தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் வில்லா எனும் தனியார் பன்னடுக்கு மாடி குடியிருப்பில், விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு பிரமாண்ட லட்டு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் விதர்சன பூஜை நடைபெறுவதற்கு முன், அவருக்கு படைக்கப்பட்ட லட்டு பிரசாதம் ஏலம் விடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட பிரமாண்ட லட்டு பிரசாதம் கடந்த சில நாட்களுக்கு முன் ஏலத்தில் விடப்பட்டது. இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பல்வேறு தொண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
தற்போதைய ஏலத்தில், பிரமாண்ட லட்டு பிரசாதம் ₹1.26 கோடிக்கு ஏலம் போனது. இந்த லட்டை, அதே வில்லா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு தரப்பினர் ஒட்டுமொத்தமாக பணம் வசூலித்து வாங்கியுள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு விடப்பட்ட ஏலத்தில் லட்டு ₹60.80 லட்சத்துக்கு ஏலம் போனது எனக் குறிப்பிடத்தக்கது.
மாலாஸ்ரீ
Leave a comment
Upload