மும்பையில் பொது ஜனங்கள் கொண்டாடும் கண்பதி கொண்டாட்டங்கள் என்றாலே ஒரு தனி சிறப்பு தான்.
என்னென்ன சிறப்புகள் என்றால்
நமது இந்தியாவில் சுதந்திர வேட்கையை ஊக்குவித்தது.
இந்தியர்களை ஒன்று சேர்த்தது.
கொள்ளையர்களான வெள்ளையர்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையேயும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அதிலும் தெய்வீக பண்டிகையை தங்களனைவரின் ஒரே லட்சியமான சுதந்திரத்தைப் பெற இதை உபயோகப்படுத்தியது.
நமது பக்தி கலாசாரத்தையும் விடாது கடைப்பிடிக்க வழி வகை செய்தது.
ஒற்றுமை வளர்ந்தது.
பொருளாதாரம் பெருகியது.
இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
இத்தனை சிறப்புகள் கொண்ட மும்பை கண்பதி கொண்டாட்டங்கள் கலாசாரத்தையும் விடாது அதே சமயம், நாட்டு நடப்புக்கு ஏற்ப அந்த கொண்டாட்டங்களில் தீம் ஆக செயல் படுத்தி மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவும் வழி வகை செய்கிறது.
ஒரு புகைப்பட சுற்றுலா.......
புலேஷ்வர் விக்னஹர்தா. இங்கு ச்யா என்றால் அந்த பகுதி என்பதாகும். அந்த வகையில் இந்த கண்பதி புலேஷ்வர் பகுதி விக்னஹர்தா என்பதாகும்.
தமது அதி பிரிய கணபதியை அனைத்து புராண கோலங்களில் ப்ரம்மாண்டங்களில் தோய்த்து தத்ரூபங்களாக வெளிப்படுத்தி மும்பைக்கர்களின் கற்பனையே அலாதிதான்.
உயரங்கள் ஒரு பொருட்டே அல்ல. அவ்வளவு வாஞ்சை கணபதியிடம். இதில் மதங்கள் மறைந்துவிடும். தோளோடு தோளாக கை கோர்த்து மத நல்லிணக்கங்கள் பளிச்சிடும். பிரபலங்கள் தங்களின் பணபலம், விசிறிகள் பலத்தை காண்பிப்பதற்கும் இது ஒரு முத்தான வாய்ப்பு அவர்களுக்கு.
கிடைக்கும் உண்டியல் பணத்தில் பொது நல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சந்திரயான் 3ன் வெற்றியைக் குறிக்கும் விதத்தில் ஒடிஷாவில ஒரு கணபதி சிலை வைத்திருந்த பந்தலில்...
கொண்டாட்டம் முடிந்து கணபதியை சிவ-பார்வதி தம் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வதாக குறிக்கும் படமிது.
அடுத்த வாரம் கணபதி விசர்ஜன் (விடை பெறும்) நிகழ்வு.
Leave a comment
Upload