தொடர்கள்
சினிமா விமரிசனம்
வாரிசு - சினிமா விமர்சனம் வேங்கடகிருஷ்ணன்

20230013133303266.jpg

பொங்கலுக்கு ரிலீசான விஜயின் படம் "வாரிசு". வசனத்தை தவிர எல்லாவற்றிலும் ஆந்திர கார நெடி... பாடல்களில் வரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட தமிழ் முகம் இல்லை.

கதை பெரிய கூட்டுக்குடும்பத்தை பற்றிய சாதாரணமான ஒன்றுதான்(செ.சி.வா ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல!!?) திரைக்கதையில் முன்னரே யூகிக்க கூடிய சில ட்விஸ்ட்களும், ஒன்று, இரண்டு யூகிக்க முடியாத(?!) ட்விஸ்டுகளும் உண்டு.


'இளையதளபதி' யில் இருந்து 'தளபதி'யாய் விஜய் ப்ரொமோட்டாகி இருக்கிறார் (வயதிலும்?!)
நடனக் காட்சிகளிலும் ஆக்சன் காட்சிகளிலும் விஜய், தன்னை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

20230013133539641.jpg

பட்டியல் போட்டு எண்ணும் அளவுக்கு ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. விஜய், சரத்குமார், ஜெய சுதாவை தவிர, மற்றவர்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லை, ராஷ்மிகா மந்தனா, ரஞ்சிதமே!! மற்றபடி அம்மணி வந்து போகிறார் சில காட்சிகளில்.

20230013192653167.jpg
சில ட்ரெண்டான யூடூப் வீடியோக்களின் பாடல்கள் மற்றும் வசனங்களை விஜய் அங்கங்கே உபயோகிக்கிறார். அவர்களும் மனம் குளிர்ந்து படத்தின் பிரமோஷனுக்கு உதவுவார்கள் என்று எண்ணினாரோ என்னமோ??


குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றியும், ஒரு கூட்டு குடும்பம் எவ்வாறு அதன் உறுப்பினர்களுக்கு உதவுகிறது என்பதையும் இடைவேளைக்கு பின்னான காட்சிகள் சொல்லுகின்றன. யோகி பாபு இருந்தாலும் காமெடி காட்சிகளை விஜயே திறமையாக கையாண்டிருக்கிறார்.விஜய் படங்களுக்கே உண்டான 'கிரிஞ்' காட்சிகளும் உண்டு ??!!

20230013192138162.jpg
இதுவரை அம்மா சென்டிமென்ட் காட்சிகளை உருகி நடித்த விஜய், இதில் சிறிது மாறி அப்பா சென்டிமென்ட்க்கு தாவி இருக்கிறார் படம் துவங்கி சிறிது நேரம் வரை விஜய் படம் தானா என்று சந்தேகமே வந்து விட்டது. அந்த இன்ட்ரோ சாங்கை தவிர அடிதடி காட்சிகளோ, பஞ்ச் டயலாக்கோ வரவில்லை.
ஃபேமிலி ஆடியன்ஸையும் மற்றும் வேறு எதையோ குறி வைத்து விஜய் நகர துவங்கி இருக்கிறாரோ?! என்று நமக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது.

தனது முந்தைய மூன்று ஹிட் படங்களின் முக்கியமான வசனத்தை அவர் சொல்லும் விதம் மிகுந்த கைத்தட்டல்களை அள்ளுகிறது.

50 வருடங்களுக்கு முன் எடுத்த மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களில் கூட லாங் ஷார்ட் மற்றும் செட்டில் எடுத்த காட்சியையும் சரியாக மேட்ச் செய்து இருப்பார்கள். ஆனால் நவீன டெக்னாலஜிகள் இப்போது உள்ளன. இந்த படத்தில் விஜய் அறிமுகக் காட்சியில் லாங் சாட் காட்சிகளில் அவரே நடித்திருக்கிறார் க்ளோசப் காட்சிகளை கிரீன் மேட் வைத்து எடுத்திருக்கிறார்கள். இதுபோல் அடிக்கடி வருகிறது, அதுவும் அப்பட்டமாக தெரிவது கண்களை உறுத்துகிறது.

தமன் இசையில் ரஞ்சிதமே தவிர எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை (வரிகள் கேட்கவேயில்லை...சத்தம் அதிகம்) அக்கட பூமி ஆடியன்ஸை மனதில் வைத்து பண்ணினாரோ என்னமோ?.

20230013192254880.jpeg
ஃபேமிலி ஆடியன்ஸ் வரத் துவங்கினால் கலெக்ஷன் அதிகரிக்கக்கூடும். விஜய் ரசிகர்களுக்கு அது சந்தோஷமான செய்தியாக இருக்கும்.

மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தின் சாயல் தூக்கலாக இருந்தாலும், வாரிசு விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை வெற்றி பரிசுதான்.

இது அவர் தேர்ந்தெடுத்த கதையில் மாற்றமா?! இல்லை வேறு மாற்றத்திற்கான துவக்கமா?! என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....

வாரிசு ....விஜய் ரசிகர்களுக்கு என்னவோ பொங்கல் பரிசு தான் !!

20230014003104806.jpeg