அசாம் மாநிலம், சோனிபட் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ரங்கபாரா சட்டமன்றத் தொகுதி, புலாகுரி நேபாளி பாம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். சுமார் 1,200 குடும்ப உறுப்பினர்கள் கொண்ட இக்குடும்பத்தினர் அனைவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள்.
இப்பகுதியில் சுமார் 54 ஆண்டுகள் கிராமத் தலைவராக இருந்த ரான்பகதூர் தாபாவுக்கு 5 மனைவிகள், 12 மகன்கள் மற்றும் 9 மகள்கள் உள்ளனர். இவருக்கு 56 பேரக்குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த 1997-ம் ஆண்டு சுமார் 54 ஆண்டுகள் கிராமத் தலைவராக ரான்பகதூர் தாபா காலமானார். தற்போது அவரது மகன் டில் பகதூர் தாபா கிராமத் தலைவராக இருந்து வருகிறார்.
இதுகுறித்து கிராமத் தலைவர் டில் பகதூர் கூறுகையில், ‘‘புலாகுரி நேபாளி பாம் பகுதியில் சுமார் 350 வாக்காளர்களுடன் கூடிய மிகப்பெரிய குடும்பம் எனப் பெயர் பெற்றிருக்கிறோம். எனினும், எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் ஒன்றுகூடி வாக்களிப்பது மிக கடினம். ஏனெனில், எங்களில் பலர் பிழைப்பு தேடி பல்வேறு மாநிலங்களில் இடம்பெயர்ந்துள்ளனர். அதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 350 பேரும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வாக்களிப்பது சாத்தியமில்லை. எனக்குகூட 3 மனைவிகள், 8 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்!’’ என்று குறிப்பிட்டார்.
இதுக்கு இவிங்களே ஒரு கட்சி ஆரம்பிச்சுருலாம்...போலிருக்கே....!!!
Leave a comment
Upload