மக்கள் பார்வையில் கம்பர்
பாலகாண்டத்தின் வேள்விப்
படலத்தின் கவிச்சக்கரவர்த்தி பாடல்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில்
மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
இச் செய்தி நிகழ்ந்த வண்ணம் ராமா நீ இந்த உலகில்
பிறந்து தீயவரை அழித்து நல்லவர்களை
பாதுகாத்தல் என்பது ஏற்பட்ட
பிறகு
மேகம் போன்ற இராமனே
வருகின்ற வழியில் வனத்தில்
அஞ்சனம் போன்ற கரிய நிறத்தை
உடைய தாடகையோடு செய்த
போரில் உன் கையின் திறத்தை
பார்த்தேன்
அகலிகை சாப விமோசனத்தில்
உன் திருவடி திறத்தைக் கண்டேன்
மழை வண்ணத்து அண்ணல்
குளிர்ந்த தன்மையுடைவன்
கைம்மாறு கருதாது கருணையை
மழையாகப் பொழிபவன்
என எளிமையாக புரியும்படி
உரைத்தது மிகச்சிறப்பு
மை வண்ணத்து அரக்கி
கொலை வஞ்சனை முதலிய
தீய பண்புகளுக்கு உரைவிடம்
என உவமை நயமாக உரைத்த
கவிக்கம்பரை போற்றுவோம்
பாராட்டுவோம்
மீண்டும் சந்திப்போம்...
Leave a comment
Upload