தொடர்கள்
ஆன்மீகம்
ராமகிருஷ்ணா மாணவர் விடுதி வித்தியாச கொலு - மாலா ஶ்ரீ

2023921081356409.jpeg

ராமகிருஷ்ணா மடத்துக்குச் சொந்தமான மாணவர் விடுதி நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இங்கே ஆதரவற்ற நிலையில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உயர்நிலை பள்ளி வரை இலவசமாக உணவு மற்றும் தங்குமிடத்துடன் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுகளுக்கு முன் பாலிடெக்னிக் கல்லூரி துவங்கப்பட்டு, ஏழை மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியும் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்பட பல்வேறு தரப்பினர் மற்றும் தனியார் நிறுவனங்களின் நன்கொடைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதியில் ஆண்டுதோறும் நவராத்திரி கொலு கண்காட்சி 9 நாட்களுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சமயங்களில் இயல், இசை, நாடக உலகை சேர்ந்த ஒருசில பிரபலங்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம்.

2023921081429367.jpeg

இந்த ஆண்டு 9 நாள் நவராத்திரி கொலு கண்காட்சியை கடந்த 15-ம் தேதி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் பங்கேற்று துவக்கி வைத்தார். இங்கு நவராத்திரி கொலு கண்காட்சி வரும் 23-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பில் புதுமை கலந்த நவராத்திரி கொலு கண்காட்சியாக அமைந்தது.

பாலிடெக்னிக் கல்லூரி எச்ஓடி ஒருவர் தலைமையில் பொறியியல், கம்ப்யூட்டர் மற்றும் பிற பிரிவை சேர்ந்த மாணவர்கள் குழு, ரோபோ பொம்மைகளின் செயல்பாடு, 3D Animation பிரிண்டர் உதவியுடன் பல்வேறு உருவங்கள் மற்றும் தாங்களே உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பார்வைக்கு வைத்து, அவற்றுக்கு ஒவ்வொரு நாளும் சளைக்காமல் செயல்முறை விளக்கம் தந்தது அனைவரின் பாராட்டுகளை அள்ளிக் குவிக்கிறார்கள்.

இந்த மாணவர்கள் நடமாடும் தொழில்நுட்ப வாகனத்தின் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் 3டி அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்து வருகின்றனர்.