நைஜீரியாவின் தலைநகரம் லாகோஸ் பகுதியில் வாழும் இந்தியர்கள் கடந்த 19 ஆம் தேதி அன்று தொடங்கிய விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விநாயகர் சிலைகைளை தங்களின் இல்லங்களில் வரவேற்று 3, 5 அல்லது 9 நாட்கள் பூஜை செய்து அதன் பின், ''விஸர்ஜன்'' எனப்படும் விநாயகரை வழியனுப்பும் நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர் .
லாகோஸில் இயங்கி வரும் மஹாராஷ்ட்ரா மண்டல் சார்பில் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவிலின் முகப்பு வடிவில் மண்டபமும், ஆளுயர விநாயகர் சிலையும் நிறுவப்பட்டது. விநாயகரின் அருளை வேண்டி தினமும் மாலை நடக்கும் தீப ஆரத்தி, பஜனைகளில் பங்கேற்று பக்தர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
தங்களின் இல்லங்களில் எழுந்தருளிய பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சிரத்தையுடன் கோவிலில் சமர்ப்பித்தும் வந்தனர். அவ்வாறு சமர்பிக்கட்ட விநாயகர் சிலைகளை, சதுர்த்தியின் நிறைவு நாள் அன்று , கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
லாகோஸிலிருந்து...
அரவிந்த் என் ஜி
Leave a comment
Upload