தொடர்கள்
தொடர்கள்
கண்ணதாசன் பாடல்களில் வாழ்வியல் கூறுகள் - 21 - காவிரி மைந்தன்

2022906211040755.jpg

2022906211111256.jpg

ஒருவன் மனது ஒன்பதடா...


ர்மம் தலைகாக்கும் திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளுக்கு இசை அமைத்தவர் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்! டி.எம்.செளந்திரராஜன் குரலில் அமைந்த தத்துவப்பாடல்!
பொதுவாக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களில்தான் கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் பெரும்பாலும் அமைவது உண்டு! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களிலும் அதுபோல் தத்துவப் பாடல்கள் அமைவது அரிது என்றாலும் அப்பாடல்களும் கவிஞரின் வரிகளில் ஞானரதம் காணலாம்!
ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள் இருக்கின்றன! மனதிற்குள் ஏற்படும் போராட்டங்களில்தானே மனஅழுத்தங்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து ஆறுதல் பெறவும், மீட்சி பெறவும் சத்தியமாகச் சொல்கிறேன்.. கண்ணதாசனின் தத்துவப்பாடல்களைவிட இவ்வுலகில் மார்க்கங்கள் இல்லை என்றே!
ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்(2)
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
குடிசையில் வாழும் ஏழை முதல் கோபுரத்தில் வாழும் கோமகன் வரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் மனதிற்கு அமைதி தர.. கண்ணதாசன் பாடல்கள்தான் கைகொடுக்கின்றன என்று ஓங்கி உரைக்கின்றனர். இதற்கான சத்தியசாட்சிகள் நிச்சயம் உண்டு!
தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்(2)
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்
அன்றாடம் நாம் காணும் சராசரி மனிதர்களின் குணநலன்களைப் படம்பிடித்துக் காட்டுகின்ற கவிஞர் அனுபவத்தின்பாற்பட்டுத்தானே அனேக பாடல்களை வடித்திருக்கிறார். இந்தப் பாடலும் அதற்கோர் சாட்சியென்பேன்!
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

ஏறும் போது எரிகின்றான் இறங்கும்போது சிரிக்கின்றான்(2)
வாழும் நேரத்தில் வருகின்றான்
வறுமை வந்தால் பிரிகின்றான்
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னல சேற்றில் விழுகின்றான்(2)
பேய்போல் பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை பழிக்கின்றான்

பயணம் தொடரும் ..