தொடர்கள்
பொது
இரண்டாக உடைந்த பாலம் - மாலா ஶ்ரீ

2023040608074428.jpeg

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரம் பகுதியில் பஹுதா நதி செல்கிறது. இந்த நதியின் குறுக்கே, சென்னை-ஸ்ரீகாகுளம் பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 1929-ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த 3-ம் தேதி காலை 75 டன் எடையிலான கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி இப்பாலத்தின்மீது சென்ற போது, பாலத்தின் நடுவே, லாரியில் இருந்த அதிக எடையிலான கிரானைட் கற்களின் பாரம் தாங்காமல், பலத்த சத்தத்துடன் பாலம் இரண்டாக உடைந்து விழுந்தது. இதில் டிரைவர், கிளினர் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய மேம்பாலம், பல ஆண்டுகள் நீடித்து உழைத்து, போதிய பராமரிப்பின்றி, பாலத்தின் தூண்கள் வலுவிழந்து, தற்போது கிரானைட் கற்கள் மற்றும் லாரியின் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. ஆனால், இப்போது கட்டப்படும் புதிய பாலங்கள் எல்லாம் கட்டிய சில நாட்களிலேயே தரமற்ற கட்டுமானப் பணிகளால் இடிந்து விழுந்துவிடுகின்றன.

சர்வதேச அளவில் சாலையில் செல்லும் கன ரக வாகனங்கள் 25 டன்களுக்கு மேல் ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. இப்படி பொறுப்பேயில்லாமல் எப்படி 75 டன் எடையை ஏற்றிச் செல்ல அனுமதித்தனர் என்று புரியவில்லை.

அத்தனை விதிமீறல்களும் இங்கு தான் நடக்கும்.