Heading : ஸ்ரீரங்கம் கோயில் அரையர் இனி விமான பைலட் ! மாலா ஶ்ரீ
Comment : ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளுக்கு சேவை செய்வதே எங்களின் உயிர்மூச்சு. நான் விமான பைலட்டாக வேண்டும் என்ற உத்வேகம் என்று கூறிய வாலிபரின் கருத்து ஏற்கத்தக்கது.
ராதிகா பாலாஜி , சின்மயா நகர்
Heading : அட்டவணை - சத்தியபாமா ஒப்பிலி
Comment : சத்தியபாமா ஒப்பிலியின் அட்டவணை கதை - ஒரு வித்தியாச கோணம். ரசிக்க வைத்தது.
செம்பருத்தி துர்கா, பரமேஸ்வரி , ஒட்டபிடாரம்
Heading : ரோபோ யானை இந்து மதத்தை குறி வைக்கும் உபாயம் ?? - மாலா ஶ்ரீ
Comment : கேரள கோயில் உற்சவ ஊர்வலங்களில் பிரமாண்ட ரோபோ யானை என விகடகவியில் செய்தி வெளியான ஒரு வாரத்தில் அக்கோயில் சேவைக்கு ரோபோ யானை பயன்பாட்டுக்கு வந்ததை டிவியில் பார்த்து அசந்து போனேன்.
கலாவதி கார்த்திக் , அரும்பாக்கம்
Heading : ஆபரேஷன் தோஸ்த் - துருக்கி மீட்புப் பணி வீரர்களுடன் மோடியின் நேர்முகம்
Comment : துருக்கி நாட்டில் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இந்தியா திரும்பிய இந்திய முப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தொடர்பான வீடியோ பதிவுகள் நெகிழ்வை ஏற்படுத்தியது.
ரேணுகா ஹரி , வளசரவாக்கம்
Heading : பெருஞ் சேமிப்பு-மகா
Comment : சங்குகளின் ஆழி பேரதிர்வுகளை பெரும் சேமிப்பாக வைத்திருப்பதை பற்றிய ஹைக்கூ கவிதை வரிகள் செம் நச்!
சிவராமன் ஜெயந்தி , திண்டுக்கல்
Heading : கருத்துக்கதிர்வேலன்
Comment : தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் தலையை அடகு வைத்து ₹5 கோடி தருவேன் என்று டாக்டர் ராமதாஸின் பேச்சு 2023-ம் ஆண்டின் தலைசிறந்த 'மொக்கை' ஜோக்! அவர்கிட்ட இருந்து ஒத்த பைசாகூட யாராலும் வாங்க முடியாதுனு கட்சிக்காரங்களே புலம்புறாய்ங்க!
பிரபாவதி, சென்னகேசவன், நாகர்கோவில்
Heading : அனாதைகள் (ஆ)சிரமம் - கோவை பாலா
Comment : கோவை பாலாவின் அனாதை (ஆ)சிரமம் கவிதை வரிகள் சிரிக்க வைத்த அதே நேரம் சிந்திக்கவும் வைத்தது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
ராதா வெங்கட் , ஆலப்பாக்கம்
Heading : இருவாச்சி காவியம் ! அழிவின் விளிம்பில் அற்புதப் பறவை -தில்லைக்கரசிசம்பத்
Comment : அழிவின் விளிம்பில் இருக்கும் அற்புத பறவைகள் குறித்து, முற்றிலும் புதிய முயற்சியாக இருவாச்சி காவியத்தை தில்லைக்கரசி எழுதத் துவங்கியுள்ளார். அவரது முயற்சிக்கு விகடகவி வாசகர்களின் பாராட்டுகள்.
மணிமேகலை கண்ணன் , பாளையங்கோட்டை
Heading : இடைத்தேர்தல் - யாருக்கும் வெட்கமில்லை ! விகடகவியார்.
Comment : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற பல்வேறு கூத்து தொடர்பான கிளிப்பிங் பார்த்து நொந்து போயிட்டோம். ஒவ்வொரு வாக்காளனும் ஓசி பணமோ பொருளோ மதுபானம் வாங்கக்கூடாது என யோசிக்கத் துவங்கினால் மட்டுமே வரும் நாடாளுமன்றத் தேர்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்த கிளிப்பிங்குடன் விகடகவியின் நையாண்டி பாட்டு செம் கலக்கல்!
நிவேதிதா, பாலமுருகன், சிவந்தியப்பன் , பொள்ளாச்சி
Heading : விகடகவி கிரியேட்டிவ் குழு சந்திப்பு - இது எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசரின் கற்பனை. நிஜ வீடியோ அடுத்த வாரம் முதல்......
Comment : விகடகவி கிரியேட்டிவ் குழு சந்திப்பு மற்றும் மறைந்த விகடன் ஆசிரியரின் வாழ்த்து கடிதத்துடன் மதன் வெளியே ஓடிவருவது என ஆர்னிகா நாசரின் அலாதி கற்பனை வரிகள் வாய்விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. சூப்பர்ப்!
வைஜயந்தி பாஸ்கரன், ஒரத்தநாடு
Heading : கேள்விக்குறியாகும் கல்வி
Comment : கல்வி என்பது எல்லா அரசு பள்ளி மாணவர்களுக்கும் சமமான வசதியுடன் வழங்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை, இணைய வசதி இல்லை. எல்லாமே நகர்புறத்துக்கு மட்டும்தான் என்பது ஒருவகை அநீதியும்கூட! அதிகாரிகள் உட்கார்ந்த இடத்தில் ஆய்வறிக்கை வழங்காமல், அந்தந்த பகுதி அரசு பள்ளிகளை நேரில் பார்வையிட்டு, உண்மை நிலையை அரசுக்கு உணர்த்த வேண்டும். செய்வார்களா என்பது சந்தேகமே!
தமிழ்செல்வி, பாத்திமா, அருப்புக்கோட்டை
Heading : கிளியும் கிலியும் - ரோபோ சங்கர் ஹோம் டூர் அலப்பரை - மாலா ஶ்ரீ
Comment : அளவுக்கு அதிகமான பப்ளிசிட்டி மோகத்தால் திரையுலக நட்சத்திரங்களுக்கு ஏற்படும் அதிகபட்ச பின்விளைவுகள்தான், ரோபோ சங்கரின் 'ஹோம் டூர்' வீடியோவின் தாக்கத்தால் விதிக்கப்பட்ட அபராதம். இனியாவது மற்றவர்கள் திருந்த வேண்டும்.
பத்மாவதி தியாகராஜன் , ஓசூர்
Heading : இந்தியருக்கு நேஷனல் ஜியோகிராபிக் விருது!-மாலாஸ்ரீ
Comment : இந்தியருக்கு நேஷனல் ஜியோகிராபிக் விருது பற்றிய செய்தி, படம் சூப்பர்ப்!
திவ்யா பார்த்திபன் , சண்டிகர், பஞ்சாப்
Heading : இனி ஈசியா கடன் வாங்கலாம் !! உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமனம்! மாலா ஶ்ரீ
Comment : நாம் ஏன் அஜய் பங்காவை தேடப் போறோம்? ஒவ்வொரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் வந்துச்சுன்னா, பிரதான கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக, அத்தொகுதி மக்களுக்கு பணத்தை வாரி இறைப்பாங்க. 234 தொகுதின்னு கணக்கு போட்டு, நாம கடனே வாங்க வேண்டாம்.
சிவகாமசுந்தரி, சேலம்
Heading : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறுக்க முடியாத அவதாரம் - 5. நேதாஜியும் தமிழர்களும்.
Comment : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் -- பதிவு ஒவ்வொருக்கும் வேகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.தேவயான பதிவு. நன்றி.
Chandra Ramakrishna., Chennai.
Heading : அட்டவணை - சத்தியபாமா ஒப்பிலி
Comment : இது சம்பந்தப்படுத்தி ஒரு நிகழ்வு. மகா பெரியவர் காலை எழுந்து கொள்ள நேரம் பார்த்து சொல்ல ஒரு பையனை கேட்டுக் கொண்டு, அவன் தூங்கி விட, அவரே வந்து அவனை எழுப்பிய நிகழ்வு. எப்படி சரியாக எழுந்தீர்கள் என அந்த பையன் கேட்டபோது டி.வி.எஸ் பஸ் சரியாக 3.50 மணிக்கு அந்த இடத்தை கடந்து செல்வதை வைத்து என்று பதில் சொன்னாராம். அது போல மீனா மனதில் கடிகாரம் இருக்கிறது. அது அவள் எங்கு இடம் மாறினாலும் ஓடிக்கொண்டிருக்கும்.
Heading : விகடகவி கிரியேட்டிவ் குழு சந்திப்பு - இது எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசரின் கற்பனை. நிஜ வீடியோ அடுத்த வாரம் முதல்......
Comment : அற்புதமான வர்ணனை. ஆவலோடு காத்திருப்போம். எழுதியுள்ள பெயர்களில் என் பெயரும் உள்ளது என்ற மகிழ்ச்சி நெஞ்சம் நிறைக்கிறது
போன வாரம் விடுபட்டு போன கடிதங்கள்....
Heading : தமிழர்கள் கலக்கிய ஹாங்காங் மராத்தான். ராம்
Comment : மாரத்தான்..நீங்கள் ஓடியது எங்களை மாற்றத்தான்...மாறிடுவோம்..மாற்றிடுவோம்...பலரின் வாழ்வை...மாற்றம். மாறாதது .
Heading : தமிழர்கள் கலக்கிய ஹாங்காங் மராத்தான். ராம்
Comment : Super ram ji👍👍👍 inspiring 💪 Finishing line moment is priceless.. Rajan sir vera level timing 👏👏👏 Suresh sir is a great leader 👍💪👏 Once again big congratulations to Marathon runners Pavi Sangee Karthik Daniel 💐👏👏👏 Many more marathon runners to come next year 💯
Anu, HongKong
Leave a comment
Upload