!
ஆந்திரா பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவாரா? காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கேள்வி
அது இப்ப நிதீஷ்குமார் சந்திரபாபு நாயுடு டிபார்ட்மெண்ட் அது அவங்க பாத்துப்பாங்க நீங்க கவலைப்பட வேண்டாம்! !!!
உதவி பெற்ற மக்கள் எங்கே போனார்கள்? ஜெகன்மோகன் ரெட்டி ஆதங்கம்
அதை உங்கள் எம்பி, எம்எல்ஏக்களிடம் கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்களே! !!
கர்நாடகாவில் 20க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிய காங்கிரஸருக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது கர்நாடக பாஜக தலைவர்
இப்ப நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கீங்களா! !!
இனிமேல் தான் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் -பிரதமர் மோடி
சந்திரபாபு நாயுடு நிதீஷ் குமார் ஓகே சொல்லிட்டாங்களா! !!!
மோடி தோற்று விட்டார் மம்தா பானர்ஜி
இப்படியே புலம்பிக்கொண்டே இருங்க அவர் மூன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆகிவிட்டார்! !!!
Leave a comment
Upload