தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 015 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20230019084837192.jpg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம்

ஸ்ரீ சுப்புணி அவர்கள்

ஸ்ரீ சிவன் சார் அவர்களை பற்றி சிந்திக்கும் போது நாம் இந்த தீவிர பக்தரை பற்றி நினைக்காமல், பேசாமல் இருக்க முடியாது. சில தினங்களுக்கு முன் திருவெண்காட்டில் அவரை சந்தித்து அவரின் அனுபவத்தின் சிலவற்றை நேரில் கேட்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றேன்.

இந்த காணொளியில் உற்சாகமாக பகிர்வதை போலவே நேரிலும் பகிர்ந்து கொண்டார்.

சிவன் சாறுடன் சுமார் 19 வருடங்கள் கூடவே பயணித்து அவருடனே வாழ்வது என்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்.

அவரின் அனுபவங்களை அவர் மூலமே கேட்கலாம்.

Part - 01