தொடர்கள்
அழகு
320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு ! மாலா ஶ்ரீ

2023921080150783.jpg

உலகிலேயே மிகச் சிறிய நாடுகள் எனில், நமக்கு சான் மரினோ, வாடிகன் சிட்டி போன்றவை நினைவுக்கு வரும். எனினும், இதைவிட சின்னஞ்சிறு நாடு உள்ளது என்றால்,நம்ப முடிகிறதா ???

.. அதன் பெயர் 'செபோர்கோ'. இதன் மொத்த பரப்பளவு, வெறும் 14 சதுர கிமீ மட்டுமே!

இந்நாட்டில் 'செபோர்கா லுய்கினோ' நாணயம் புழக்கத்தில் உள்ளது. இது, 6 அமெரிக்க டாலருக்கு சமம். இந்திய மதிப்பில், ஒரு செபோர்கோ நாணயம் ₹499 மட்டுமே! கடந்த 1719-ம் ஆண்டு செபோர்கோ நாடு விற்கப்பட்டு, 1800-ல் இத்தாலி ஒருங்கிணைந்தபோது, அதனுடன் செபோர்கோவை இணைக்க மறந்துவிட்டனர். பின்னர், கடந்த 1960-ம் ஆண்டு முடியாட்சி முறைப்படி, இத்தாலிய அரசாட்சிக்குள் செபோர்கா நாடு வரவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர்.

2023921075415392.png

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முதலாம் ஜார்ஜியோ என்பவர், தன்னை அந்நாட்டின் இளவரசராக அறிவித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அடுத்த 40 ஆண்டுகளில் செபோர்கோ நாட்டின் அரசியலமைப்பு, நாணயம், முத்திரை மற்றும் தேசிய விடுமுறை ஆகியவற்றை முதலாம் ஜார்ஜியோ உருவாக்கினார். பின்னர் 320 பேர் மட்டுமே வசிக்கும் செபோர்கோ நாட்டில், முதலாம் ஜார்ஜியோவின் மகனும் இளவரசருமான மார்செலோ அடுத்த மன்னரானார்.

தற்போது, கடந்த 2019-ம் ஆண்டு முதல் இளவரசி நினா என்பவர், 320 பேர் மட்டுமே வசிக்கும் செபோர்கோ நாட்டில் ஆட்சி நடத்தி வருகிறார். இந்நாட்டுக்கு வருவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை என அர்த்தமில்லை. செபோர்கோ நாட்டுக்குள் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

202392108021256.jpg

செபோர்கோ நாட்டில் பழமையான அழகிய வீடுகள், உணவகங்கள் கொண்ட சுற்றுலா தலமாக இருப்பதால், ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அந்நாட்டின் அன்னிய செலாவணி வருவாய் மற்றும் சந்தை மதிப்பு கூடிவருகிறது எனக் குறிப்பிடத்தக்கது.