மார்கழி மாதம் என்றாலே தமிழகத்தில் எப்போதும் கோலம் தான் நினைவுக்கு வரும். விடியற்காலையில் அதுவும் தரை நடுங்கும் குளிரில் நமது பெண்கள் வீட்டின் முன்பு பசுமாட்டு சாணி கலந்து தெளிந்து அதன்மீது அழுகான அரிசி மாவு கோலங்கள் அல்லது கலர் கோலங்கள் போடுவது என்பது நமது மரபாக இருந்து வருகிறது. சில இடங்களில் மார்கழி மாதம் கோலம் போட்டு முடிந்ததும் கொஞ்சம் பசும் சாணி வைத்து அதன் மீது பூசணி பூ வைக்கும் லாவகம் இன்றளவும் மவுசு குறையாமல் உள்ளது.
கோலம் கணிதத்தின் அடிப்படையில் புள்ளிக்கோலம் , நெளிக்கோலம் , கிழமை கோலம் , சிக்கு கோலம் , கம்பி கோலம் , ரங்கோலி கோலம் என சிறப்பாக இருந்து வருகிறது. வீட்டின் முன்பு காலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு , குருவி போன்ற ஜீவராசிகள் தங்கள் உணவினை காலை நேரத்தில் எளிதாக பெறுகிறது என்பது சிறப்பு.
கோலம் போடுவது என்பது முத்த குடியான தமிழர்களின் வாழ்வியல் உடன் ஒன்றி தொன்று தொட்டு வருகிறது.கோலம் போடும் நபரின் மனதை ஒரு நிலைப்படுத்தி தர்ம சிந்தனையை தருகின்றது என்று பெரியவர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
பெண்கள் தான் கோலத்தில் எக்ஸ்ப்பர்ட் என்று எண்ணி இருந்த நேரத்தில் மார்கழி மாதத்தில் சென்னையில் அதிகாலை வேளையில் ஆண்கள் கூட தனியாக பிரமாண்ட கோலம், ரங்கோலி போட்டு கொண்டிருந்தது கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. இந்த கோலங்கள் சமூக வலைதளங்களில் லேட்டஸ் ட்ரெண்ட் என்பது தான் நிஜம்.
நமது பார்வையில் பட்ட சில கோலங்கள்
Leave a comment
Upload