வருமானவரித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு ரயிலில் சந்திக்க நேர்ந்தது. சமீபத்தில் நடக்கும் வருமான வரி சோதனை பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் தன் காலத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனை சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.
எண்பதுகளில் அந்த நடிகை உச்சத்தில் இருந்தார். அம்மன் வேடம் உள்பட கதாநாயகர்களுடன் ஆடிப்பாடி நடிக்கும் வேடம் அவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை. அவ்வளவு பிசியான நடிகை அவர். அவர் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு செல்ல நாங்கள் முடிவு செய்து புறப்பட்டோம். நடிகை என்பதால் ஒரு பெண் ஊழியரையும் சோதனைக்கு அழைத்துச் சென்றோம். அந்தப் பெண் ஊழியர் அந்த நடிகையை பார்த்தவுடன் சந்தோஷம் மிகுதியால் வந்த வேலையை பார்க்காமல் நான் உங்கள் ரசிகை என்று அவர் நடித்த படங்களை பற்றி எல்லாம் சிலாகித்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரே எரிச்சல் வந்த வேலையை பார்க்காமல் இப்படி அந்த நடிகையிடம் கொஞ்சி கொண்டிருக்கிறார் என்று. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்ற எரிச்சல் வேறு. அப்போது அந்த நடிகையின் ஒப்பனை அறைக்கு போன போது அந்த அறை மிகப்பெரிய அறை நான்கு ஐந்து பீரோக்கள் இருந்தன. பீரோக்குள் முழுவதும் புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பெண்களுக்கே உரிய இயற்கையான ஈர்ப்பில் எனது சகப் பெண் ஊழியர் அந்த பீரோக்களில் இருந்த புடவைகளை எல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டு கொண்டு ஒரு குறிப்பிட்ட புடவை எடுத்து இது எனக்கு மிகவும் பிடித்த கலர் என்று சொல்லி அருகில் இருந்த கண்ணாடியில் தனது தோளில் வைத்துப் பார்த்து அழகு பார்த்தபோது அந்தப் புடவையிலிருந்து ஒரு வைர நெக்லஸ் பொத் என்று கீழே விழுந்தது. அந்த நெக்லஸ் எடுத்துக் கொண்ட அந்தப் பெண் ஊழியர் வேறு சில புடவைகளை எடுத்து உதர பணம் நகை என்று கொட்ட ஆரம்பித்தது உடனே சந்தோஷ மிகுதியில் அந்தப் பெண் சார் நாம் தேடியது இங்கே இருக்கிறது என்று என்னை அழைக்க எல்லா புடவைகளும் ஆராய்ந்து பார்த்ததில் ஏகப்பட்ட வரி ஏய்ப்பு கண்டுபிடித்தோம்.
முதலில் சகப் பெண் ஊழியர் மீது எரிச்சல் பட்ட நான் அவரைப் பாராட்டினேன், அரசாங்கமும் அவரது இந்த நடவடிக்கைக்கு பாராட்டி வெகுமதி அளித்தது. புடவை ஆசை நல்ல விஷயம் தான் போலும் என்று நானும் அப்போது முடிவு செய்தேன். இந்த அனுபவத்தை என்னிடம் சொன்னார். எனக்கும் என் மனைவியின் புடவை ஆசை பற்றிய விஷயத்தில் மரியாதை ஏற்பட்டது.
நான் தினம் செய்தித்தாள் வாங்கப் போகும் போது என்னைப் போன்ற ஒரு மூத்த குடிமகன் என்னைப் பார்த்து வணக்கம் சொல்லி ஒவ்வொரு முறையும் அவர் ஏதாவது ஒரு பிரச்சனையை சொல்வார். காலையில் எழுந்தவுடன் காபி குடிக்க ஆசை. இன்னும் என் மருமகள் எழுந்திருக்கவில்லை என்பார். இன்னொரு தினம் ஒரே சளி தொல்லை நேற்று பூரா தூங்கவில்லை என்பார். முட்டி வலி டாக்டரிடம் அழைத்துச் செல் என்று என் மகனிடம் சொன்னேன் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போ நல்லா கவனிப்பாங்க என்று சொல்கிறான் என்று அலுத்துக் கொண்டார். உண்மையில் அவர் யார் அவர் பெயர் என்ன என்று கூட தெரியாது. ஏதோ இங்கே சுற்றுவட்டாரத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனாலும், அவர் சொல்வதை நான் பொறுமையாக சில நிமிடம் கேட்டுக் கொண்டு விட்டு நகர்வேன். சிலர் தங்கள் பிரச்சனைகளை யாரிடமாவது சொன்னால் தான் தங்கள் பாரம் இறங்கும் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்கள். இவரும் அதே மாதிரி தான் போலும் என்று நான் முடிவு செய்தேன்.
அவருடைய சுமைதாங்கி நான்தான் என்று அவர் முடிவு செய்து இருக்கிறார் போலும்.
உலகத்தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் அமைப்பு தமிழியக்கம். கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழை வளர்ப்பதற்காக இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார் வி ஐ டி.வேந்தர், கோ.விசுவநாதன் ஆறாம் ஆண்டு நிகழ்ச்சியில் நிறைய தமிழ் அறிஞர்கள் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது என்னை யோசிக்க வைத்தது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் தாய்மொழியான தமிழில் படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆகலாம். ஏன் முனைவர்களாக கூட ஆகலாம். இந்த வசதி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் இன்றைய தலைமுறையில் தமிழ் இனி சாகும் என்று பாரதியார் சொன்னதை செயல்படுத்துகிறார்கள் என்று வருத்தத்தோடு சொன்னார்.
ஆனால் அதுதான் உண்மை.
இன்னொரு உண்மை தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொல்லலாமா ?? என்று தான் பாரதி பாடினான். சாகும் என்று சொல்லவில்லை. இதையும் இனி மேடையில் பேசும் பேச்சாளர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.
Leave a comment
Upload