தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள ஒற்றுமை மற்றும் தொடர்பு என்ன ?
சென்ற வாரத்தைப் போலவே இந்த வாரத்திலும் தமிழில் பிற மொழி எழுத்துக்கள் மற்றும் தொடர்பு பற்றி கேட்க பரணீதரன் விளக்கமளிக்கின்றார்.
ஸ, ஷ, ஶ, ஜ என்ற எழுத்துக்கள் எங்கிருந்து எந்த மொழியிலிருந்து இறக்குமதி ஆனவை ? स, श, ज என்றுதானே பார்க்கிறோம்.
ஒரு வேளை இவை அந்த சமஸ்க்ருத ஒலிக்கு ஏற்ப ப்ரத்யேகமாக தமிழுக்கென உண்டாக்கப்பட்டவையா?
மேலே உள்ள எழுத்துக்கள் அனைத்தும் சமஸ்கிருத உச்சரிப்புகளை தமிழில் பயன்படுத்துவதற்காக கிரந்த எழுத்து முறையில் இருந்து எடுக்கப்பட்டது. நாம் முன்பே பார்த்தது போல தமிழ் மொழியில் மகாப்ராணா எழுத்துக்கள் மிகவும் குறைவு. ஆனால் சமஸ்கிருதத்தில் மகாப்ராணா எழுத்துக்கள் நிறைய உள்ளன. சில சம்ஸ்கிருத சொற்களை தமிழ் படுத்தும் பொழுது அதனுடைய உச்சரிப்பு மாறாமல் இருப்பதற்காக அந்த எழுத்துக்களை தமிழில் அப்படியே வைத்துக் கொண்டனர். அந்த எழுத்துக்களை தமிழில் எழுதுவதற்கு க்ரந்த எழுத்து முறையை கையாண்டனர்.
சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு முறை தான் கிரந்த எழுத்து. அந்த கிரந்த எழுத்தின் எழுத்துக்கள் தான் மேலே உள்ளது. ஆதி காலம் தொட்டு கிரந்த எழுத்துமுறை உள்ளது. சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் ஒரு பாலமாக இருந்தது. தேவநாகரி லிபியை சமஸ்கிருதத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்பு கிரந்தம் தான் சமஸ்கிருதத்திற்கு எழுதப்பட்ட எழுத்து வடிவம். இன்றும் கூட யஜுர் வேதம் முழுவதும் கிரந்தத்திலேயே உள்ளது. அதனால் தான் வேத பாடசாலையில் உள்ள மாணவர்கள் கிரந்தம் படிக்கிறார்கள். அந்த காலத்தில் பல மன்னர்களின் கல்வெட்டுகள் கிரந்த எழுத்து முறையில் இருந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் பல இடங்களில் கிரந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், கொங்கு மண்டல சிற்றரசர்கள், ராயர்கள், நாயக்கர்கள், சேதுபதிகள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், காகத்தியர்கள், விஜயநகர பேரரசு போன்ற பல அரச பரம்பரைகள் கிரந்தத்தில் கல்வெட்டுகளை எழுதி வைத்துள்ளனர். பொதுவாக அரசர்கள் கோவில் கட்டுவதற்கோ, குளம் வெட்டுவதற்கோ, மற்றவர்களுக்கு மானியம் கொடுப்பதற்கோ, ஒரு புது கிராமத்தை உருவாக்குவதற்கோ ஆவணங்களை உருவாக்கும் போது அவற்றில் ஒரு பாதியை க்ரந்த எழுத்து முறையிலும் மறு பாதியை தமிழ் எழுத்து முறையிலும் கல்வெட்டாகவோ, ஓலைச்சுவோடியாகவோ, செப்பேடுகளாகவோ எழுதுவர். தமிழ் எழுத்துக்களில் இல்லாத உச்சரிப்புகள் வரும்பொழுது உதாரணமாக ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற சொல்லை எழுதும் போது கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவர். அதே நேரத்தில் தமிழ் உச்சரிப்புகள் வரும் இடங்களில் எல்லாம் தமிழ் எழுத்து முறையே கையாளுவர். இதனால்தான் நம்மிடம் இரு வேறு எழுத்து முறைகள் உள்ளன.
கிரந்த எழுத்துமுறை தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பாலமாக இருந்ததா ?
ஆமாம். கிரந்த எழுத்துமுறை தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் பாலமாகவே இருந்தது. இன்றும் சரஸ்வதி மகாலில் உள்ள பல்வேறு வகையான ஓலைச்சுவடிகளும் செப்பேடுகளும் கிரந்த எழுத்து முறையிலும் தமிழ் எழுத்து முறையிலும் கலந்து கட்டி உள்ளன. அந்த காலத்து அரசாங்க ஆவணங்கள் அனைத்தும் இந்த இரு எழுத்து முறையும் கலந்ததாகவே இருந்தது. அப்போது அரசு பதவியில் இருந்த அனைவரும் தமிழும் சமஸ்கிருதமும் தெரிந்தவர்களாக இருந்தனர். அதேபோல் தமிழ் எழுத்துமுறையும் சமஸ்கிருத எழுத்து முறையும் கற்று இருந்தனர். இதனாலேயே இந்த கிரந்த எழுத்து முறை தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் ஒரு பாலமாகவே இருந்தது. காலம் மாற மாற, கிரந்த எழுத்துக்கள் சில குறிப்பிட்ட சொற்களை உச்சரிக்க மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது தமிழ் அறிந்த அனைவரும் தங்களால் முடிந்தவரை க்ர்ந்த எழுத்து முறையை குறைத்து தமிழ் எழுத்து முறையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள ஒற்றுமை மற்றும் தொடர்பு என்ன ?
அந்த காலத்தில் கோயில்கள், அரண்மனைகள் மற்றும் ஆட்சி நிலைகள் போன்றவற்றில் சமஸ்கிருதம் மிகுதியாக பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் வீட்டில் பேசுவதற்கும் பொதுவாக பேசுவதற்கும் பாடுவதற்கும் நாடகங்கள் போடுவதற்கும் தமிழ் மொழி மிகுதியாக பயன்படுத்தப்பட்டது. எப்படி நாம் இன்று தமிழுடன் ஆங்கிலத்தையும் சேர்த்து கேட்கிறோமோ அதே போல் அந்த காலத்து மக்கள் தமிழுடன் சமஸ்கிருதத்தையும் சேர்த்தே கற்றனர். தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இலக்கணத்தில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து தற்சமயம் தற்பவம் என்ற தொல்காப்பிய சூத்திரங்களே உள்ளன. அந்த அளவுக்கு இந்த இரண்டு மொழிகளும் பின்னிப் பிணைந்து இருந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு வடசொல் ஒரிஇ என்று தொல்காப்பியர் கூறுகிறார். பொதுவாக தமிழில் உள்ள பல்வேறு விதமான இலக்கண முறைகள் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அதேபோல் சமஸ்கிருதத்தில் உள்ள பல்வேறு விதமான இலக்கண முறைகள் தமிழிலும் உள்ளன. சிவபெருமான் தன்னுடைய உடுக்கை அடித்தபோது, உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், மறுபக்கத்தில் இருந்து சமஸ்கிருதமும் வந்தன என்று புராண வரலாற்றுச் செய்திகள் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
இதற்குச் சான்றாக தமிழில் இறையனராகப்பொருளும் சமஸ்கிருதத்தில் மாஹேஸ்வர சூத்திரமும் இதை தெளிவாக கூறுகிறது. இப்படி தமிழும் சமஸ்கிருதமும் ஒருங்கே வளர்ந்தன என்பதற்கு பல்வேறு விதமான சான்றுகள் நம்மிடம் இன்றும் இருக்கிறது. இவற்றை ஒழுங்காக ஆராயாமல் தமிழ்தான் பெரியது என்று ஒரு குழுவும் சமஸ்கிருதம் தான் பெரியது என்று ஒரு குழுவும் சண்டை போடுவது வருத்தத்துக்குரிய விஷயமாகும் . இரண்டுமே ஒன்றாக ஒட்டிப் பிறந்த இரண்டு குழந்தைகள். அவைகள் எந்த பேதமும் பார்ப்பதில்லை. நாம் தான் பேதங்கள் பார்த்து மொழிக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டு மொழியும் கற்ற ஒருவர் இரண்டு மொழியிலும் உள்ள கருத்து செறிவையும், இலக்கிய நயத்தையும், அவற்றில் உள்ள கற்பனை வளத்தையும் ஆராய்ந்து இன்புறலாம். அதனால் நாமும் மொழிகளை வைத்து சண்டை போடாமல் இரண்டு மொழிகளையும் நன்றாக கற்று மற்றவருக்கும் சொல்லிக் கொடுத்து இன்புறுவோமாக" என்று முடிக்கிறார்.
ஆமாம். வள்ளுவன், இளங்கோ, கம்பன் பாரதி முதலானோர் இவ்விறு மொழிகளில் பாண்டித்யம் பெற்றிருந்தனர் என்படை அவரது ஆக்கங்களிலிருந்தே நங்கறியலாம். இவ்வளவு ஏன்? நமது கவியரசு கண்ணதாசனும், "இவ்விரு மொழிகளும் நமதிரு கண்கள் போன்றவைதான்".
எவருக்காவது தமக்கிருக்கும் கண்கணில் பேதம் சொல்வார்களோ?
அடுத்த வாரத்திலிருந்து சொல்லிணக்கணம் என்று குறிப்பு தந்துவிட்டு விடை பெறுகிறார்.
Leave a comment
Upload