தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - ஒரு முன்னுரை

யாதும் ஊரே யாவரும் கேளீர் – இதன் மற்றொரு விளக்கம் என்ன?? தமிழிலக்கண வாட்ஸப் குழு!! பரணீதரன் என்ற பதிவு மூலமாக நமக்கு பரிச்சயமானவர் திரு பரணீதரன் அவர்கள்.

விகடகவியிலும் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ள இசைந்திருக்கிறார்.

கத கேளு கத கேளு தமிழ்மொழியோடக் கத கேளு என்ற தலைப்பில் தமிழ் மொழியின் கதையையும் அதன் அணிகலன்களையும் ஒரு நாவலுக்கு இணையான விறு விறுப்போடு தொடர்கிறார்.

பார்க்கலாம். கேட்கலாம். ஆனந்திக்கலாம். ஆம், ஆங்காங்கே சொல்லப்படும் விஷயங்களுக்கு ஏற்ப படங்களும் வீடியோக்களும் இணைக்கப்படும்.

எப்படி ஆரம்பிக்கப்போறீங்க என்றவுடன் பரணீதரன் அவர்கள் கீழ்காணும் flow chart ஐ அனுப்பிவிட்டார்.

20230020183916483.png

தமிழ் என்பதை முழுமையாக நாம் அறிந்திட, என்னென்ன விஷயங்களையெல்லாம் அது உள்ளடக்கியிருக்கிறது என்பதை கோர்வையாக வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி கொடுத்திருப்பது பாராடுக்குறியது.

நாமும் நமக்கு வரும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம்.

அடுத்த இதழிலிருந்து அவருடன் பயணிப்போமே.

பின் குறிப்பு :

இவருக்கு பரணீதரன் என்ற பெயரை அவரது மாமா தான் வைத்தாராம். அவருடைய மாமாவிற்க்கு, பிரபல ஆன்மீக எழுத்தாளர் பரணீதரனை ரொம்பவே பிடிக்குமாம்.