தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20230020171953409.jpeg

இந்தியா இளைஞர்களால் ஆளப்படுகிறது ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்.

ஆளுநர் உதயநிதி ஸ்டாலின் பற்றி தான் சொல்கிறார் தெரியுது இல்ல

ஒன்றிய அரசுக்கு எதிராக புதிய எதிர்ப்பலை கேரள முதல்வர்

அதெல்லாம் இருக்கட்டும் எதிர்க்கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளர் யார் அத சொல்லுங்க

பழனிச்சாமி பன்னீரை சந்திப்பேன் சசிகலா

பாவம் ரொம்ப பாவம் சின்னம்மா

கர்நாடகாவில் ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் பிரியங்கா காந்தி.

அடிச்சு விடுங்க அக்கா காசா பணமா அப்புறம் பார்ப்போம்.

ஜி எஸ் டி ஏழைகளுக்கு எதிரானது டாக்டர்.ராமதாஸ்

டாக்டர் எல்லாம் லேட்டா தான் சொல்லுவார்.

வியாபாரிகளுக்காக போராட்டம் அரசுக்கு பாஜக எச்சரிக்கை

போராட்டம் மத்திய அரசு எதிர்த்த மாநில அரசு எதிர்த்தா அது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

கவர்னர் யார் என் தலைமை ஆசிரியர் அல்ல சட்டசபையில் கேஜ்ரிவால் ஆவேசம்.

வீட்டுப்பாடம் எழுத சொல்லி இருப்பாரு என்னவோ

மத்திய அரசு பணியில் 2.1 சதவீதம் தமிழர்கள் உதயநிதி ஸ்டாலின்.

நீங்களே இந்தி தெரியாது போடா பனியன் மாட்டி விட்டு விட்டு இப்ப இப்படி பேசறீங்களே அண்ணே

ஆளுநர் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை பதுங்குகிறார் கே.எஸ்.அழகிரி

விளக்கம் சொன்னது இப்போது வில்லங்கம் ஆகிவிட்டது.

அறநிலை துறை சார்பில் 108 அரிய பக்தி நூல்கள் மறுபதிப்பு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

108 பக்தி நூல் விடுதலை ஆசிரியர் எப்படியும் கோபமா இருப்பார் போய் சமாதானம் பண்ணுங்க.

அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது நைனார் நாகேந்திரன்

இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரியுமா அண்ணே

கவர்னர் விளக்கத்தை ஏற்பதா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும் பேரவை தலைவர் அப்பாவு

மக்களுக்கு வேற முக்கிய வேலை நிறைய இருக்கு தலைவரே நம்ம தான் இது பற்றி பேசி ஏதாவது குழப்பனும்

வணிகர் நலனை பாதுகாப்பதில் அரசோடு எந்த சமரசத்துக்கும் இடமளிக்க மாட்டோம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர்

தலைவர் இப்படி சும்மா சொல்லிட்டு தான் இருப்பார்

வயதானவர்களையும் ஏமாற்றி வாக்கு பெற்ற ஒரே கட்சி திமுக தான் எடப்பாடி பழனிச்சாமி

தினம் புதுசு புதுசா கண்டுபிடிச்சு ஏதாவது சொல்றாரு தலைவர் உக்காந்து யோசிப்பாரோ

பாஜக சொல்வது ஒன்று செய்வது ஒன்று மம்தா பானர்ஜி

நீங்க சொன்னா கரெக்டா இருக்கும் உங்களுக்கு தான் இதுல அனுபவம் ஜாஸ்தி.