தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

20230012165451362.jpg

உங்கள் கார்ட்டூனை உங்கள் மனைவி எப்போதாவது பாராட்டி இருக்கிறாரா?
என் மனைவிக்கு நான் தான் கார்ட்டூன்!

சினிமா நடிகைகளில் யார் பேரழகி?

20230012164702283.jpg
இப்போது எனக்குப் பிடித்த நடிகை என்று த்ரிஷாவை சொல்லலாம். ஆனால் நடிப்பில் இன்னும் பெயர் வாங்க அவர் முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. மற்றபடி இப்போது கவர்ச்சியான நடிகைகள் தான் இருக்கிறார்கள். பத்மினி, வைஜயந்திமாலா போன்றவர்கள் தான் பேரழகிகள் .அது அந்தக் காலம்!

எம்ஜிஆருக்கு பிறகு சினிமா நடிகர்கள் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அரசியலில் வெற்றி பெறவில்லை. ஏன்?

20230012164858360.jpg

எம்.ஜி.ஆர் unique! மிக மிக அரிதான மனிதர். அந்த அளவுக்கு தமிழ் மக்கள் அவரை நேசித்தார்கள்.அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள். சிவப்பு கலர்.அழகான தோற்றம்! மன்னர் காலமாக இருந்தால் அவர் மன்னர் ஆகி இருப்பார். (அத்தனை குணங்களும் அவருக்கு இருந்தன!!) இன்னொரு எம்ஜிஆர் பிறக்க முடியாது. விகடனில் நான் கார்ட்டூனிஸ்டாக இருந்தபோது,ஆசிரியர் மணியன் ஒரு நிருபர் சந்திப்பின்போது எம்.ஜி.ஆருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். எம்ஜிஆர் என்னை அலட்சியமாக இழுத்து அணைத்துக் கொண்டு, தன் பக்கத்தில் நிற்க வைத்து ,போட்டோ ஒன்றை எடுக்கச் சொல்லி, கூடவே 'ஒரு படத்தை அவருக்கு அனுப்ப வேண்டும்' என்று உத்தரவும் போட்டார். நூற்றுக்கணக்கான போட்டோக்கள் இடையே அந்த போட்டோ மாட்டிக் கொண்டிருக்கிறது.தேட வேண்டும்!
டென்ட் கொட்டாயில் சினிமா பார்த்திருக்கிறீர்களா?

20230012165153953.png

பார்த்திருக்கிறேன். தஞ்சாவூரில் நண்பர்களுடன்! ஜாலியாக மணலில் படுத்து கொண்டெல்லாம் பார்த்தேன்.(அப்போது!) ரொம்ப பெருமையாக இருந்தது. பார்த்த படம் பெரிய இடத்துப் பெண். எம்ஜிஆர் படம்!

சினிமா சூட்டிங் பார்த்த அனுபவம் பற்றி?

20230012165354504.jpg
நிறைய 'அன்பே சிவம்' மற்றும் அவார்ட் வாங்கிய 'காஞ்சிவரம்' படங்களுக்கு வசனம் எழுதியதால் முழு சூட்டிங்கிலும் கூடவே இருந்தேன். கொஞ்ச நேரம் சூட்டிங் பார்த்தால் உங்களுக்கும் பழகிவிடும். அந்த 'திரில்' போய்விடும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய -மெயில் முகவரி: info@vikatakavi.in