தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் பிரச்சாரத்தில் ரசனை குறைவான ஆபாச பேச்சுக்கள், தனிநபர் தாக்குதல்கள் என்று பிரச்சாரத்தில் ஒரு மோசமான முன் உதாரணத்தை அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். கஞ்சா உதயநிதி என்கிறார் எடப்பாடி இதுக்கு காரணம் பிரச்சாரத்தில் எடப்பாடியை தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசி வருகிறார் உதயநிதி,அதற்குப் பதிலடி தான் இந்த கஞ்சா உதயநிதி விமர்சனம்.
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இந்தி எதிர்ப்பு என்பது பிஞ்சு போன செருப்பு என்று தமிழ் உணர்வாளர்களின் மொழிப்போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்.திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பெண் உரிமை பெண்ணியம் பற்றி சற்று உரக்க பேசும் கனிமொழி மேடையில் அமர்ந்திருக்கும் போதே அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் பிறப்பை கொச்சைப்படுத்துவதாக அவர் தாயை மிக மோசமான ஒரு வார்த்தையை சொல்லி விமர்சிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த கனிமொழி இந்த கொச்சைப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரும் அதை ரசிக்கிறார். இதுதான் பெண்ணுரிமை பற்றி பெண்ணியம் பற்றி பேசும் கனிமொழியின் உண்மை முகம இதுதானோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.
அதே சமயம் இமாச்சலப் பிரதேசத்தில் மாண்டி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத்தை அறிவித்தது. உடனே உத்திரபிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த பெண் தலைவர் கங்கனா ரனாவத் விலை மகளிர் கதாபாத்திரத்தில் நடித்ததை குறிப்பிட்டு இப்படிப்பட்டவர் எல்லாம் எம் பி ஆவதா என்று விமர்சனம் செய்திருந்தார். இந்தப் பேச்சை காங்கிரஸ் உடனே கண்டித்தது அதுமட்டுமல்ல அவருக்கு தேர்தலில் போட்டியிட இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை.
தமிழகத்தில் பெண்ணுரிமை பெண் சமத்துவம் பற்றி எல்லாம் பேசும் திமுக தலைவர்கள் பெரும்பாலர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை பழக்க வழக்கமாகக் கொண்டவர்கள் தான். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பெண்களைப் பார்த்து முகமெல்லாம் பளபள என்று இருக்கிறது ஒரு குறிப்பிட்ட முகத்துக்கு பூசும் கிரீமை குறிப்பிட்டு அது பூசி இருக்கிறீர்களா.... ஓ ஆயிரம் ரூபாய் வந்து விட்டதா என்று நக்கலாக கேட்டிருக்கிறார். ஏதோ பெண்கள் இவர்கள் தரும் ஆயிரம் ரூபாயில் தான் முகத்தை பளபளவென்று வைத்திருப்பது போல் இருந்தது அவரது பேச்சு.
எதற்கெடுத்தாலும் பகுத்தறிவு மண் என்று பேசும் இந்த திராவிட தலைவர்களிடம் இதற்கு மேல் நாம் எதிர்பார்க்க முடியாது .இந்த மட்டமான அரசியல் ரசனையே இவர்களுக்கு எதிராக திரும்பும்.
Leave a comment
Upload