தொடர்கள்
சினிமா
வகிதா ரஹ்மான் - வெற்றிப் பயணம் - மரியா சிவானந்தம்

20230829190624444.jpg

"சலாம் பாபு ,சலாம் பாபு என்னைப் பாருங்க

தங்கக் கையில் நாலு காசை அள்ளி வீசுங்க "

என்ற பாடல் நினைவில் இருக்கிறதா? இல்லை என்றால் யூடியூபில் பார்த்து விடுங்கள்

அந்த பாடல் இடம் பெற்ற படம் "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" என்ற முதல் தமிழ் வண்ணப்படம். MGR ,பானுமதி நடித்த இப்படத்தில் பாடல் காட்சியில் நடனம் ஆடும் நடிகை இன்று செய்தியாகி இருக்கிறார் .அவர் வகிதா ரஹ்மான், இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் நடிகை . வகிதா ரஹ்மானுக்கு இந்திய அரசின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 69 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு அளிக்கப்படும் .

வகிதா தமிழ்நாட்டில் ,செங்கல்பட்டில் 3/2//1938 அன்று பிறந்தவர். இவரது தந்தை முகமது அப்துர் ரஹ்மான், தாயார் மும்தாஜ் பேகம் . நான்கு பெண் குழந்தைகளில் கடைக்குட்டியாக பிறந்தவர். வகிதாவுக்கு மருத்துவர் ஆக விருப்பம். மாவட்ட நீதிபதியான அவரது தந்தையின் மறைவு , வகிதாவை கலைத்துறையை தேர்ந்தெடுக்க வைத்தது . முதல் முதலாக இவர் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் நடனமாடி தன் கலைப்பயணத்தைத் துவக்கினார் . ஆனால் 1956ல் இப்படம் வெளியாகும் முன்பே ,இவர் நடித்த தெலுங்கு படமான ரோஜுலு மராயி’ மற்றும் என்டிஆர் உடன் நடித்த ‘ஜெயசிம்ஹா’ படம் 1955ம் ஆண்டு வெளியாகி விட்டது . எல்லோராலும் பேசப்படும் நடிகையானார் வகிதா.

20230829184728950.jpg

அதன் பின்னர் வகிதா ஏராளமான இந்திப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் .தயாரிப்பாளர் குருதத் வகிதாவை நல்ல முறையில் ஊக்குவிக்க , சி.ஐ.டி என்னும் க்ரைம் படத்தில் நடித்தார் . ப்யாசா என்னும் படத்தில விலைமாதாக நடித்தார் .அந்தக் கால கட்டத்தில் அப்படி நடிக்க துணிச்சல் வேண்டும் .இப்படங்கள் வகிதாவுக்கு புகழைக் கொடுத்தன .

20230829184841529.jpg

பின்னர் சத்யஜித்ரேயின் அபீஜான் படத்தில் நடித்தார் . 1965 நடித்து ஆர் கே நாரயணனின் 'The Guide " நாவலைப் படமாக எடுத்த போது இவர் தன்னம்பிக்கையும் , தைரியமும் கொண்ட ரோஸியாக நடித்தார் . இப்படம் இவருக்கு முதல் பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது. நீல்கமல் என்ற படம் இரண்டாவது பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது. 1971 ஆம் ஆண்டு வெளியான ரேஷ்மா அவுர் ஷேரா தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை இவர் கையில் வைத்தது .

20230829184810438.jpg

பல இந்திப்படங்கள் இவரது நடிப்பிற்காக ஓடியது . ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருந்தார் வகிதா . திலீப் குமார், ராஜேந்திர குமார் , ராஜேஷ் கண்ணா , ராஜ் கபூர் போன்ற புகழ் பெற்ற கதாநாயகர்கள் தேர்வு செய்யும் நாயகியாக இருந்தார்.தேவ் ஆனந்துடன் இவர் அதிகமாக படங்கள் நடித்துள்ளார்.

எழுபதுகளின் துவக்கத்தில் இருந்தே அவர் தன் கதா பாத்திரங்களை பரிட்சார்த்த முறையில் தேர்வு செய்தார் . குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடிக்கத் தொடங்கினர் . பின்னர் அக்கா ,அம்மா வேடங்களில் நடித்தார் .

தலைச் சிறந்த நடிகையான வகிதா மூன்று முறை பிலிம் பேர் விருதுகள், ஒரு தேசிய விருது , வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது என்று விருதுகள் குவித்தார். 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். . சிறுவயதில் இருந்தே நடனம் கற்பிக்கப்பட்டதால் , அருமையாக நடனம் ஆடுவார். 85 வயதாகும் வகிதா கமல்ஜித்தை திருமணம் செய்துக் கொண்டார் .இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கணவரின் மரணத்துக்குப் பின் பெங்களூரில் வசித்து வந்தார் .

20230829184929549.jpg

60 ஆண்டுகளுக்கு மேல் இவரது கலைப் பயணம் தொடர்கிறது, நர்கிஸ் .மீனா குமாரி. ஸ்மிதா படேல் போன்ற நடிகைகளுடன் வைத்து போற்றப்படுகிறவர் . இவர் சமீபத்தில் தமிழில் கமல் நடித்த விசுவரூபம் 2 படத்தில் கமலின் அம்மாவாக நடித்துள்ளார்.வகிதா ரஹ்மானின் வெற்றி மிக்க கலைப் பயணத்துக்கு இந்த தாதா சாகேப் பால்கே விருது மேலும் சிறப்பு சேர்க்கிறது .

வாழ்த்துக்கள் வகிதா ரஹ்மான்