தொடர்கள்
பொது
சாதனைப் பெண்கள் - "காம்கேர்' புவனேஸ்வரி - வேங்கடகிருஷ்ணன்

20230020150647144.jpg

சாதனைப் பெண்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது பல்வேறு முகங்களுக்கு சொந்தக்காரர் தொழில்நுட்ப வல்லுநர் எழுத்தாளர் தொழில் முனைவர் தன்னார்வலர் சமூக சேவகர் எழுத்தாளர் பயிற்சியாளர் என்று பலமுகம் கொண்ட காம்கேர் புவனேஸ்வரி அவர்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு அதனை பலருக்கும் பயன்படும் வகையில் செய்து பின்னர் பலருக்கும் அதன் மூலம் வேலை வாய்ப்பு அளித்து தான் தெரிந்து கொண்டவற்றை மற்றவர்களும் சுலபமாக புரிந்து கொள்ளும் விதமாக அவற்றை தமிழில் எளிய முறையில் புத்தகங்களாக எழுதி வெளியிட்டவர் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிக்கோளியை அடிப்படையாகக் கொண்டு இது எவ்வாறு அடுத்தவருக்கு உதவும் என்று யோசித்து செயல்படுபவர். இன்றும் தனது பெற்றோருக்கு நல்ல மகளாக இருந்து அவர்கள் கை நீட்டும் பாதையில் சென்று தன் சாதனையை அவர்களுக்கு சமர்ப்பித்து எல்லோரும் பார்த்து பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணமாய் திகழ்பவர்.

20230020150738670.jpg

இப்போது நடந்து கொண்டிருக்கும் 46வது புத்தகக் கண்காட்சியில் ஆனந்த விகடன் அரங்கில் இவரின் புத்தகங்கள் ஒரு செல்ப் முழுவதும் வைக்கப்பட்டிருப்பது பார்ப்பதற்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர தந்தது. அதே கண்காட்சியில் சிறைத்துறை அரங்கில் புத்தக தனமாய் தனது புத்தகங்களை தந்தவர். ஏற்கனவே சாதனைப்பெண்கள் தொடரில் நாம் பார்த்த கிரிஜா ராகவன் தனது 'லேடிஸ் ஸ்பெஷல்' மாத இதழில் இவரைப்பற்றி விவரமாகச் சொல்லி அட்டையில் இவரை இடம்பெறச் செய்து பெருமை சேர்த்திருக்கிறார்.

20230020150833578.jpg

கம்ப்யூட்டரை புரிந்து கொள்ள முயலும் எவரும் இவர் துணை இல்லாமல் செய்ய இயலாது. அது மட்டும் அல்லாமல் தாய்மொழியில் தொழில் நுட்ப புத்தகங்கள் வருவது மிக அரிதாக இருந்த 90களில் அதனை சாதனையாக செய்தவர்.

20230020151018296.jpg

பார்வையற்றவர்கள் பரிட்சை எழுத உதவியாய் ஒரு செயலியை என்றோ கண்டுபிடித்து அவர்களுக்கு உதவியாய் இருந்திட வழி செய்தவர்.

20230020151132467.jpg

வெறும் தொழில்நுட்பத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் மனித நேயம், சுய முன்னேற்றம், பொது வாழ்வு, மன நலம் என பல துறைகளிலும் தனது அனுபவத்தை எழுத்தாக்கி அதனை எல்லோருக்கும் படித்திட தந்தவர்.