தொடர்கள்
அரசியல்
மன்னார்குடி பாட்டிக்கு உதவி பண்ணுங்கப்பா !! ப்ளீஸ் - மாலா ஶ்ரீ

2023921075229738.jpeg

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மக்களிடையே புழக்கத்தில் உள்ள ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்வதற்கு கடந்த 7-ம் தேதிவரை ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்திருந்தது. பின்னர், அன்று மாலையுடன் ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு முறையான தகவல் கிடைக்கப் பெறவில்லை.

மன்னார்குடி அருகே கண்ணாரப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜம் கணவரின் பென்ஷன் பணத்தை வாங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன் சென்னையில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பும் போது தான் அவருக்கு ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனத் தெரியவந்தது.

இதனால் அவர் அதிர்ச்சியாகி, தனது சேமிப்பில் வைத்திருந்த ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளுடன், அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் பணியில் இருந்த வங்கி அதிகாரிகளிடம் ₹1.48 லட்சம் மதிப்பிலான ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி தரும்படி ராஜம் கெஞ்சி அழுதிருக்கிறார். எனினும், ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்ததால், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என வங்கி அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். இதனால் அன்று முதல் காலை முதல் மாலை வரை ராஜம் செய்வதறியாமல் கண்ணீருடன் கதறி அழுது கொண்டிருக்கிறார்.

மூதாட்டி ராஜம் கூறுகையில், ‘‘தற்போது ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என எனக்குத் தெரியாது. தற்போதுதான் தகவல் அறிந்து ஊருக்கு ஓடிவந்தேன். எனினும், காலக்கெடு முடிந்ததால் என்னிடம் உள்ள ₹1.48 லட்சம் மதிப்பிலான ₹2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதற்கு வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதற்கு வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...’’ என்று கண்ணீருடன் வலியுறுத்தினார்.

பாவம் பாட்டிக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்கப்பா.....

மாலாஸ்ரீ