தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

சம்பளம் கம்மி

2023920202738163.jpeg

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் மஞ்சு வாரியார் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கிறார்கள். ரித்திகா சிங்குக்கு முக்கிய வேடம். ஆனால், சம்பளம் கம்மி மஞ்சுவாரியாருக்கு படத்தில் அவ்வளவு காட்சிகள் இல்லை. ஆனால், சம்பளம் ஜாஸ்தி கேட்டால் அவர் உச்ச நடிகை என்கிறார்களாம்.

இஷா கோபிகா

2023920202934812.jpg

அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடி ராகுல் ப்ரீத்தி சிங் வில்லியாக இஷா கோபிகா. படப்பிடிப்புக் குழு உபசரிப்பில் இஷா கோபிகாவுக்கு முக்கியத்துவம் தருகிறது என்று வருத்தப்படுகிறார் ஹீரோயினி.

நயன்தாரா

இந்தியில் நயன்தாரா நடித்த ஜவான் படத்தை தவிர திருமணத்துக்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் படம் கூட பெரிய வெற்றி பெறவில்லை. இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா என்று யோசித்து வருகிறார் நயன்தாரா.

கத்ரீனா கைப்

2023920203518475.jpeg

பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃப் அம்மா திண்டுக்கல்லில் வேலை பார்த்தாராம் எனவே கத்ரீனா கைப்புக்கு தமிழகம் பற்றி பூரா விஷயமும் தெரியுமாம்.

திரிஷா

2023920203922422.jpg

அஜர் பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்கிறது. முதல் கட்டமாக அஜித் திரிஷா நடித்த ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்

ராகினி திரிவேதி

2023920204315867.jpg

குத்துப்பாட்டு என்றால் இனிமேல் கூப்பிடு ராகினி திரிவேதியை என்று இயக்குனர்கள் முடிவு செய்வார்கள் போல் தெரிகிறது. கஜ ராமா என்ற கன்னட படத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இன்னொரு கன்னட படத்தில் சந்தன் ஷெட்டியுடன் சந்தானத்துடன் தமிழில் இன்று எல்லா படங்களிலும் குத்துப்பாட்டு நடிகை என்று ஆகிவிட்டார் ராகினி திரிவேதி.

எமர்ஜென்சி

2023920204536973.jpg

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசரநிலை பிரகடனம் பற்றி எமர்ஜென்சி என்ற ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார் கங்கனா ரனாவத். இந்தப் படத்தில் இந்திரா காந்தி வேடம் அவருக்கு .நவம்பர் 24-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருந்தது. அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் ரிலீஸ் செய்தால் பரபரப்பாக வியாபாரமாகும் என்று முடிவு செய்து இருக்கிறார் கங்கனாரனாவத்.

தமன்னா

2023920205025247.jpeg

ரஜினி சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் எளிமை மற்றும் அப்பாவித்தனத்தை அவர் தொடர்ந்து அப்படியே வைத்திருப்பது மிகவும் கடினமான விஷயம். அவருடன் நடித்ததை நான் மறக்க முடியாது என்று ரஜினி புகழ் பாடுகிறார் நடிகை தமன்னா.

அதிதி பாலன்

2023920205249993.jpg

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் நாயகி இது ரொம்ப பழைய விஷயம். இந்தப் படத்தில் அதிதீபாலன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது புது தகவல். சுதந்திரத்திற்கு முன் நடந்த சம்பவங்களில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். கேப்டன் மில்லர் இரண்டாம் பாகம் வெளிவரும் போது அதிதி பாலன் நாயகியாக நடிப்பாராம்.

சுட சுட…

ரஜினி வாழ்த்து

நடிகர் விஜய் நடித்து வெளியாக இருக்கும் லியோ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மிகப்பெரிய வெற்றி படமாக இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினி. சமூக வலைத்தளத்தில் ரஜினியை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கு கலாய்க்கவே இப்படி வாழ்த்து சொல்லி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி முயற்சி.

சந்தானம் ஜோடி

நடிகர் சந்தானம் எழுச்சூர் அரவிந்தன் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடி டிவி பிரபலம் பிரியலாமா.

யோசிக்கிறாராம்

பாஸ் என்கின்ற பாஸ்கரன் பார்ட் 2 எடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ள முடிவு செய்து இருக்கிறார் ஆர்யா. நயன்தாரா ஓகே சொல்லி விட்டார். சந்தானத்திடம் கேட்டபோது யோசித்து சொல்வதாக சொல்லி இருக்கிறாராம்.

லாரன்ஸ் முடிவு

லாரன்ஸ் நடித்த ருத்ரன் படம் சரியாக போகவில்லை. சந்திரமுகி இரண்டும் கிட்டத்தட்ட அதே கதை தான். இனிமேல் ஹீரோயிச கதை எல்லாம் வேண்டாம் என்று லாரன்ஸ் முடிவு செய்து இருக்கிறார்.