கேரள வனத்தை சுற்றி திரிந்து 22 பேரை தன் துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்ற ஒரு ஆக்ரோஷ தந்தம் இல்லா யானை தான் மக்னா .
முதன் முதலில் தந்தம் இல்லாத யானை ஒன்று முதுமலை சரணாலயத்தில் உலா வருகிறது என்ற தகவலை படத்துடன் ஜூனியர் விகடனில் வெளிவர செய்தது நான் தான் .
அதை தொடர்ந்து செய்தித்தாள்கள் டிவி நியூஸ் சேனல்களில் இந்த மக்னா ஒரு தொடர் இடத்தை பிடித்து கொண்டது .
தந்தம் இல்லாத யானை ஒரு ட்ரான்ஸ் ஜெண்டர் என்று கூறப்பட அது அப்படி இல்லை தந்தம் இல்லாத அபூர்வ வகை யானை என்பது தான் உண்மை .
அதே போல இந்தியாவும் இலங்கையும் ஒன்றித்து இருந்த போது இலங்கை வனத்தில் இருந்த இந்த வகை ஆண் யானை இந்தியாவுக்குள் நுழைந்து கேரள வனத்தில் செட்டிலாகியிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது .
இந்த வகை ஆண் யானையை பற்றி யாரும் அவ்வளவாக கண்டுகொண்டதாக தெரியவில்லை .
கடந்த 1998 ஆம் வருடம் கேரள வன பகுதியில் ஒரு காட்டு யானை மிக பயங்கர அட்டகாசத்தை செய்து 22 பேரை அடித்து கொன்றுவிட்டது .இந்த யானை தந்தமில்லாத ஆண் யானை இதன் தொல்லை தாங்கமுடியாமல் இதை வளைத்து பிடிக்கும் முயற்ச்சி தோல்வியானதால் இதை சுட்டு வீழ்த்தும் ஆணையை கேரள அரசு வன துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க மக்னா யானையை சுட்டு கொல்ல துரத்தினர் .குண்டடிபட்டு தப்பி தமிழ்நாடு காட்டுக்குள் நுழைந்து இங்கும் சிலரை கொன்றுவிட்டது .
தமிழ் நாடு வனத்துறையினர் இந்த யானையை பிடிக்கும் முயற்ச்சியில் இறங்கினார்கள் .
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தேவர்சோலை பகுதியில் சுற்றி திரிந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி கொண்டிருந்த மக்னா யானையை ஜூலை 12 1998 கால்நடை மருத்துவர் அசோகன் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் துணையுடன் வளைத்து பிடித்தனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமுக்கு கூட்டி வந்து கரோல் என்ற கூண்டுக்குள் வைத்து சிகிச்சை அளித்தனர் .
யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி இந்த யானைக்கு ஏற்பட்ட குண்டடி மற்றும் காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்ததால், டாக்டரின் பெயரான மூர்த்தி இந்த யானைக்கு சூட்டப்பட்டது.
2000 -2001 ஆம் ஆண்டில் மக்னா யானை மூர்த்திக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்திகரமாக இல்லை என்று சென்னை சுற்றுசூழ ஆர்வலர்
யானை ராஜேந்திரன் உயர் நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடர இதன் எதிரொலி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க அமெரிக்காவில் உள்ள பிரபல கால்நடை மருத்துவர் ஜேம்ஸ் மகோனி முதுமலை வந்து மூர்த்திக்கு சிறப்பு சிகிச்சை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
மிருக ஆர்வலர் people far Animals India தலைவி மேனகா காந்தி நேரில் முதுமலை வந்து மக்னாவை பாரவையிட்டு சிகிச்சை குறித்து விசாரித்துவிட்டு சென்றார் .
அதற்கு பின் பயங்கர மக்னா மூர்த்தி ஒரு சாது யானையாக மாறி கும்கி யானையாக அவதாரம் எடுத்து பல பயங்கர காட்டு யானைகளை வளைத்து பிடித்து வந்தது .
அவ்வப்பொழுது உடல் சரியில்லை என்று ஓய்வு எடுத்து விடும் .
சாதுவாக மாறிய ஆக்ரோஷ யானை நோய்வாய் பட்டு கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கு இறந்துபோனது.
கடந்த 14 வருடமாக கண்ணும்கருத்துமாக மூர்த்தியை பராமரித்து வந்த பாகன் கிர்மாரனை தொடர்பு கொண்டு பேசினோம் ,
மிகவும் சோகத்தில் இருந்த அவர் என்னை விட்டு மூர்த்தி போயிட்டார் அவர் என்னைவிட பத்து வயது பெரியவர் .
இவர் ஒரு மக்னா யானை வகை தந்தம் இல்லாத ஆண் யானை .
கடந்த 14 வருடமாக இந்த மூர்த்தி என் குடும்பத்தில் ஒருவராக உலா வந்தார்.
அவரின் கோபம் எப்படி அடங்கியது என்று தெரியவில்லை .
ஒரு சிறு குழந்தை அருகில் சென்றாலும் துதிக்கையால் வளைத்து பிடித்து அரவணைத்து கொள்வார் .
நல்ல உணவு மற்றும் அதிக மருந்துகள் கொடுக்கப்பட்டது .
அதிக மருந்து கொடுத்ததால்
கடந்த 11 மாதமாக கிட்னி பிரச்சனை தொந்தரவு என்று உடல் குன்றி போய்விட்டார் .
மூர்த்தி பெரிய யானை அவரின் எடை 3200 கிலோவாக உயர்ந்து பின் 5600 கிலோ என்று உயர்ந்தது .
இரண்டு முறை மதம் பிடித்து கூட எந்த பிரச்சனையும் வரவில்லை .
முகத்தில் திடீர் என்று ஒரு கொப்பளம் வந்தது அதை தொடர்ந்து மஞ்சகாமாலை காய்ச்சல் வர மிகவும் சோர்வாகிட்டார் பாவம் .
கடந்த சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு படுத்துவிட்டார் .அப்படியே சரிந்து விட்டார். பின்னர் எல்லாருக்கும் தகவல் சொல்லி கயிறு கட்டி வைத்தோம் மாலை பயங்கர மழை அதில் நனைந்து கிடந்தார் இரவு 9 மணிக்கு நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டார் இந்த 65 வயது மக்னா யானை என்று குரல் தழுத்து கூறினார் .
மேலும் அவர் கூறும்போது எங்க குடும்பத்தில் 18 பேர் இருக்கோம் அத்தனை பேரும் மாலை மற்றும் புது வேஷ்டிகளை போர்த்தி இறுதி மரியாதையை செய்தோம் .
அவரை குளிப்பாட்டும்போது நானே குண்டுகளை எடுத்துள்ளேன்.
போஸ்ட்மார்ட்டம் செய்ததை நான் பார்க்கவில்லை .
பெரும்பாலும் யானைகள் நுறு வயது வரை வாழும் .
நான் 17 வருடம் சுப்ரமணி என்ற யானையை பராமரித்துள்ளேன் .இவரை 13 வருடம் .மனசு தாங்கல ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் செல்கிறேன் என்னால் மறக்க முடியவில்லை. சார் என்று அழுது விட்டார் கிர்மாறன் .
23 பேரை அடித்து கொன்ற மூர்த்தி மக்னா யானை தமிழ்நாட்டில் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு 25 வருடமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு சீனியர் கும்கியாக வலம் வந்துள்ளது.
அவரது மறைவால், முதுமலை யானைகள் முகாம் சோகத்தில் முழ்கியுள்ளது என்பது உண்மை .
Leave a comment
Upload