தொடர்கள்
சினிமா விமரிசனம்
"துணிவு" - சினிமா விமர்சனம் வேங்கடகிருஷ்ணன்

20230013190959792.jpg

துணிவு படம் துவங்கி இடைவேளை வரை எல்லோரையும் சீட்டோடு கட்டிப்போட்டு வைக்கிறது தமிழில் இப்படி ஒரு ஆக்சன் படம், சமீபத்தில் வந்ததில்லை.

20230013190936680.jpg
இந்தப் படத்தின் திரைக்கதையை நம்பி 'தல' துணிந்து இறங்கி அடித்திருக்கிறார். அவருடைய ரசிகர்களையும் தாண்டி மற்றவர்களுக்கும் 'தல'யை பிடித்துப் போகும் படியான திரைக்கதை. கதையைக் கேட்காமல், ஸ்பாய்லர்களை தெரிந்து கொள்ளாமல் போய் படம் பார்க்கிறவர்கள் நிச்சயம் ஒரு ஆக்சன் திரில்லரை அனுபவித்து விட்டு வருவார்கள். ஒரே ஒரு குரூப் சாங்கை தவிர, தமிழ் சினிமாவின் வழக்கமான விஷயங்கள் இல்லை.

படம் துவங்கியதிலிருந்து ஒன்றிபோய் இன்டெர்வல் கார்ட் விழும் போது தான் நாம் நம் உணர்வுக்கே வருகிறோம். அப்படி மிகவும் கிரிப்பாக எழுதப்பட்ட திரைக்கதை, திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் எல்லாமே அருமை.

20230013191246746.jpg
"மணி ஹெய்ஸ்ட்" " ஸ்வார்ட் ஃபிஷ்" படங்களின் காட்சிகள் ஞாபகத்திற்கு வந்தாலும், 'தல'யின் ஆக்சன் நம்மை ரசிக்கச் செய்கிறது. தேவைப்பட்டால் தன்னால் அழகாக ஆடவும் முடியும் என்பதை தல இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார். பல சின்னத்திரை பிரபலங்கள் வந்து போகிறார்கள். பத்திரிக்கை துறையில் சீனியரான மை. பா வின் பெயர். ஒரு கேரக்டருக்கு பெயராகவே வைக்கப்பட்டிருக்கிறது.

20230013191833578.jpeg
மஞ்சு வாரியர் கதாநாயகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அவருடைய பங்கும் சரியாக அமைந்திருக்கிறது. தல கூட டூயட் எல்லாம் கிடையாது. மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் போல காட்சிகள் உண்டு.
பணத்தைப் பற்றிய ஒரு சிறு புரிதலும் வங்கிகளின் நடவடிக்கைகள் குறித்த ஒரு அலசலும் வினோத்தை கரை சேர்த்திருக்கின்றன.

20230014075705665.jpg
'அஜித் சொன்னா அதுல ஏதாவது இருக்கும்' என்று ஒரு பேட்டியில் டைரக்டர் ஹெச்.வினோத் சொல்லியிருப்பார், அது உண்மை தான் போல என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் சிறிதாவது யோசிக்க துவங்கியிருப்பார்கள். இது முழுக்க முழுக்க தல மற்றும் ஹெச். வினோத் படம்.
அங்கங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் சொன்ன விதம் அதனை மறக்கச் செய்கிறது. தலைக்கு டை அடிக்காமல் விக் வைக்காமல் தன்னுடைய நிஜ முடி வைத்துக்கொண்டே நடித்து எல்லோரையும் கவர முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாய் நிரூபித்திருக்கிறார் அஜித்.

20230013191545712.jpg

பின்ணனி இசை என்பது படத்தில் தோட்டாக்கள் சிதறுவதும், தீம் மியூசிக் கும் தான் கேட்கிறது. படத்தில் பாடல்களுக்கு வேலையே இல்லை.

அஜித்தை "தல" என்று 'தீனா' படத்தில் முதலில் அழைத்தது சங்கர் தான். அந்த நன்றியை மறக்காமல்... கான்ஸ்டபிள் அண்டனியாக 'மகாநதி' சங்கர் மனதில் நிற்கும் காட்சிகள் உண்டு.

2023001319102973.jpg

"துணிவு" தல ரசிகர்களுக்கு "தலை " வாழையில் படைத்த சர்க்கரை பொங்கல்.

துணிவு - தூள்!!

தியேட்டருக்கு வெளியே !! தியேட்டருக்கு உள்ளே!!

20230013160802504.jpg 20230013160858755.jpg

(பி.கு: வாரிசு, துணிவு இரண்டுக்கும் மார்க் போடச் சொன்னால் துணிவிற்கு கொஞ்சம் மார்க் அதிகம் போடலாம்)

20230014003032409.jpeg