கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். கொஞ்ச நாள் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை. சில நாள் அமலாக்கத்துறை காவலில். இப்போது புழல் சிறை மருத்துவமனையில். நடுவில் ஒருநாள் ஸ்டான்லி மருத்துவமனையில் கால் மரத்துப் போகிறது என்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் புழல் திரும்பினார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது அமலாக்கத்துறை. புழல் சிறையில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை கூட தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி விவரங்களை சேகரித்துக் கொள்கிறது. இந்த விஷயம் எல்லாம் தெரிந்து கொண்டு உஷாரான ஆளும் தரப்பு தற்சமயம் அவருடன் தொடர்பு எல்லையில் இல்லை. அதே சமயம் சட்டப்படி அவரை ஜாமினில் எடுக்க எல்லாம் முயற்சிகளும் இதுவரை செய்து கொண்டு தான் இருக்கிறது. ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டு முறை நிராகரித்துவிட்டது. அதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்காக திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ வாதாடினார். செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து அவருக்கு ஜாமீன் வழங்கினால் மேலும் உயர் சிகிச்சைக்கு வசதியாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தார்கள். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தரக்கூடாது என்று தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற வாதத்தை அமலாக்கத்துறை ஏற்றுக்கொள்ளவில்லை. இவை எல்லாமே மிகைப்படுத்தப்பட்டு சொல்லப்படுகிறது செந்தில் பாலாஜி சிறையில் சகல வசதியுடன் சவுரியமாகத்தான் இருக்கிறார். அதாவது அவர் அங்கு சிறைகைதி போல் இல்லாமல் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்பது அமலாக்கத்துறை வாதம் .தவிர விசாரணையின் போது அவர் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்பதை அமலாக்கத்துறை தனது வாதத்தின் போது திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறது. அவர் மீது குற்றம் நிருபணம் ஆகிவிட்டது ஆதாரங்களும் அவருக்கு சாதகமாக இல்லை என்கிறது அமலாக்கத்துறை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவருடைய சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருக்கிறார் என்பதிலிருந்து இந்த குற்றத்தின் முக்கியத்துவத்தை இந்த நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்பது ஒரு தந்திர நடவடிக்கை இது செந்தில் பாலாஜிக்கு கைவந்த கலை. அதற்கு எங்களால் பல உதாரணங்களை சொல்ல முடியும். செந்தில் பாலாஜி ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் ஆனாலும் ஆவணங்களை தமிழில் தருமாறுகோரி வற்புறுத்தி வருகிறார் காரணம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழில் புலமை பெற்றவர்கள் இல்லை என்பதால் திட்டமிட்டு அவர் இந்த கோரிக்கையை வைக்கிறார் அவரைப் பொறுத்தவரை இந்த வழக்கை தாமதப்படுத்துவது ஜாமீன் பெற்று வெளியே சென்று சாட்சிகளை கலைப்பது என்பதுதான் இதற்கு இன்னொரு உதாரணமும் இந்த நீதிமன்றத்திற்கு நாங்கள் சொல்ல விரும்புகிறோம். அவர் இப்போது சிறையில் இருந்தாலும் அமைச்சராக தொடர்கிறார் இதைவிட அவர் செல்வாக்கு உள்ள நபர் என்பதற்கு இந்த நீதிமன்றத்திற்கு ஆதாரங்கள் தேவையில்லை. முதலில் அவர் சகோதரரை அமலாக்கத்துறை முன் சரணடைந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தரச் சொல்லி இந்த நீதிமன்றம் உத்தரவு போட வேண்டும். இந்த வழக்கை திசை திருப்பும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது அவர் எங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கடுமையாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் மருத்துவமனை அறிக்கைகள் மருத்துவ காரணங்கள் ஏற்கும் படி இல்லை அவர் சாட்சியை கலைக்க கூடும் என்ற அமலாக்கத்துறை வாதம் ஏற்கக் கூடியது தான்.செந்தில் பாலாஜி சகோதரரை விரைவில் கைது செய்ய உத்தரவிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். உடனே அன்றே உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விசாரணை இந்த மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
அதேசமயம் ஜாமீன் மனு விஷயத்தில் ஆளுங்கட்சியின் நடவடிக்கையில் செந்தில் பாலாஜிக்கு திருப்தி இல்லை என்கிறார்கள் அவரது தரப்பினர்.
Leave a comment
Upload