மயிலாப்பூர் திருவிழாவில் பலரையும் கவரும் விஷயம், கோலப்போட்டி தான். இந்த முறையும் அது மீண்டும் நிரூபணம் ஆனது. எல்லா வயதினரும் கலந்து கொண்ட அற்புத நிகழ்வு அது.
மயிலாப்பூரில் வடக்கு மாட வீதி திருவிழா கோலம் பூண்டது. தெரு முழுதும் சுத்தப்படுத்தப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டது. போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் 2 மனைக்கு பெயர் பதிவு துவங்கியது. 7 வயது சிறுமி முதல் 78 வயது பெண்மணி வரை 134 பேர் பதிவு செய்தார்கள்.
சரியாக மூன்று மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில தங்கள் தளவாடங்களுடன், உதவி செய்ய, உற்சாகப்படுத்த, காபி, டீ வாங்கித்தர நண்பர்கள், உறவினர்களோடு களமிறங்கினர் போட்டியாளர்கள்.
ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறை கலந்துகொண்ட அதிசயமும் நடந்தது பாட்டி, மகள், பேத்தி (அதிலும் இன்னொரு பேத்தி " ஐ டோன்ட் வாண்ட் டு டர்ட்டி மை ஹாண்ட்ஸ், ஐ வில் வாட்ச் " ) மூவரும் ரெடி.
ஒருபக்கம் புள்ளி வைத்து கோலம், அடுத்து கற்பனை கோலம் அடுத்து கலர் கோலம்/ரங்கோலி என மூன்று பிரிவாக நடந்தது.
புள்ளி கோலம் நம்மை பிரமிக்க வைத்தது, எப்படி துவங்கி எப்படி முடிக்கிறார்கள். நடுவுல கொஞ்சம் தல சுத்தாதோ? பாத்த நமக்கே.....
கற்பனையில் பல கோலங்கள் , கபாலி கோயில் கூட அங்கே கம்பிரமாய்...
கலர் கோலங்கள் எல்லாம் தீட்டப்பட்ட ஓவியங்களாய்....
கோலம்போட்டவர்கள் எல்லாம் ரவி வர்மாக்களாய் தெரிந்தார்கள்....
கோலம் போடுவதை பார்க்க வந்த ஃபாரினர்ஸ்...
எல்லாருக்கும் ஓவியமாய் தீட்டப்பட்ட கபாலி கோயில் படம் நினைவுப்பரிசாய்...
நமக்கு அந்த கோலங்களே அடுத்த மயிலை திருவிழா வரை மனதில் நீங்காப் பரிசாய்.....
மாப்ஸின் கைவண்ணத்தில் கோலப் போட்டி வீடியோவாக இங்கே.......
-வேங்கடகிருஷ்ணன்
Leave a comment
Upload