தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240201183732427.jpeg

வள்ளலருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? அன்புமணி ராமதாஸ் கேள்வி

வேற என்ன தேர்தல் தான் !!

சீமான் கட்சியில் மனைவிக்கு பதவி

அடடா இனிமே குடும்ப அரசியல் பத்தி பேச முடியாதா ?

சசிகலா ரஜினி சந்திப்பு

தலைவர் இப்ப யார் கூப்பிட்டாலும் போயிடுறாரு !

நல்ல கூட்டணி அமையும் எடப்பாடி நம்பிக்கை.

தேர்தல் முடிந்த பிறகா தலைவரே ?

திமுகவிற்கு ஸ்டிக்கர் ஒட்டுகிற கட்சி மார்க்சிஸ்ட் அண்ணாமலை.

அதுதானே கூட்டணி தர்மம் !!

நான் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எனவே பார்லிமென்ட் தேர்வாகி அங்கு பணியாற்ற விரும்புகிறேன். பாரதிய ஜனதாவில் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி விளக்கம்.

அக்கா ரொம்ப யோசிக்குது !

கூட்டணி இல்லை என முடிவு செய்து விட்டீர்கள் போலிருக்கு பேரவை தலைவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு பதில்.

பேரவைத் தலைவர் கூட அரசியல் பேசலாம் போல இருக்கு !!

காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை விஜயதாரணி.

ஆமா அதனால தான் உங்களுக்கு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு தந்தாங்க !!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உதிர்ந்த இலைகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்.

உங்க தலைவி உதிர்ந்த ரோமம்னு சொன்னாங்களே !!

தமிழகத்தில் இருந்து நாம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் நமக்கு திரும்ப 29 காசு வருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் செலுத்தினால் அவர்களுக்கு 2.73 காசு வருகிறது கார்த்திக் சிதம்பரம்.

தலைவரே கணக்கு தப்பா இருக்க மாதிரி தெரியுது எதுக்கு உங்க அப்பா கிட்ட ஒருவாட்டி கேளுங்க !!

முதல் முறை வாக்காளர்கள் திரண்டு வர வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்.

ஓ அப்பத்தான் நீங்க நான் 400 இடங்கள் பிடிக்க முடியுமா !!

தற்சமயம் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது காங்கிரஸ் எம்பி சசிதரூர்.

நெசமா ? உங்க அம்மா சத்தியமா !!

நக்சல் தீவிரவாதம் 52% குறைந்துவிட்டது அமித்ஷா கருத்து.

அப்போ மீதி 48 சதவீதம் இருக்குன்னு அர்த்தமாகுது அமைச்சரே!!

முறைகேடு நடந்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் தகவல்.

ஆமா நீங்க அப்படித்தான் சும்மா சொல்லிக்கிட்டு இருக்கீங்க !!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவை மக்கள் தேர்ந்தெடுக்க தயார் எடப்பாடி நம்பிக்கை.

ஆனா வேட்பாளர்கள் அந்த நம்பிக்கை வர மாட்டேங்குது தலைவரே !!

மக்கள் பிரதிநிதி ஆவது என் விருப்பம் தமிழிசை சௌந்தரராஜன்.

உங்க விருப்பம் இருக்கட்டும் மக்கள் விருப்பம் என்னவென்று தெரிஞ்சுட்டீங்களா

திருமாவளவன் ஏன் எதிர்காலத்தில் துணை முதல்வராக வரக்கூடாது ? ஆதவ் அர்ஜுனா.

அண்ணன் கட்சிக்கு புதுசு இல்ல இப்படித்தான் பேசுவாரு !!